Pages

Tuesday, September 9, 2008

இசையமைப்பாளர் குன்னக்குடி வைத்தியநாதன்

1935 இல் சிவகங்கை மாவட்டம் குன்னக்குடி என்னும் ஊரில் பிறந்து தனது பன்னிரண்டு வயது முதல் 61 ஆண்டுகளாக வயலின் மேதையாகவும், சிறந்ததொரு இசையமைப்பாளராகவும் திகழ்ந்த குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் கடந்த திங்கட்கிழமை செப்டம்பர் 8, 2008 இல் இவ்வுலகை அகன்று மேலுலகில் இசையாய்க் கலந்தார்.

வயலின் மேதை குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் இசையமைத்த தமிழ்த்திரைப்படங்கள் சிலவற்றின் பாடல்கள் அன்னாருக்குச் சமர்ப்பணமாகின்றன. பக்திச் சுவை சொட்டும் தெய்வீக மணம் கமழும் பாடல்கள் மட்டுமல்ல, மேல் நாட்டு மருமகள் போன்ற சமூகப்படங்களில் வந்த " Love is a flower" போன்ற மேற்கத்தேயப் பாடல்களுக்கும், தோடி ராகம் என்ற படத்தில் வந்து வெகு பிரபலமான "கொட்டாம்பட்டி ரோட்டிலே ஏ ஹே, குட்டி போற சோக்கிலே" போன்ற ஜனரஞ்சகப் படையல்களைத் தன் இசையமைப்பில் வழங்கிய்வர் அமரர் குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள்.


அந்த வகையில் இந்தப் பதிவில் இடம்பெறும் பாடல்கள்.

1. தஞ்சைப் பெரிய கோயில்
திரைப்படம்: ராஜராஜசோழன்
பாடியவர்கள்: சீர்காழி கோவிந்தராஜன், ரி.ஆர்.மகாலிங்கம், எஸ்.வரலஷ்மி

2. Love is a flower
திரைப்படம்: மேல்நாட்டு மருமகள்
பாடியவர்: உஷா உதுப்

3. மருதமலை மாமணியே
திரைப்படம்: தெய்வம்
பாடியவர்: மதுரை சோமு

4. மாலை வண்ண மாலை
திரைப்படம்: திருவருள்
பாடியவர்: பி.சுசீலா

5. திருப்பதி மலை வாழும் வெங்கடேசா
திரைப்படம்: திருமலை தென் குமரி
பாடிவர்: சீர்காழி கோவிந்தராஜன்

6. தலைவா தவப்புதல்வா
திரைப்படம்:அகத்தியர்
பாடியவர்கள்: பி ராதா, எம்.ஆர் விஜயா

7. பால் பொங்கும் பருவம்
திரைப்படம்:மனிதனும் தெய்வமாகலாம்
பாடியவர்கள்: டி.எம்.செளந்தரராஜன், பி.சுசீலா

Kunnakkudi V

15 comments:

அருண்மொழிவர்மன் said...

நேற்று இந்த செய்தி கேள்விப்பட்டதும் உங்களின் பதிவை எதிர்பார்த்தேன். நீங்கள் குறிப்பிட்ட "கொட்டாம்பட்டி ரோட்டில பாடல் அவரே பாடிய பாடல் என்று சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஆயில்யன் said...

இவரின் இசையில் வெளிவந்த அந்த காலத்து தெய்வீக பாடல்கள் இவரின் பெருமையினை காலத்திற்கும் நிலைக்கசெய்து ஒலித்திருக்கும்!

Tech Shankar said...

Thanks Dear Dude..

கானா பிரபா said...

//அருண்மொழிவர்மன் said...
நேற்று இந்த செய்தி கேள்விப்பட்டதும் உங்களின் பதிவை எதிர்பார்த்தேன். நீங்கள் குறிப்பிட்ட "கொட்டாம்பட்டி ரோட்டில பாடல் அவரே பாடிய பாடல் என்று சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.//

வருகைக்கு நன்றி நண்பா

ஒரே பெயரில் ஒரே துறையில் சாதனை படைத்தவர்களில் ஒன்று எல்.வைத்யநாதன், அடுத்து குன்னக்குடி வைத்யநாதன், இந்த இரு மேதைகளுமே இன்று இல்லை என்பது இசையுலகின் பெரும் இழப்பு.

Tech Shankar said...

அன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்

சந்தனமுல்லை said...

எப்போதும் சிரித்த முகத்துடனே தான் பார்த்திருக்கிறேன்..வாசிப்பாரா..இல்லை வயலினாலாயே பேசுகிறாரா என்று ஐயப்பட வைக்கும்!!

ஹேமா said...

திடீரென்று அதிர்வான செய்தி.
எதிர்பார்க்கவில்லை.ஆண்டவனும் சில சமயம் காலக்கெடுவுக்கு முன் தனக்கு விருப்பமானவர்களைத் தன் அருகில் அமர்த்திக் கொள்வானோ என்னவோ! வயலினின் நரம்பு ஒன்று நாதத்தை இழந்து விட்டது.மீண்டும் கிடைக்குமா?இல்லையென்றாலும் எம்மோடு நிலைத்திருக்கும் இசைக்கூடம் அவர்.இறந்தாலும் எம்மோடு வாழும் மனிதர் அவர்.மலர்தூவி கண்ணீர் அஞ்சலி மட்டுமே.நன்றி பிரபா.

G.Ragavan said...

குன்னக்குடி வைத்தியாதனுக்கு தமிழிசையில் தனியிடமுண்டு. அவரது மறைவு ஒரு இழப்புதான். அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் இசையன்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

இந்த நேரத்தில் பொருத்தமான பாடல்களைத் தேர்வு செய்து அவரது மறைவுக்கு அஞ்சலி செய்தமை மிகச் சிறப்பு.

இறைப்பாடல்களாகட்டும் காதற்பாடல்களாகட்டும் குத்துப்பாட்டுகளாகட்டும் அவருக்குள்ள பாணியில் சிறப்பாகச் செய்திருக்கிறார்.

வயலின் இசைமேதையான அவருடைய ஆன்மா அமைதி பெற இறைவனை வேண்டுகிறேன்.

கானா பிரபா said...

//ஆயில்யன் said...
இவரின் இசையில் வெளிவந்த அந்த காலத்து தெய்வீக பாடல்கள் இவரின் பெருமையினை காலத்திற்கும் நிலைக்கசெய்து ஒலித்திருக்கும்!//

வருகைக்கு நன்றி நண்பா

Unknown said...

:(

ஆ.கோகுலன் said...

2004 இல் என்று நினைக்கிறேன்.. அவரது நிகழ்ச்சியொன்றை யாழ்.நல்லூர் முருகன் கோவிலில் கேட்டது இனிய அனுபவம். அவர் வைக்கும் பரந்த குங்குமம்போலவே அவரது இசையறிவும் பரந்தது.. பாடல்களுக்கு நன்றி.

கானா பிரபா said...

//தமிழ்நெஞ்சம் said...
Thanks Dear Dude..


//Sharepoint the Great said...
அன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்//

//

நன்றி நண்பா


//சந்தனமுல்லை said...
எப்போதும் சிரித்த முகத்துடனே தான் பார்த்திருக்கிறேன்..வாசிப்பாரா..இல்லை வயலினாலாயே பேசுகிறாரா என்று ஐயப்பட வைக்கும்!!//

அவருடைய சந்தன, குங்குமக் கீற்றே முகத்தில் ஒரு தேஸஸ்த்தை உண்டு பண்ணி வசீகரிக்கும் இல்லையா.

கானா பிரபா said...

//ஹேமா said...
திடீரென்று அதிர்வான செய்தி.
எதிர்பார்க்கவில்லை.ஆண்டவனும் சில சமயம் காலக்கெடுவுக்கு முன் தனக்கு விருப்பமானவர்களைத் தன் அருகில் அமர்த்திக் கொள்வானோ என்னவோ!//

வணக்கம் ஹேமா

முதுமையிலும் இளமைத்துடிப்போடு வாழ்ந்தவர் என்பதை அவரின் வாத்திய வாசிப்பே காட்டியது, இன்னும் சில வருடமாவது வாழ்ந்து விட்டுப் போயிருக்கலாம் அவர்.


// G.Ragavan said...
இறைப்பாடல்களாகட்டும் காதற்பாடல்களாகட்டும் குத்துப்பாட்டுகளாகட்டும் அவருக்குள்ள பாணியில் சிறப்பாகச் செய்திருக்கிறார்//

வணக்கம் ராகவன்

குன்னக்குடியார் தயாரித்த தோடிராகத்தில் வரும் பாடல்களைத் தேடிக்கொண்டே இருக்கின்றேன், ஒரு நாள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்.

கானா பிரபா said...

வருகைக்கு நன்றி சிறீ

கோகுலன்

நீங்கள் தாயகத்தில் இருந்தபோது அவரின் கச்சேரியைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. நான் அவுஸ்திரேலியாவுக்கு வந்த அதே வருடம் வைத்தியநாதனின் இசை நிகழ்ச்சியும் இருந்தது. அப்போது காண எனக்கு வாய்க்கவில்லை. அது நிறைவேறாக கனவாகியே விட்டது இப்போது.

Anonymous said...

thanks for introducing me kunnakkudi prabha.
great songs.
but there is a problem in downloading those songs.
can u correct it.
if u can iam much thankful to u....