Pages

Monday, September 8, 2008

எம்.எஸ்.வி - சிவாஜி கூட்டு இசைப்படையல்

கடந்த றேடியோஸ்புதிரில் ஒரு சம்பவத்தைக் கொடுத்து, குறித்த சம்பவம் மூலம் வந்த பாடலைக் கேட்டிருந்தேன். பலர் சரியான பதிலோடு வந்திருந்தார்கள். அந்த சம்பவக் குறிப்பு ராணி மைந்தன் எழுதிய "எம்.எஸ்.வி ஒரு சகாப்தம்" என்ற நூலில் இருந்து பெறப்பட்டதை நன்றியோடு சொல்லிக் கொண்டு அதனை மீண்டும் தருகின்றேன்.

கவிஞர் கண்ணதாசன் ராஜபார்ட் ரங்கதுரை படத்துக்காக "மதனமாளிகையில் மந்திர மாலைகளாம்" என்ற அற்புதமான பாட்டை எழுதிவிட்டார். அவர் எழுதிக் கொடுத்த முதல் அடிகளிலேயே இயக்குனரும், இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனும் மனதைப் பறிகொடுத்தார்கள். கிட்டத்தட்ட எட்டு விதமான மெட்டுக்களைப் போட்டும் திருப்தி வரவில்லை. தான் போட்ட எட்டு டியூன்களையும் ஒவ்வொன்றாகப் பாடிக் கொண்டிருந்தார் எம்.எஸ்.வி. அங்கே அப்போது கவிஞரும் இருந்தார்.

நடுவில் அனைவருக்கும் காபி வந்தது. காபியைக் கொடுத்த பையன் விஸ்வநாதனிடம், "அண்ணே அந்த மூணாவது ட்யூனையும், ஏழாவது ட்யூனையும் மிக்ஸ் பண்ணிப் பாருங்க" என்று இயல்பாகச் சொன்னான். அவன் சொன்னது கவிஞரின் காதிலும் விழுந்தது.
"போடா...டேய்...போடா...இது என்ன காபி மிக்ஸ் பண்ற மாதிரி நினைச்சியா...போ...உன் வேலையைப் பார்" என்று விரட்டினார் கவிஞர்.

அடுத்து விஸ்வநாதன் இன்னொரு ட்யூனை வாசித்தும், பாடியும் காட்டினார். "ஒருமனதாக அந்த ட்யூனை அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள். எம்.எஸ்.வி அமைதியாக அந்த காபி கொண்டு வந்த பையனைப் பார்த்தார். கடைசியாக எம்.எஸ்.வி பாடி அனைவரும் ஏற்றுக் கொண்ட அந்த ட்யூன் காபி பையன் சொன்னது போல் மூன்றாவது ட்யூனையும் ஏழாவது ட்யூனையும் கலந்தது தான். அதுவே பின்னாளில் பாடலாகவும் உருவெடுத்தது.

நான் கொடுத்த உபகுறிப்புக்களில் சொன்ன அந்த நூல் நடிகர் சிவகுமார் எழுதிய "இது ராஜ பாட்டை அல்ல".

தொடர்ந்து எம்.எஸ்.விஸ்வநாதன் தனித்து இசையமைக்க ஆரம்பித்தபோது நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்காக அமைந்த ஜோடிப்பாடல்களோடு மெல்லிசை மனனர்க்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி ஆகியோர் இசையமைத்த கொடி அசைந்ததும் மற்றும் அமைதியான நதியினிலே ஓடம் ஆகிய பாடல்களுடன் முத்துக்கள் பத்தாக வருகின்றன.

1.முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்
படம்: நெஞ்சிருக்கும் வரை, பாடியவர்கள்: T.M.செளந்தரராஜன், P.சுசீலா

2. பொட்டு வைத்த முகமோ கட்டிவைத்த குழலோ?
படம்: சுமதி என் சுந்தரி, பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம், P.சுசீலா

3. பூ மாலையில் ஓர் மல்லிகை
படம்:ஊட்டி வரை உறவு, பாடியவர்கள்: T.M.செளந்தரராஜன், P.சுசீலா

4. அமைதியான நதியினிலே ஓடம்
படம்: ஆண்டவன் கட்டளை,பாடியவர்கள்: T.M.செளந்தரராஜன், P.சுசீலா

5. கொடி அசைந்ததும் காற்று வந்ததா?
படம்: பார்த்தால் பசி தீரும், பாடியவர்கள்: T.M.செளந்தரராஜன், P.சுசீலா

6. மதன மாளிகையில் மந்திர மாலைகளாம்
படம்: ராஜபார்ட் ரங்கதுரை, பாடியவர்கள்: T.M.செளந்தரராஜன், P.சுசீலா

7. நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்
படம்: தங்கப்பதக்கம், பாடியவர்கள்: T.M.செளந்தரராஜன், P.சுசீலா

8. இனியவளே என்று பாடி வந்தேன்
படம்: சிவகாமியின் செல்வன், பாடியவர்கள்: T.M.செளந்தரராஜன், P.சுசீலா

9. நாலு பக்கம் வேடருண்டு
படம்: அண்ணன் ஒரு கோவில், பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம்

10. நினைவாலே சிலை செய்து
படம்: அந்தமான் காதலி, பாடியவர்கள்: K.J.ஜேசுதாஸ், வாணி ஜெயராம்

Sivaji MSV combo

13 comments:

ஜோ/Joe said...

நன்றி!

கானா பிரபா said...

வருகைக்கு நன்றி ஜோ

நெல்லைத் தமிழ் இணைய நிர்வாகிக்கு

மீள் பிரசுரத்துக்கு நன்றிகள்.

Anonymous said...

எனக்கு இந்த கதை தெரியுமே ;)

சந்தனமுல்லை said...

ஓ..இன்ரெஸ்டிங்! ஆனா, இது எல்லாம் எங்க பாட்டிக் காலத்து பாட்டு..

ஆயில்யன் said...

//Thooya said...
எனக்கு இந்த கதை தெரியுமே ;)
//

எனக்கும்தான்!

:))

ஜோ/Joe said...

பிரபா,
மிகுந்த அனுபவமுள்ள ஒரு நடிகர் திலகத்தின் ரசிகர் உங்களிடம் சொல்ல சொன்னது ...

அமைதியான நதியினிலே ஓடம் மற்றும் கொடி அசைந்ததும் காற்று வந்ததா பாடல்கள் மெல்லிசை மன்னர்கள் இசையமைத்தவை. மற்றவை மன்னர் தனித்து இசையமைத்தது.

நன்றி!

thamizhparavai said...

இது அழுகுணி ஆட்டம்.. நீங்க உங்க காலத்துப் பாட்டைப் போட்டுடீங்க...
ஆனாலும் எல்லாப் பாடல்களும் அருமையானவை... இன்னும் கேட்கவில்லை. கேட்டுப்பார்த்து மறுபடியும் வருகிறேன்...
மொத்தப்பத்தில் எனக்குப் பிடித்த ஒற்றை முத்து...'முத்துக்களோ கண்கள்'...

thamizhparavai said...

ஜ்ஜ்ஸ்ட்டு பார் பாலோஅப்புக்கு..

கானா பிரபா said...

//ஜோ / Joe said...
பிரபா,
மிகுந்த அனுபவமுள்ள ஒரு நடிகர் திலகத்தின் ரசிகர் உங்களிடம் சொல்ல சொன்னது //

மிக்க நன்றி ஜோ

எம்.எஸ்.வியின் தேர்ந்தெடுத்த முத்துக்களைத் தான் கொடுக்கவிருந்தேன், தவறைச் சரி செய்கின்றேன். அந்த நண்பருக்கும் என் நன்றியைப் பகிருங்கள்.

கானா பிரபா said...

கானா பிரபா said...
//Thooya said...
எனக்கு இந்த கதை தெரியுமே ;)//


// ஆயில்யன் said...
//Thooya said...
எனக்கு இந்த கதை தெரியுமே ;)
//

எனக்கும்தான்!//

வானொலி கேட்க விட்டா இப்படியா போட்டுக் கொடுக்கிறது ;)

கானா பிரபா said...

//சந்தனமுல்லை said...
ஓ..இன்ரெஸ்டிங்! ஆனா, இது எல்லாம் எங்க பாட்டிக் காலத்து பாட்டு..//

ஆகா வயசைக் குறைக்கிறதுக்கு இப்படி எல்லாம் ஐடியா இருக்கா ;)



//தமிழ்ப்பறவை said...
இது அழுகுணி ஆட்டம்.. நீங்க உங்க காலத்துப் பாட்டைப் போட்டுடீங்க...//

ஆஹா நீங்களுமா ;)

முத்துக்களோ கண்கள் என்னுடைய வாழ்நாள் பாட்டுக்களில் பிடித்தது.

Thillakan said...

"சந்தித்த வேழயில் சிந்திகவேயில்ல தந்துவிட்டேன் என்னை"

இது தான் பிரச்சனை :)

கானா பிரபா said...

// Thillakan said...
"சந்தித்த வேழயில் சிந்திகவேயில்ல தந்துவிட்டேன் என்னை"

இது தான் பிரச்சனை :)//

வாருமப்பு

சிட்னி வந்தால் வாற பிரச்சனை தான் இது ;)