Pages

Tuesday, June 17, 2008

றேடியோஸ்புதிர் 9 - கிண்டலடித்த அந்தப் பாட்டு எது?


கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்னர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், தனது தங்கை எஸ்.பி.சைலஜா, எஸ்.பி.சரண் மற்றும் மல்லிகார்ஜினன், கோபிகா பூர்ணிமா ஆகியோர் சிட்னி வந்து இசை நிகழ்ச்சியொன்றைப் படைத்திருந்தனர். அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் வேலையையும் எஸ்.பி.பி அவர்களே செய்யவேண்டும் என்பதால் சுவாரஸ்யமான பல விடயங்களைச் சொல்லி அந்த நிகழ்ச்சியைக் கொடுத்திருந்தார். அந்த நிகழ்ச்சியில் அவர் சொன்ன ஒரு சம்பவத்தை வைத்து, மேலதிக தகவல்களைச் சேர்த்து இன்றைய றேடியோஸ்புதிரைக் கொடுக்கின்றேன்.

அவர் ஒரு பத்திரிகையாளராக இருந்து பின்னர் ஒரு பிரபல இயக்குனராக இணைந்து சினிமா உலகிற்கு வந்தவர். இவர் இயக்கப் போகும் முதற் படத்தின் தலைப்பே தன் குருநாதரின் படத்தில் வரும் ஒரு பாடலின் முதல் அடியாகும்.

இந்த புது இயக்குனர் படத்தின் நாயகனுக்கு டுயட் பாடலை வைக்க முடியாது, ஆனால் ஒரு பாடலில் புதுமை செய்யவேண்டும் என்று நினைத்துத் தன் ஆசையை குருநாதர் இயக்குனருக்குச் சொல்கின்றார். அதற்கு அவரோ
"பாலுவா இதைப் பாடப்போறான்?, அவனால இந்த ஒடம்பை வச்சு ஒரு எட்டு நடக்கவே முடியாது, மூச்சு வாங்கிடும், இந்தப் பாட்டை எப்படிப் பாடப் போறான்?"
என்று கிண்டலாகச் சொன்னாராம். இதை எஸ்.பி.பாலசுப்ரமணியம் சொல்லி அந்தப் பாடலைப் பாடினார். அந்தப் பாடல் எது என்பதே இன்றைய புதிர்.

24 comments:

thamizhparavai said...

கேளடி கண்மணி படத்தில் வரும் ' மண்ணில் இந்த காதல் இன்றி' பாடல்தானே...

வெங்க்கி said...

படம் : கேளடி கண்மணி
இயக்குனர் : வசந்த்..

சரியா பிரபா ??

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இயக்குனர் வசந்த்
குருநாதர் படத்தின் பாட்டு கேளடி கண்மணி
பாட்டு ஆரம்பம் மண்ணில் இந்த் காதல் அன்றி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரொம்ப ஈஸியா இருக்கறாப்ல இல்ல இந்த் புதிர்?

Anonymous said...

Film - Keladi Kanmani
Song - Mannil indha kadhalanri
Director - Vasanth

- Ramya.

Anonymous said...

மண்ணில் இந்த காதலன்றி

கானா பிரபா said...

சின்ன அம்மணி, ரம்யா, கயல்விழி முத்துலெட்சுமி, கீ-வென், தமிழ்ப்பறவை

உங்கள் அனைவரின் விடையும் சரியானது. ரொம்ப இலகுவான போட்டி போல இருக்கு. பார்க்கலாம் இன்னும் எத்தனை பேர் வருகின்றார்கள் என்று.

Anonymous said...

ஆமா. பிரபு ரொம்ப இலகுவான போட்டி தான். நிறைய குறிப்பு வேற கொடுத்திட்டீங்க.

படம் :'கேளடி கண்மணி'
இயக்குநர் : வசந்த்
பாடல் : மண்ணில் இந்த காதலன்றி

nedun said...

கேளடி கண்மணி படத்தில் வரும் "மண்ணில் இந்த காதல் ....." என தொடங்கும் பாடல் சரியா?

MyFriend said...

பாலாவுக்கு மூச்சு வாங்குமா?

அப்படின்னா கண்டிப்பா அது சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் பாடல்தான்.
அந்த பாடல் எப்படி சக்கஸ் ஆச்சு தெரியுமா? பாடலின் முதல் நாலு வர்ரியை சுஜாதா பாடி ஆரம்பிச்சு வச்சாங்க. அந்த லக்குதான். :-)

Ayyanar Viswanath said...

ஆஹா விடை எனக்கும் தெரிஞ்சிடுச்சி..மண்ணில் இந்த காதலின்றி - கேளடி கண்மணி - வசந்த....எல்லாம் சரியா சொல்லிடுவாங்க பாருங்க :)

கோபிநாத் said...

படம் - கேளடி கண்மணி

இயக்குனர் - வஸந்த்

குருநாதர் - பாலசந்தர்

இசை - ராசா

பாடல் - மண்ணில் இந்த காதல் இன்றி

பாடலாசியர் - கங்கைஅமரன்

;)

கொழுவி said...

கேளடி கண்மணி
மண்ணில் இந்த காதல்..

கேள்வியில் பல இடங்களில் விடை கொட்டிக் கிடக்கிறது..

ஷைலஜா said...

மண்ணில் இந்தக் காதலன்றி பாடல் கானாப்ரபா! விடை சரியா?:)

pudugaithendral said...

மண்ணில் இந்தக் காதலன்றி- படம் கேளடி கண்மணீ.

Anonymous said...

Movie: Keladi Kanmani
Song: Mannil Intha Kadhalindri

ஆயில்யன் said...

கேளடி கண்மணி

கேளடி கண்மணி பாடகன் சங்கதி பாடிய படத்திலிருந்து உருவிய படத்தின் டைட்டில்!

பத்திரிக்கையாளராக இருந்து பட இயக்குநராக ஆனது - வசந்த்

மண்ணில் இந்த காதல் அன்றி யாரும் வாழ்தல் கூடுமோ :))



சரியா :)))

ஆயில்யன் said...

//கானா பிரபா said...
சின்ன அம்மணி, ரம்யா, கயல்விழி முத்துலெட்சுமி, கீ-வென், தமிழ்ப்பறவை

உங்கள் அனைவரின் விடையும் சரியானது.
/

அவங்களெல்லாம் பெரியவங்க அவங்களுக்கு தெரிஞ்சுருக்கும் கண்டிப்பா!

பட்..! என்னைய மாதிரி ரொம்ப சின்ன பசங்களுக்கும், இதுக்கு பதில் தெரியறதுதான் மேட்டரு :))

ஆ.கோகுலன் said...

எனக்கு தெரிந்து மூச்சுவிட சிரமமான பாடல் 'மண்ணில் இந்த காதல்..' என தொடங்கும் பாடல் தான்.
படம்ம்ம்ம்ம்ம....................... ம்... கேளடி கண்மணி.

Anonymous said...

மண்ணில் இந்தக் காதலன்றி ... கேளடி கண்மணி ... இயக்குனர்: வஸந்த் ... குருநாதர்: கே பாலச்சந்தர் ... ஹீரோ / பாடகர்: எஸ் பி பாலசுப்ரமணியம்

கானா பிரபா said...

nedun, வெயிலான், மைபிரண்ட், அய்யனார், தல் கோபி, கொழுவி

கண்டுபிடிச்சிட்டீங்க ;-(

கானா பிரபா said...

ஷைலஜ, புதுகைத் தென்றல், ஞான ராஜா, ஆயில்யன், கோகுலன், என் சொக்கன்

பின்னீட்டீங்க,

இதையெல்லாம் புதிராப் போட்டேனேன்னு இப்ப கவலையா இருக்கு ;-)

U.P.Tharsan said...

Mannil intha kaathal From Keladi kanmani

ithuva athu?????

கானா பிரபா said...

தர்ஷன் சரியான விடை

போட்டியில் பங்கெடுத்த அனைவருக்கும் நன்றி