Pages

Friday, September 12, 2008

றேடியோஸ்புதிர் 21- படம் பார் பதில் சொல் (ஓணம் ஸ்பெஷல்)

றேடியோஸ்புதிர் வாயிலாக ஒருமுறை உங்கள் எல்லோருக்கும் ஓணம் பண்டிகை வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு இந்த வார றேடியோஸ்புதிருக்குச் செல்வோம்.

இம்முறை மலையாளப் படங்களின் வீடியோ கிளிப்களை கீழே தந்து அவற்றோடு தொடர்பு பட்ட தமிழ் சினிமா சார்ந்த கேள்விகளைத் தருகின்றேன்.

கேள்வி ஒன்று: கீழே கொடுக்கப்பட்டிருக்கும் மலையாளத் திரைப்படத்தின் இசையமைப்பாளர் எஸ்.பி.வெங்கடேஷ், தமிழில் வேறு ஒரு பெயரில் இசையமைத்திருந்தார். குறிப்பாக வாரிசு நடிகர் ஒருவரின் அப்பா நடிகர் மூலம் தமிழில் ஒரு பிரமாண்டமான படத்திற்கு இசையமைத்து அப்போது பரவலாகப் பேசப்பட்டவர். இசையோடு சம்பந்தப்பட்ட பெயரே இவரின் பெயர். தமிழில் இவரின் பெயர் எதுவாக இருந்தது என்பதே கேள்வி



கேள்வி 2: கீழே இருக்கும் படத்துண்டு உள்ள 80 களில் வந்த மலையாளப்படம் பின்னர் தமிழில் வேறு நடிகர், நடிகைகளை வைத்து எடுக்கப்பட்டது. தமிழில் வந்த படத்தில் நாயகியாக நடித்தவர் பல ஆண்டுகள் தமிழ் சினிமாவில் பேசப்படும் நடிகையாகி விட்டார். நடிகர் தான் அரசியல் கட்சியில் பிசி. தமிழில் வந்த படத்தலைப்பில் இலக்கம் இருக்கும். இதே இலக்கம் பொருந்திய இன்னொரு தமிழ் படத்தை இன்னொரு பிரபல இயக்குனர் இயக்கியிருப்பார்.
இந்த மலையாள ரீமேக் தமிழ் படத்தின் பெயர் என்ன?





கேள்வி 3: கீழே இருக்கும் திரைப்பாடல் வடக்கும் நாதன் என்ற மலையாளத் திரைப்படத்தில் ரவீந்திரன் என்ற பிரபல இசையமைப்பாளரால் இசையமைக்கப்பட்டது. இவரின் மகன் தமிழில் பாடகராக இப்போது வலம்வருகின்றார். விஜய் இறுதியாக நடித்த ஒரு தெலுங்கில் இருந்து வந்த படத்தில் (அழகிய தமிழ் மகன் அல்ல) குத்துப் பாட்டு பாடியிருக்கின்றார். அந்த தமிழ்ப் பாட்டு எது?

31 comments:

முரளிகண்ணன் said...

1. சங்கீதராஜன்
2.வருஷம் 16
3.மாம்பழமாம் மாம்பழம்

முரளிகண்ணன் said...

3. வசந்த முல்லை (ராகுல் நம்பியார்)

சென்ற பின்னூட்டத்தில் தவறாக எழுதிவிட்டேன்

Tech Shankar said...

Happy Onam greetings 2 U

Bee'morgan said...

2. வருஷம் 16 ?? என்ன கரெக்ட்டா..?

கானா பிரபா said...

//Sharepoint the Great said...
Happy Onam greetings 2 U//


உங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள் நண்பா

கானா பிரபா said...

முரளிக்கண்ணன்

முதல் இரண்டு விடைகளும் சரி, ஆனால் கடைசியாகக் கேட்ட விஜய் படப்பாட்டு தப்பு

கானா பிரபா said...

Bee'morgan

உங்களின் இரண்டாவது கேள்விக்கான பதில் சரி.

ஆயில்யன் said...

எனக்கு இந்த வாரம் ஒடம்பு சரியில்ல! :(

நான் லீவு!

நிஜமா நல்லவன் said...

1.சங்கீத ராஜன்

நிஜமா நல்லவன் said...

2.வருஷம் 16

கானா பிரபா said...

// ஆயில்யன் said...
எனக்கு இந்த வாரம் ஒடம்பு சரியில்ல! :(

நான் லீவு!//


கஷாயம் எடுத்துட்டு பதில் சொல்லுங்க சின்னப்பாண்டி

நிஜமா நல்லவன் said...

3.நவீன்

நிஜமா நல்லவன் said...

தல எல்லாத்துக்கும் சரியா சொல்லிட்டேனே:)

Anonymous said...

நிஜமா நல்லவனுக்கு என் பதில்களை சொல்லியிருந்தேன்.உங்க கிட்ட சொன்னாரா?; )

thamizhparavai said...

1.சங்கீதராஜன்..படம்:பூவுக்குள் பூகம்பம்
2.வருஷம்‍ 16..இன்னொரு படம்:16 வயதினிலே(பாரதி ராஜா)
3.ஆடுங்கடா என்னச் சுத்தி...பாடகர்:நவீன் மாதவ்

thamizhparavai said...

ooNam wishes to you prabaa..

Anonymous said...

கேள்வி ரெண்டுக்கு விடை வருஷம் 16

கானா பிரபா said...

// நிஜமா நல்லவன் said...
தல எல்லாத்துக்கும் சரியா சொல்லிட்டேனே:)//

தல

பின்னீட்டீங்

கானா பிரபா said...

//தமிழ்ப்பறவை said...
ooNam wishes to you prabaa..//

உங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள் நண்பா, அனைத்து விடைகளையும் சொன்ன இரண்டாவது ஆள் நீங்க தான்.

நிஜமா நல்லவன் said...

/கானா பிரபா said...

//தமிழ்ப்பறவை said...
ooNam wishes to you prabaa..//

உங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள் நண்பா, அனைத்து விடைகளையும் சொன்ன இரண்டாவது ஆள் நீங்க தான்./

அப்படின்னா எல்லா விடைகளும் சொன்ன முதல் ஆள் நான் தானா?

நிஜமா நல்லவன் said...

/Thooya said...

நிஜமா நல்லவனுக்கு என் பதில்களை சொல்லியிருந்தேன்.உங்க கிட்ட சொன்னாரா?; )/


ஆஹா....என்ன விளையாட்டு இது சகோதரி?:)

அருண்மொழிவர்மன் said...

1. சங்கீதராஜன் (பூவுக்குள் பூகம்பம் படம்... அதில் இடம்பெறும் அன்பே உன் ஆசை ... பாடலின் தீராத அடிமை நான்... சோகம் என்னவென்றால் இரண்டாண்டுகளின் முன் என்னிடமிர்ந்த அந்த பாடல் தொலைந்து போய் விட்டது)

2. வருஷம் 16
3. ஆடுங்கடா என்னை சுற்றி...

வேறென்ன பிரபா.......

கோபிநாத் said...

இப்போதைக்கு ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள் ;)

Anonymous said...

ஹலோ..

1) சங்கீதராஜன் - பிரஷாந்தின் அப்பா தியாகராஜன், பார்வதி நடித்த பூவுக்குள் பூகம்பம் படம்

2) வருஷம் பதினாறு

3) ஆடுங்கடா என்னச் சுத்தி - நவீன் மாதவ் - படம் போக்கிரி

கானா பிரபா said...

அருண்மொழிவர்மன்

ஆஹா கலக்கிவிட்டீங்கள்

கானா பிரபா said...

சந்துரு

வெற்றி உங்களுக்கும் ;)

தங்ஸ் said...

1.சங்கீதராஜன் - பூவுக்குள் பூகம்பம்(தியாகராஜன்)
2.வருசம் 16 (16 வயதினிலே)
3.நவீன்

கானா பிரபா said...

தங்ஸ்

சரியான கணிப்பு, வாழ்த்துக்கள்.

G.Ragavan said...

இனிய ஓனம் நல்வாழ்த்துகள்.

1. சங்கீதராஜன்? ஒரு ஊகந்தான்.

2. வருஷம் 16. இன்னொரு படம் 16 வயதினிலே. இயக்குனர் பாரதிராஜா

3. இதுக்கு வடை தெரியலைங்க. :)

கானா பிரபா said...

// கோபிநாத் said...
இப்போதைக்கு ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள் ;)//

வாழ்த்துக்கள் உங்களுக்கும் தல, பதிலோடு வாங்க ஒரு நாள் அவகாசம் இருக்கு.

வணக்கம் ராகவன்

ஓணம் வாழ்த்துக்கள், உங்க முதல் ரெண்டு விடையும் சரி. மூன்றாவதும் ரொம்ப சுலபம். பாடலை பொங்க வச்சிருப்பார். இன்னொரு முறை சொல்லுங்க (காதலா காதலா பாணியில் ;-)

கானா பிரபா said...

Correct answer is

1.சங்கீதராஜன்..படம்:பூவுக்குள் பூகம்பம்
2.வருஷம்‍ 16..இன்னொரு படம்:16 வயதினிலே(பாரதி ராஜா)
3.ஆடுங்கடா என்னச் சுத்தி...பாடகர்:நவீன் மாதவ்