Pages

Thursday, October 25, 2007

றேடியோஸ்புதிர் 2 - ஆறிலிருந்து அறுபது வரை - முகப்பு இசை

எனக்கு ஒரு கெட்ட பழக்கம். இளையராஜா இசையமைத்த பாட்டுக்கள் இணையத்தில் குவிந்து கிடந்தாலும், முறைப்படி சீடி இசைத்தட்டாக, அதுவும் முடிந்தவரை நல்ல ஒலிப்பதிவு கம்பனிகள் தயாரித்த இசைத்தட்டாக வாங்கிப் பத்திரப்படுத்துவது வழக்கம். அந்த வகையில் அண்மையில் எனக்கு ஒரு பொக்கிஷம் கிடைத்தது. இசைஞானி இளையராஜாவின் இசையில் வெளிவந்த ஒரு திரைப்படத்தின் முழுப்பாடல்களும், கூடவே அப்படத்தின் முகப்பு இசையும் இணைந்த ஒரு சீடி இசைத்தட்டு கிடைத்தது.

கடந்த இரு வாரம் முன்னர் நான் ஒரு இசைப்புதிரை இங்கே வழங்கியபோது எதிர்ப்பாராத அளவிற்கு உங்களில் பலரின் பங்களிப்பு கிடைத்தது. அது போல இன்னுமொரு போட்டியை இந்தப் பதிவில் தருகின்றேன். உங்கள் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன. அவை பத்திரப்படுத்தப்பட்டு, சரியான பதிலை அறிவிக்கும் போது விடுவிக்கப்படும்.

சரி, இனிப் போட்டிக்குச் செல்வோம்.
இங்கே நான் தந்திருக்கும் முகப்பு இசை, இளையராஜாவின் இசையில், ஒரு முன்னணி நாயகன் நடிப்பில் வெளிவந்த படமாகும். இந்த இசையைக் கேட்கும் போது ஒருபாடலின் நினைவு தானாக வரும் இசைத்துளி ஒன்றும் இருக்கும். ஒரு க்ளூ தருகின்றேன், படத்தலைப்பில் எண் அதாவது இலக்கமும் இருக்கும்.

இந்த இனிய இசையைக் கேளுங்கள், விடையோடு வாருங்கள்

மேற்கண்ட போட்டியை நேற்று வைத்திருந்தேன். "ஆறிலிருந்து அறுபது வரை" என்று சரியாக டாக்டர் விஜய் வெங்கட்ராமனும், சந்தேகத்துடன் (;-)) ஜி ராகவனும் சொல்லியிருந்தார்கள். இவர்களுக்கு றேடியோஸ்பதியின் வாழ்த்துக்கள். போட்டியில் கலந்து கொண்ட அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி ;-)))

25 comments:

theevu said...

//முறைப்படி சீடி இசைத்தட்டாக, அதுவும் அதுவும் முடிந்தவரை நல்ல ஒலிப்பதிவு கம்பனிகள் தயாரித்த இசைத்தட்டாக வாங்கி //

கெட்ட பழக்கம்

கானா பிரபா said...

தீவண்ணை

இந்தக் கெட்ட பழக்கம் ராஜாவின் இசைக்கு மட்டும் தான் ;-)

அது சரி விடை சொல்லாமல் நழுவி விட்டியள்

Ayyanar Viswanath said...

தல

என் ஆபிசுல ஸ்பீக்கர் அவுட் ..உங்க க்ளூ வச்சி பாக்கும்போது
ம்
ம்ம்ம்
ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

வருசம் 16 ஆஆ

:))

கானா பிரபா said...

தல

க்ளூவை வச்சே கண்டுபிடிக்க நினைச்சா இப்படித்தான் ஆகும்.

வருஷம் 16 இருந்து இன்னும் ஆறு ஏழு வருசத்துக்கு முன் போகவேண்டிய படம்.

Anonymous said...

/*வருஷம் 16 இருந்து இன்னும் ஆறு ஏழு வருசத்துக்கு முன் போகவேண்டிய படம்.*/

varusham10 or varusham9 :-)

கோபிநாத் said...

சாரி தல இந்த வாட்டி நான் பல்பு வாங்க விரும்பல...;))

கானா பிரபா said...

//Anonymous said...
/*வருஷம் 16 இருந்து இன்னும் ஆறு ஏழு வருசத்துக்கு முன் போகவேண்டிய படம்.*/

varusham10 or varusham9 :-)//

அவ்வ்வ் :-((

கானா பிரபா said...

//கோபிநாத் said...
சாரி தல இந்த வாட்டி நான் பல்பு வாங்க விரும்பல...;))//

தல

ரெம்ப தெளிவாத்தான் இருக்கீக ;)

உங்க கூட்டணியில் யாராச்சும் தெரிஞ்சவங்க இருப்பாங்களே?

Ayyanar Viswanath said...

100 வது நாள்
ஜனவரி 1
24 மணி நேரம்

:)

தல இதுலாம் நம்ம கெஸ்ஸிங்க் தான் ..மியூசிக் கேட்டா கண்டிப்பா சொல்லிடுவேன்

Vijay Venkatraman Janarthanan said...

Aarilirundhu arubadhu varai! (From 6 to 60!

வவ்வால் said...

கானா,

எனக்கு மூன்றாம் பிறைல வருகிற பூங்காற்று புதிரானது பாடல் போல தெரியுது! இதே இசையை புன்னகை மன்னனிலும் கேட்டாப்போல இருக்கு!

கானா பிரபா said...

//அய்யனார் said...
100 வது நாள்
ஜனவரி 1
24 மணி நேரம்

:)

தல இதுலாம் நம்ம கெஸ்ஸிங்க் தான் ..மியூசிக் கேட்டா கண்டிப்பா சொல்லிடுவேன்//

தல

இதுக்கு மேல கெஸ் பண்ணாம இருந்தீங்கன்னா உங்க இமேஜை நீங்களே காப்பாதிக்கலாம் ;-)

கானா பிரபா said...

இதுவரை வந்த பதில்களில் விஜய் வெங்கட் ராமன் சரியான பதிலைத் தந்திருக்கின்றார். வாழ்த்துக்கள் விஜய்

உங்கள் பின்னூட்டத்தை நாளை வரை வைத்திருந்து வெளியிடுகின்றேன்.

பதிவர்களே!

தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் ;)

கானா பிரபா said...

//வவ்வால் said...
கானா,

எனக்கு மூன்றாம் பிறைல வருகிற பூங்காற்று புதிரானது பாடல் போல தெரியுது! இதே இசையை புன்னகை மன்னனிலும் கேட்டாப்போல இருக்கு!//

வாங்க நண்பா

நான் சொன்னது போல் இது ஒரு படத்தின் டைட்டில் மியூசிக், நீங்க சொன்ன இரண்டு படங்களும் கிடையாது.

நான் தந்த இசையினை நுணுக்கமாகக் கேட்டால் இதே படத்தில் வந்த பிரபலமான பாட்டில் ஒரு சிறு இசைத்துளி வந்து போகும்.

தொடர்ந்து முயற்சி செய்யுங்க

ramachandranusha(உஷா) said...

நிழல்கள்?

கானா பிரபா said...

உஷாக்கா

தவறு, நிழல்கள் படத்தில் முன்னணி நடிகர்னு ஒருத்தரும் அப்போது நடிக்கவில்லையே. அத்தோடு குறிப்பிட்ட இப்படத்தின் தலைப்பில் இலக்கமும் இருக்கும்.

G.Ragavan said...

ஆறிலிருந்து அறுவது வரைக்குமா? தெரியலைங்க. நீங்களே சொல்லீருங்க.

கானா பிரபா said...

//Vijay Venkatraman J said...
Aarilirundhu arubadhu varai! (From 6 to 60!//

//G.Ragavan said...
ஆறிலிருந்து அறுவது வரைக்குமா? தெரியலைங்க. நீங்களே சொல்லீருங்க.//

டாக்டர் விஜய் வெங்கட் ராமன் மற்றும் ராகவன்

உங்கள் இருவரின் கணிப்பும் சரி.

சரியான விடை ஆறிலிருந்து அறுபது வரை.

இந்த இசையில் நுணுக்கமாக அவதானித்தால் " கண்மணியே காதல் என்பது கற்பனையோ பாடலின் முகப்பில் வரும் இசையின் சிறு துளி பயன்படுத்தப்பட்டு இருக்கும்.

போட்டியில் பங்குபற்றிய அனைவருக்கும்
நன்றி நன்றி நன்றி ;-)))

வவ்வால் said...

கானா,

நீங்க வருஷம் 16க்கு 6 வருஷம் முன்ன வந்த படம் சொன்னிங்களே, இந்த படம் 1978 ல வந்தது. வருஷம் 16 1989 ல வந்த படம் ஆச்சே.

இந்த படமும் எனது சந்தேகப்பட்டியலில் இருந்தது, நீங்க கொடுத்த குளுவோட ஒத்து போகலையேனு விட்டுட்டேன்!

கானா பிரபா said...

வாங்க நண்பா

ஆறு வருஷம்னு சொல்லலியே ஆறேழு வருஷத்துக்கு முந்திய படம்னு தான் சொன்னேன், இருந்தாலும் தப்பு தான் ஏனென்றால் வருஷம் 16 வந்தது 1989 இல் நியாயமா ஒன்பது பத்து வருஷத்துக்கு முந்தியது என்று நான் சொல்லியிருக்கணும். தவறுக்கு வருந்துகிறேன்.

மூலப்பதிவில் நான் தந்த க்ளூவோடு யோசித்திருந்தீங்கன்னா விடை வந்திருக்கும்

இருந்தாலும் இன்னுமொரு வாய்ப்பு கிடைக்காமலா போகும் ;-)

CVR said...

//கோபிநாத் said...

சாரி தல இந்த வாட்டி நான் பல்பு வாங்க விரும்பல...;))
///
கோபிக்கே ரிப்பீட்டேய்!! :-D

நல்ல போஸ்ட்!!!
எங்களை மாதிரி யூத் காலக்கட்டத்தில் படம் இருந்திருந்தால் கண்டு பிடித்திருக்கலாம்!!
இது ஜிரா காலத்து படமாக இருப்பதால் பிடி பட வில்லை!! :-P

வவ்வால் said...

கானா,
//மூலப்பதிவில் நான் தந்த க்ளூவோடு யோசித்திருந்தீங்கன்னா விடை வந்திருக்கும்

இருந்தாலும் இன்னுமொரு வாய்ப்பு கிடைக்காமலா போகும் ;-)//

நமக்கு உங்க அளவுக்கு இசை அறிவெல்லாம் இல்லை, பாட்டு மட்டும் சலிக்காமல் கேட்பேன், அதை வைத்து ஒரு ஆட்டம் ஆடிப்பார்த்தேன், அடுத்த தடவை விட்ற மாட்டோம்ல! :-)

கானா பிரபா said...

சீவிஆர்

நீங்க தானே கடந்த போட்டியில் ஜெயிச்ச ஆட்களில் ஒருவர், நீங்களே பின்வாங்கலாமா?

வவ்வால் சார்

அடுத்த போட்டி நிச்சயம் திரையிசை கிடையாது, கொஞ்சம் புதுமையாக இருக்கும். காத்திருங்கள் ;-)

Anonymous said...

என்னாங்க பதில் போடலாம் பாத்தா அதுக்குள்ள போட்டிய முடிச்சிட்டீங்க. சரி அடுத்த முறை பாத்துக்கறேன்

கானா பிரபா said...

மன்னிக்கணும் சின்ன அம்மணி, அடுத்தமுறை போட்டியின் நேரத்தை நீட்டித்து விடுகின்றேன்.