Sunday, June 22, 2008
றேடியோஸ்புதிர் 10 - இந்தப் பின்னணி இசை வரும் படம் எது?
றேடியோஸ்புதிரின் 10 வது போட்டியில் உங்களை நான் சந்திக்கின்றேன், இப்போட்டி ஒரு பின்னணி இசையுடன் மலர்கின்றது. இந்தப் பின்னணி இசை படத்தின் எழுத்தோட்டத்தோடு வரும் இசையின் ஒரு பாதி. ஆனால் பின்னர் படத்தின் பல காட்சிகளில் மெல்ல இழையோடுகின்றது. இசையமைத்தவர் இசைஞானியே தான். இப்படத்தின் முழுமையான பின்னணி இசையை போட்டி முடிவில் தருகின்றேன்.
இந்தப் புதிரை அவிழ்ப்பதற்கான சில உபகுறிப்புக்களை இங்கே தருகின்றேன். இப்படத் தலைப்பு மிகவும் பழைய படமொன்றின் தலைப்பை ஒத்தது. பழைய படத்தில் அன்றைய இரண்டு பிரபல நடிகர்கள் நடித்திருப்பார்கள். இங்கே நான் தந்த படத்தில் நாயகன் மூன்று வேடங்களில் நடித்திருப்பார். ஆனால் இரண்டு வேடங்கள் தான் படம் முழுதும் அதிகம் ஆக்கிரமிக்கும். இந்தப் படத்தின் வசனகர்த்தாவாக இணைந்தவர் தொடந்து பல படங்களில் இந்த நாயகனுக்காக எழுதியிருக்கிறார். விடையை மட்டும் சரியாகச் சொன்னீர்கள் என்றால் "நீங்க எங்கேயோ போயிட்டீங்க" அப்படி நான் சொல்வேன்.
க்ளூ கொடுத்தும் கண்டுபிடிக்க முடியாதவர்களுக்காக இந்த இசை வரும் காட்சியைப் படமாக இட்டிருக்கின்றேன்.
பின்னணி இசையை கேட்க
அல்லது
Subscribe to:
Post Comments (Atom)
48 comments:
அபூர்வ சகோதரர்கள்
அபூர்வ சகோதரர்கள்!
இசையை கேட்கும் முன்னரே உங்கள் உபகுறிப்புகளிலேயே தெரிந்துவிட்டது!! :P
மூன்று வேடங்கறீங்க அபூர்வ சகோதரர்களோ....
சோகமாவேற இருக்கறமாதிரி இருக்கு குள்ள அப்புக்கு வரதா இருக்கும்ன்னு தோணுது
சிவிஆர், மற்றும் கப்பி பய
பின்னீட்டீங்க ;-)
எக்கச்சக்க க்ளூ இருக்கே
:)))
கயல்விழி முத்துலெட்சுமி
கலக்கீட்டீங்க ;)
அடுத்த முறை பாருங்க கஷ்டம்டா சாமி அப்படி சொல்றது மாதிரி கொடுக்குறேன்.
ஆக்சுவலா இந்த போட்டி ரொம்ப ஈசியா இருக்கறதால நான் அடுத்த போட்டியில மீட் பண்றேன்:)))
பேஸ்ட் பண்ணலையே :)))
ஆயில்ஸ்
நழுவாம பதில் சொல்லணும் ;)
அபூர்வ சகோதரர்கள்..
கானா அண்ணா இன்னும் கஷ்டமா எதிர்பாக்குறோம்.. pls...
same musical bit will come in Chennai 28, but not exactly remember the original version. i think its in Nayagan.
- Nakul
சினேகிதன்
வாழ்த்துக்கள், அதிகம் உபகுறிப்புக்கள் தான் உபத்திரம் போல ;) அடுத்த முறை நிச்சயம் கவனத்தில் எடுத்து மிகவும் கஷ்டமா கொடுக்கிறேன்.
நீங்க தரும் பின்னனி இசைக்கு உபகுறிப்புகளே தேவையே இல்லையோனு தோணுது அண்ணா...
நகுல்
சரியா சொன்னீங்க இதே இசை தான் சென்னை 28 இலும் கிரிக்கெட்டில் வாண்டுகளுடன் தோற்றவுடன் வரும். ஆனா நாயகன் என்பது பிழை, இந்தப் படத்தில் கதாநாயகனுக்கு மூன்று வெவ்வேறு வேடங்கள்.
வணக்கம் சினேகிதன்
உங்களுக்கும் எனக்கும் ராஜாவின் இசை பிடிக்கும் என்பதால் உபகுறிப்பு இல்லாமல் ஓரளவு கண்டுபிடிப்போம் ஆனா பொதுவா எல்லோருக்கும் கஷ்டமா இருக்கும்னு நினைக்கிறேன். அடுத்த முறை உபகுறிப்பில் கை வைக்கிறேன்.
நன்றி அண்ணா!!
//ஆயில்யன் said...
ஆக்சுவலா இந்த போட்டி ரொம்ப ஈசியா இருக்கறதால நான் அடுத்த போட்டியில மீட் பண்றேன்:)))//
அதே..!!! :)))
அபூர்வ சகோதரர்கள், அருமையான் இசை இந்த பின்னனியை மறக்க முடியுமா.
அபூர்வ சகோதரர்கள். நீங்க கீழ கூடுத்த க்ளு தான் உதவிச்சு
அபூர்வ சகோதரர்கள்.
aaang gnayabakam vanthuduchhu apoorva sakothararkal
ippo right-a?
- Nakul
அபூர்வசகோதரர்கள்... எங்கேயோ போயிட்டீங்க க்ளூல தான் எல்லாம் ரிவர்ஸ் ல பிடிக்க முடிஞ்சது..
என்ன ஒரு இசை :) எப்ப கேட்டாலும் நெகிழவைக்கிறது, கேட்கும்போதே கணவர் கமல் கொல்லப்பட, மனைவி ஸ்ரீவித்யா படகில் (பரிசலில்?) கதறும் காட்சி அப்படியே மனதில் விரிகிறது, இந்த சக்தி மிகச் சில பின்னணி இசைக் கோர்ப்புகளுக்குதான் உண்டு.
கமலும் ராஜாவும் நிஜமாகவே ‘அபூர்வ சகோதரர்கள்'தான்! இப்போது அவர்கள் அதிகம் இணைந்து பணியாற்றுவதில்லை என்பதுதான் சோகம் :(
- என் சொக்கன்
தல
படம் - ஆபூர்வ சகோதரர்கள்
கலைஞானியின் படம்..:)
கோகுலன்
உந்தச் சேட்டை எல்லாம் இல்லை, விடையைச் சொல்லீட்டு அதுக்குப் பிறகு ஈசி ஸ்ரேற்மன்ற் விடலாம் ;-)
பனிமலர்
உண்மை தான் மறக்க முடியுமா இந்த இசையை, வாழ்த்துக்கள்
சின்ன அம்மணி
கலக்கல், என்ன செய்வது நம்ம க்ளூவே நம்மை கவுழ்த்திடுச்சு
உதய குமார்
பின்னீட்டீங்க
நகுல்
இந்தவாட்டி சரியாச் சொல்லீட்டீங்க
;-)
வினையூக்கி
தெய்வமே ;-)
என்.சொக்கன்
நீங்கள் சொன்னது மிகச்சரி, அதெல்லாம் ஒரு பொற்காலம் இல்லையா?
தல கோபி
இந்த வாட்டி பரீட்சையில் பாஸாயிட்டீங்க ;-)
மிகத்தயக்கத்துடன் சொல்றேன்.
பாசமலர் பாசமலர்கள் அப்படியா...?
{ப்ச்.. சொல்லாமலே இருந்திருக்கலாம்..!!!!! :) )
கோகுலன்
பாசமலர்கள் என்று பழைய படம் வந்ததா அல்லது பாசமலர்களில் மூன்று வேடங்களில் யாராவது வந்தார்களா? ;-)
கண்டிப்பா இது அபூர்வ சகோதரர்கள்தான். :-))
மைபிரண்ட்
நீங்களுமா? அவ்வ்வ்
படம் : அபூர்வ சகோதரர்கள்
மாயா
சரியான கணிப்பு வாழ்த்துக்கள்
பிரபாவிற்கு...
இப்பட இசையை கேட்க முடியவில்லை. சிஸ்டத்தில் ஸ்பீக்கர் அவுட். எப்படியும் இன்னும் 5 மணிநேரம் இப்போட்டி நீடிக்குமானால் நான் விடை கூற முற்படுகிறேன்.
வாங்க நண்பா
இந்தப் போட்டி நாளை வரை நீடிக்கும் நீங்க சாவகாசமா வரலாம் ;)
அபூர்வ சகோதரர்கள்
என்றும் அன்பகலா
மரவண்டு
நண்பர் மரவண்டு
சரியான கணிப்பு, நன்றி
apuurva sagothargal allathu
agni natchathiram
புதுகைத் தென்றல்,
பதிலைக் கேட்டா நீங்களும் க்ளூ வைக்கிறீங்களே ;)
\\தல கோபி
இந்த வாட்டி பரீட்சையில் பாஸாயிட்டீங்க ;-)\\
தல
அந்த இசைக்கவே அந்த டி.வி.டியை வாங்கியவன் ;))
இதெல்லாம் கடமை தல ;))
அபூர்வ சகோதரர்கள் என்று நினைக்கிறேன் சரியா....
இதுக்கு இத்தனை உப குறிப்புகள்
தேவையில்லை அண்ணன்...
இந்தப்படம்...
(இவவும் பழைய படத்தில முக்கிய பாத்திரத்தில நடிச்சிருப்பா)
பழைய படத்தின் பெயர்..
அன்றய பிரபலங்கள் இரண்டுபேர்..(அவர்கள் இன்றும் முக்கிய பிரபலங்கள்தானே)
நாயகன் மூன்று வேசம்...
வனகர்த்தா..
இசைஞானி...
"நீங்க எங்கயொ போயிட்டிங்க"...
தமிழன்
அடுத்த முறை உபகுறிப்பில் ஆப்பு இருக்கு ;-), வாழ்த்துக்கள்
சென்னை 28க்கு விமர்சனம் எழுதுகையில் இந்தப்பின்னணி இசை குறித்தும் எழுதி இருக்கிறேன். (எனவே, இங்கே லின்க்கும் தரவில்லை, பதிலும் சொல்லமாட்டேன் :-))
ஆனால், பின்னணி இசைக் கோர்வைகூட ஹிட் ஆவது என் தலைவன் மூஜிக் மட்டும்தான்!
வாங்க சுரேஷ்
பலமான பீடிகையோடு நீங்களும் ஒரு க்ளு கொடுத்திட்டீங்க, இனி உங்க சென்னை 28 பதிவைத் தேடி வரப்போறாங்க பாருங்க ;-)
சந்தேகமே இல்லாமல்
படம் 'அபூர்வ சகோதரர்கள்'
எனக்கு இந்த பி.ஜி.எம் கேட்ட மாதிரியே இருந்துகிட்டே இருக்க. 'நாயகனோ' என்று யோசித்து, வாசித்து வருகையில், உதவிய க்ளூ
//இந்தப் படத்தின் வசனகர்த்தாவாக இணைந்தவர் தொடந்து பல படங்களில் இந்த நாயகனுக்காக எழுதியிருக்கிறார்//
வாங்க சதங்கா
வெற்றி உங்களுக்கே, அதிகம் க்ளூ கொடுத்தே வாங்கிக் கட்டிக்கிட்டேன் ;-)
போட்டியில் பங்கெடுத்துச் சரியான பதிலளித்த 17 பதிவர்களுக்கு வாழ்த்துக்களுடன், பங்கெடுய்த்த அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி
Unable to take part in your quiz as it was a weekend.
Post a Comment