Pages

Wednesday, December 31, 2008

புதுவருஷ வாழ்த்துக்களுடன் சிறந்த இசைக்கூட்டணி வாக்கெடுப்பு முடிவுகள்

2008 ஆம் ஆண்டின் விளிம்பில் நின்று கொண்டிருக்கின்றோம். இந்த ஆண்டைப் பொறுத்தவரை எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் சாதனைகளை விடை வேதனைகளையும், சோதனைகளையும் சம்பாதித்த ஆண்டு. உலகெங்கும் ரத்த வெறி பிடித்து அலையும் போர் அரக்கனின் கோரத்தாண்டம் இந்த ஆண்டிலும் தன் ஈடு இணையற்ற கொடுமையைக் காட்டியது. பிறக்கப் போகும் 2009 ஆம் ஆண்டு ஒரு சுபீட்சமான ஆண்டாக அமைய வேண்டும். வீட்டுக்கும், நாட்டுக்கும் நிரந்தர நிம்மதியை ஒரு இனிய இசை கொடுக்கும் திருப்தியை வழங்க வேண்டும் என்று பிரார்த்தித்து என்னோடு கூடப் பயணித்தவர்களுக்கும், பயணிக்க இருப்பவர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்கின்றேன். உங்கள் அனைவருக்காகவும் சிறப்புப் பாடலாக "எல்லோருக்கும் நல்ல காலம் உண்டு நேரம் உண்டு வாழ்விலே" என்ற கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் மறுபடியும் திரைப்பாடலை அர்ப்பணிக்கின்றேன்.

Ellorukkum - Jesudas


கடந்த ஒருவாரமாக றேடியோஸ்பதியின் சிறந்த இசைக்கூட்டணிப் போட்டியை வைத்திருந்தேன். இதன் மூலம் வலைப்பதிவு வாசகர்களின் நாடித்துடிப்பை அறிய 2008 இல் சிறந்த இயக்குனர் - இசையமைப்பாளர் என்று இசைக்கூட்டணியாக அமைந்த ஒரு பட்டியலையும் கொடுத்திருந்தேன்.

இன்றோடு அதன் வாக்கெடுப்பு ஒரு முடிவுக்கு வந்து, இதுவரை கிடைத்த முடிவுகளின் படி வாக்கெடுப்பில் பங்கேற்ற 114 பேரில் 41 பேர் ஹாரிஸ் ஜெயராஜ் - கெளதம் வாசுதேவ மேனன் இணைந்த வாரணம் ஆயிரம் கூட்டணிக்குத் தம் வாக்குகளை அளித்து முதல் இடத்தில் அமையும் இசைக் கூட்டணியாக அமைத்திருக்கின்றார்கள்.

அடுத்ததாக 30 வாக்குகள் அளித்து ஜேம்ஸ் வசந்தன் - சசிகுமார் கூட்டணிக்கு இரண்டாவது இடத்தையும், 9 வாக்குகளைப் பெற்று சரோஜாவில் இணைந்த யுவன் ஷங்கர் ராஜா - வெங்கட் பிரபு கூட்டணிக்கு மூன்றாவது இடத்தையும் அளித்திருக்கின்றார்கள். வாக்கெடுப்பில் பங்கேற்ற அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி நன்றி நன்றி ;-)

முழுமையான வாக்கெடுப்பின் முடிவுகளைக் காண

20 comments:

வாசுகி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் அண்ணா

ஆயில்யன் said...

அருமையான பாடலுடனான பகிர்வுக்கு நன்றி!


இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களுடன்

KARTHIK said...

நாமா ஓடுப்போட்ட கூட்டனி ஜெய்சது சந்தோசமே.

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் தல

தமிழன்-கறுப்பி... said...

இனிய...
புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணன்...!

manjoorraja said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

நான் ஓட்டுப்போட்ட கூட்டணி இரண்டாம் இடத்திற்கு வந்ததில் மகிழ்ச்சி.

geevanathy said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

பழமைபேசி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

புத்தாண்டு வாழ்த்துகள் தேவைதானா இப்பொழுது?

shabi said...

putthandu vazhthukkal/oru pinnoottam onru poda poda venddum pinnani padahar udit narayanan tamilil paduvadharku isai amaippalarhal vaippu vazhanga koodathendru seiveerhala athihama ivarukku vaippu tharubavarha vidyasagar,srikanth deva,yuvan

kuma36 said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

கிடுகுவேலி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். நான் இதில் வாக்களிக்காவிட்டாலும் என்னுடைய வாக்கு கௌதம் வாசுதேவ் மேனன் - ஹரிஷ் ஜெயராஜ் கூட்டனிக்குத்தான். உண்மையில் வாரணம் ஆயிரம் பாடல் மிக அற்புதம். நன்றாக வந்துள்ளது. இங்கு அவர்கள் முதலாவதாக வந்தாலும் அந்த கூட்டனி பிரிந்து விட்டது. ஆனாலும் கௌதம் மீண்டும் சேர மிக ஆவலாக உள்ளார். பார்ப்போம் 2009 எப்படி என்று.

தமிழ் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

ARV Loshan said...

புது வருட வாழ்த்துக்கள்..
நம்ம கூட்டணி வென்றதில் சந்தோசம்.. :)

Anonymous said...

இனிய புதுவருட நல்வாழ்த்துக்கள் அண்ணா .......................

கானா பிரபா said...

வாசுகி, ஆயில்யன், கார்திக், தமிழன் கறுப்பி, மஞ்சூர் ராசா,

மிக்க நன்றி, உங்களுக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள்

கானா பிரபா said...

ஜீவராஜ், பழமைபேசி, ஷபி, கலை-இராகலை, கதியால், திகழ்மிளிர், லோஷன், துஷா

மிக்க நன்றி, உங்களுக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள்

Sinthu said...

நான் வாக்களித்தவர்களே வெற்றி அடைந்திருப்பதால் இன்னும் கொஞ்சம் அதுகமான மகிழ்ச்சி..
சிந்து
பங்களாதேஷ்.

Sinthu said...

இனிய புதுவருட வாழ்த்துக்கள்....

Tech Shankar said...

இனிய புதுவருட நல்வாழ்த்துக்கள்

Tech Shankar said...

I voted for James Vasanthan (Namma Aalunga avar)

கானா பிரபா said...

சிந்து மற்றும் தமிழ்நெஞ்சம்

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள். உங்களுக்கும் இனிய ஆங்கிலப் புதுவருட வாழ்த்துக்கள்.