Pages

Friday, January 2, 2009

பாடல் எடுத்து படம் பெற்ற பாலு ஆனந்த்

கடந்த றேடியோஸ்புதிரில் கேட்கப்பட்ட புதிருக்கான பதிலோடு இந்தப் பதிவு வருகின்றது. ஒரு காலகட்டத்தில் தொடர்ச்சியான வெற்றிப்படங்களைத் தந்த இயக்குனர் ஆர்.சுந்தரராஜன்.

அன்புள்ள ரஜினிகாந்த் போன்ற படங்களைத் தயாரித்த தூயவன் தயாரிப்பில் ஆர்.சுந்தரராஜன் இவர் இயக்கிய "வைதேகி காத்திருந்தாள்" பாடல்களை இசைஞானி இளையராஜா உருவாக்கி அவை ஒலிப்பேழைகளிலும் வந்து வெகு பிரபலம் அடைந்தன. அபோதெல்லாம் வழக்கமாக எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை வைத்து ஒரு பாடலாவது தரும் ராஜா அந்தப் படத்தில் அவரை உபயோகிக்காமலேயே பாடல்கள் அனைத்தும் பேசப்பட்டன. அதில் வரும் "ராசாத்தி உன்னை பாடல்" ஜெயச்சந்திரன் குரலிலும், ராசாவே உன்னை என்ற பாடல் பி.சுசீலாவின் குரலிலும் இருக்கும். மற்றைய பாடல்களோடு ஆண் குரல் பாடலான "ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு" பாடலை மட்டும் இயக்குனர் இயக்கிக் கொடுத்து விட்டு படத்தையும் முடித்து விட்டு அடுத்த படத்திற்குப் பாய்ந்து விட்டார். தயாரிப்பாளரோ "படத்தை பிரிவியூ பார்த்த விநியோகஸ்தர்கள் கேட்கிறார்கள், அந்தப் பெண் குரல் பாடலையும் படமாக்கித் தாருங்களேன்" என்று கேட்கவும் அந்த நேரத்தில் சுந்தரராஜன் மறுத்து விட்டாராம்.

அப்போது ஆர்.சுந்தரராஜனின் உதவி இயக்குனராக இருந்த பாலு ஆனந்த் தயாரிப்பாளரிடம் சென்று, "நான் ஒரே நாளில் அந்தப் பாடலைப் படமாக்கித் தருகின்றேன், எனக்கு அந்த வாய்ப்பைத் தாருங்கள்" என்று கேட்கவும், தயாரிப்பாளரும் வேறு வழியின்றி சம்மதித்து, பணத்தையும் கொடுக்கிறார். பாலு ஆனந்தும் தான் சொன்னது போலவே இதை சவாலாக எடுத்துக் கொண்டு அந்தப் பாடலைப் படமாக்கிக் கொடுக்கிறார். அந்தப் படம் பெரு வெற்றி கண்டது. இதோ அந்த "ராசாவே உன்னை காணாத நெஞ்சு பாடல்" பி.சுசீலா குரலில்.

Rasave unnai - PSuseela

பாலு ஆனந்த் அந்த நெருக்கடி வேளையில் கை கொடுத்ததற்காக அவருக்குக் கிடைத்த பரிசு, அந்த தயாரிப்பாளர் தூயவனின் தயாரிப்பில் அடுத்த படத்தினை இயக்கும் வாய்ப்பு. "நானே ராஜா நானே மந்திரி" என்று விஜயகாந்த், ராதிகா, ஜீவிதா நடிக்க அப்படத்தை இயக்கிய அவர், அதே இளையராஜா இசையமைக்க முன்னர் வைதேகி காத்திருந்தாள் படத்தில் தனித் தனியாகப் பாடிய ஜெயச்சந்திரன், பி.சுசீலா ஜோடி இணைந்து "மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் பாடலைப் பாடி இன்னொரு சூப்பர் ஹிட்டைக் கொடுத்தார்கள். படமும் ஓரளவு ஓடியது. அந்தப் பாடலைக் கேட்க

Mayankinen Solla - P Suseela, Jeyachandran

அதன் பின்னர் பாலு ஆனந்த் "ரசிகன் ஒரு ரசிகை திரைப்படத்தினை சத்யராஜ், அம்பிகா போன்றோர் நடிக்க ரவீந்திரன் இசையில் இயக்கினார். தயாரிப்பாளர் வற்புறுத்தலிலேயே நல்லதொரு கதையில் சத்யராஜின் பாத்திரம் பலவந்தமாக நுளைக்கப்பட்டது என்று இவர் பின்னர் சொல்லியிருக்கிறார். இந்தப் படத்திலும் எல்லாப்பாடல்களும் அருமை. இங்கே கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் "பாடி அழைத்தேன் உன்னை" என்ற பாடலைத் தருகின்றேன்.

Ezhisai Geethame - K.J.Jesudas

மலையாளத்தில் வெளிவந்த மோகன்லால் நடித்த Gaandhinagar 2nd Street என்ற திரைப்படத்தை தமிழில் அண்ணாநகர் முதல் தெரு" என்று சத்யராஜ், ராதா நடிக்க இயக்கினார். சந்திரபோஸ் இசையில் மலர்ந்த இந்தப் படத்தின் பாடல்களும் அருமை. மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு என்ற பாடலை ஏற்கனவே தந்திருப்பதால், இதே படத்தில் வரும் மலேசியா வாசுதேவன், வாணிஜெயராம் பாடும் "ஏ பச்சைக்கிளி இஷ்டப்படி: என்ற இன்னொரு கலக்கல் பாடலைத் தருகின்றேன்.

heypachai.mp3 - MVasudevan, vani

இயக்குனர் பாலு ஆனந்த் பின்னர் வேறு படவாய்ப்புக்கள் இன்றி நீண்டகால ஓய்வெடுத்து மீண்டு வந்து மன்சூர் அலிகான் நடித்த மிக நீளமான தலைப்பு வைத்த படமான "ராராரா...காத்தவராய கிருஷ்ண காமராஜன்" படத்தையும் "சிந்துபாத்" படத்தையும் இயக்கி ஓய்ந்து போனார். பாலுஆனந்த் இயக்கிய எல்லாப் படங்களுமே ஒவ்வொரு இசையமைப்பாளர்களாக அமைந்தது புதுமை.இப்போது இயக்குனர்கள் நகைச்சுவை நடிகர்களாகி வரும் மரபில் பாலு ஆனந்தும் இடம் பிடித்து விட்டார். அவ்வப்போது சின்னச் சின்ன வேடங்களில் படங்களில் தலைகாட்டி வருகின்றார்.

12 comments:

ஆயில்யன் said...

பாடல்கள் அனைத்தும் பிரபலமான பாடல்கள் ஆனால் இயக்கியவரை தான் கண்டுபிடிப்பது கொஞ்சம் கடினமாக இருந்தத்! தற்போது சின்ன சின்ன நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் என்ற செய்தி நிதர்சனத்தை உணர்த்தியது!

ஆயில்யன் said...

//ராசாத்தி உன்னை பாடல்" ஜெயச்சந்திரன் குரலிலும், ராசாவே உன்னை என்ற பாடல் பி.சுசீலாவின் குரலிலும் இருக்கும்//

எங்க தமிழ்பிரியன் தம்பிக்கு ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப் புடிச்ச பாட்டு !

சோறு தண்ணிகூட வேண்டாம்!

இந்த பாட்டை ரீப்பிட் மோடுல போட்டுக்கிட்டு உக்காந்து கேட்டுக்கிட்டே இருக்கும்!

சந்தனமுல்லை said...

ஹ்ம்ம்ம்!!

ஆனா எப்படித்தான் இப்படி செய்திகளை சேகரிக்கறீங்களோ..ஆச்சரியமா இருக்கு..உங்க ரேடியோஸ் பதிவையெல்லாம் படிக்கும் போது!

Sinthu said...

அண்ணா யாவும் எனக்கு பிடித்த பாடல்கள்..
நன்றி
சிந்து
Bangaladesh.

கோபிநாத் said...

\\ஆயில்யன் said...
பாடல்கள் அனைத்தும் பிரபலமான பாடல்கள் ஆனால் இயக்கியவரை தான் கண்டுபிடிப்பது கொஞ்சம் கடினமாக இருந்தத்! தற்போது சின்ன சின்ன நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் என்ற செய்தி நிதர்சனத்தை உணர்த்தியது!
\\

ரீப்பிட்டேய்....(வேற வழி இல்லை தல...பிறகு வருகிறேன்)

முரளிகண்ணன் said...

பிரபு ராதிகா நடிப்பில் வெளியான நினைவு சின்னம் இவர் இயக்கத்தில் வெளியானதுதானே?

வைகாசி மாசத்துல

போன்ற பாடல்கள் இருந்த படம்?

கானா பிரபா said...

முரளிகண்ணன்

நினைவுச்சின்னம் எடுத்தவர் அனுமோகன், கொங்குபாஷை பேசி நகைச்சு வைக்கிறார் இப்போது.

G.Ragavan said...

ஜெயச்சந்திரன் பாடிய ராசாத்தி ஒன்னக் காணாத நெஞ்சு பாடலும் பி.சுசீலா பாடிய ராசாவே ஒன்னக் காணாத நெஞ்சு பாடலும் மிகமிக இனிய பாடல்கள். இளையராஜாவின் மாஸ்டர் பீஸ் என்றுதான் சொல்ல வேண்டும். பெண் பாடும் பாடலை ஏன் இயக்க மறுத்தார் என்று நினைத்துப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது. தொடர் வெற்றி கொடுத்த மிதப்புநிலையாகக் கூட இருக்கலாம். அல்லது அடுத்த படத்தைத் தொடங்கி விட்டதால் இதில் நேரம் செலவழிக்க முடியாமலும் போயிருக்கலாம். வேறு என்ன காரணம் இருந்திருக்க முடியுமென்று தோன்றவில்லை.

அந்தப் பாடலால் பாலு ஆனந்த் அவர்களுக்கு வாய்ப்பு வரவேண்டும் என்றிருந்திருக்கிறது.

அவருடைய இயக்கத்தில் வந்த படங்களில் எல்லாப் பாடல்களுமே நல்ல பாடல்கள்தான்.

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் பாடல் மிகமிக அருமை.

அதே போல ரசிகன் ஒரு ரசிகையில் வரும் பாடியழைத்தேன் (நீங்கள் ஏழிசை கீதமே பாடலை ஏற்றியிருக்கின்றீர்கள்), காற்றினிலே வரும் கீதம் கண்ணனவன் குழல் நாதம் பாடலும் மிக இனிமை. முன்னது ஏசுதாசின் குரலில். பின்னது வாணி ஜெயராம் குரலில்.

அண்ணா நகர் முதல் தெருவில்.. ஏ பச்சக்கிளி பாட்டு கலக்கல். மெதுவா மெதுவா பாடலும் இனிமையானது.

தற்பொழுது இவர் தொலைக்காட்சித் தொடர்களிலும் திரைப்படங்களிலும் நகைச்சுவைப் பாத்திரங்களில் நடித்து வருகிறார். படத்தைப் பார்த்துத்தான் இவர்தானா அவர் என்று தெரிந்து கொண்டேன். நன்றி.

கானா பிரபா said...

//ஆயில்யன் said...
தற்போது சின்ன சின்ன நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் என்ற செய்தி நிதர்சனத்தை உணர்த்தியது!//

வணக்கம் ஆயில்யன்

எல்லா இயக்குனர்களுக்கும் இறுதியில் வரும் சரிவை இவர் சீக்கிரமாகவே சம்பாதித்து விட்டார்.
தமிழ்பிரியன் தம்பி ஊரிலிருந்து வரட்டும், ஸ்பெஷலா போடுறேன்

//சந்தனமுல்லை said...
ஹ்ம்ம்ம்!!

ஆனா எப்படித்தான் இப்படி செய்திகளை சேகரிக்கறீங்களோ..ஆச்சரியமா இருக்கு..உங்க ரேடியோஸ் பதிவையெல்லாம் படிக்கும் போது!//

;-) வேணாம், எல்லாம் கேட்டதை மனசில் பதிஞ்சு வச்சிருப்பது தான் காரணம்.

கானா பிரபா said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சிந்து மற்றும் தல கோபி

கானா பிரபா said...

//G.Ragavan said...
ஜெயச்சந்திரன் பாடிய ராசாத்தி ஒன்னக் காணாத நெஞ்சு பாடலும் பி.சுசீலா பாடிய ராசாவே ஒன்னக் காணாத நெஞ்சு பாடலும் மிகமிக இனிய பாடல்கள்//

கூடவே ஜெயச்சந்திரனுக்கே அதிகபாடல்களைக் கொடுத்து அவரின் ஹிட் லிஸ்டிலும் ஒரு முத்தாரத்தை இட்டுவிட்டார் ராஜா இல்லையா? பாடி அழைத்தேன் பாடலையும் முன்னரே கொடுத்ததால் இம்முறை தவிர்த்து விட்டேன். விரிவான பின்னூட்டலுக்கு நன்றி ராகவன்.

shabi said...

sevvandhi padatthil varum semmeene semmeene padal jayachandren-sunantha kuralil supera irukkum kettup parungal