Pages

Sunday, April 13, 2008

பாடகர் கமல்ஹாசன்....!

கமல்ஹாசன் என்னும் கலைஞன் தன் நடிப்புத் திறனோடு, ஆடல், பாடல் திறனையும் ஒருங்கே வளர்த்துக் கொண்டவர். முன்னர் ஒருமுறை தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் பாலமுரளிகிருஷ்ணா கூட, கமல் தன்னிடம் சங்கீதம் கற்க வந்ததாகவும், ஒரு சில நாட்களிலேயே அவரின் திறமையைக் கண்டு தான் வியந்ததாகவும் முறையாக இன்னும் பயிற்சி எடுத்திருந்தால் அவரின் பாடும் திறன் இன்னும் உயர்ந்திருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.

குணா பாடல் ஒலிப்பதிவில் கூட இளையராஜா கமலோடு பேசும் போது கமலுக்கு ஹைபிட்சில் பாடும் திறன் இருப்பதைச் சிலாகித்து, சிங்கார வேலனில் "போட்டு வைத்த காதல் திட்டம்" பாடலைப் பாட வாய்ப்புக் கொடுத்ததைக் குறிப்பிட்டிருந்தார்.

எனவே இன்றைய பதிவில் கமல்ஹாசன் பாடிய அருமையான, ஏராளம் பாடல்களில் தேர்ந்தெடுத்த சில முத்துகள் இடம்பெறுகின்றன. அந்த வகையில், அவர் அந்தரங்கம் திரையில் பாடிய "ஞாயிறு ஒளி மழையில்", அவள் அப்படித்தான் திரையில் இருந்து "பன்னீர் புஷ்பங்களே", குணாவில் இருந்து "கண்மணி அன்போடு காதலன்", தொடர்ந்து தேவர் மகனில் "இஞ்சி இடுப்பழகி", நிறைவாக சிகப்பு ரோஜாக்களில் இருந்து "நினைவோ ஒரு பறவை" ஆகிய பாடல்களோடு இடம்பெறுகின்றது இத்தொகுப்பு.


8 comments:

கோபிநாத் said...

சகலகலா வல்லவன் என்று சும்மாவா சொன்னாங்க...

ஒவ்வொரு பாடலும் அருமையான பாடல்கள் தல ;))

தொகுப்பிற்க்கு மிக்க நன்றி தல :)

வடுவூர் குமார் said...

பன்னீர் புஷ்பங்களே பாடலில் அந்த புஸ் புஸ் என்ற மூச்சுக்காற்று கேட்காமல் இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
உங்கள் சுட்டியில் இன்னும் கேட்கவில்லை,வொனொலியில் எப்போதோ கேட்ட ஞாபகம்.
இஞ்சி - பாடலை கேட்ட YG Mahendran அது கமல் குரல் என்று தெரியாமல் ஏதோ புது பாடகர் என்று நினைத்து சிலாகித்து பேசிக்கொண்டிருந்தாராம்.

வந்தியத்தேவன் said...

பிரபா மிகவும் அழகான பாடல்கள். கமலின் அனைத்துப் பாடல்களையும் எங்கே தரவிறக்கம் செய்துகொள்ளமுடியும். உங்கள் குரலும் அழகாக இருக்கின்றது.

கானா பிரபா said...

//கோபிநாத் said...
சகலகலா வல்லவன் என்று சும்மாவா சொன்னாங்க...

ஒவ்வொரு பாடலும் அருமையான பாடல்கள் தல ;))//


தல

நீங்க சொன்னா சரிதான் ;)

கானா பிரபா said...

வணக்கம் குமார்

பன்னீர் புஷ்பங்களே பாடலை விட ஞாயிறு ஒளிமழையில் பாட்டு இன்னும் அருமை,

கானா பிரபா said...

//வந்தியத்தேவன் said...
பிரபா மிகவும் அழகான பாடல்கள். கமலின் அனைத்துப் பாடல்களையும் எங்கே தரவிறக்கம் செய்துகொள்ளமுடியும்.//

வணக்கம் வந்தியத்தேவன்

கமலின் பாடல்கள் என் சொந்த சரக்கு ;-) இணையத்தில் எல்லாப்பாடல்களும் கிடைக்குமா தெரியவில்லை. கமல் பாடிய இன்னும் ஏராளமான பாடல்கள் இருக்கின்றன. பின்னர் தருகின்றேன்.

Unknown said...

எனக்குப் பிடித்த கமல் பாடிய எனக்குப் பிடித்த பாடல்கள் போட்டதற்கு நன்றி.

அதுவும் கடைசி இரண்டு பாடல்கள்...! அவை மட்டும் மீண்டும் கேட்டேன்.

கானா பிரபா said...

பாடல் தொகுப்பைக் கேட்டுத் தாங்கள் அபிப்பிராயத்தைத் தந்தமைக்கு நன்றி நண்பரே