Pages

Wednesday, October 24, 2007

"அழியாத கோலங்கள்" பாடல் பிறந்த கதை


அழியாத கோலங்கள் திரைப்படம் பலருக்கு இன்னும் ஆட்டோகிராப் நினைவுகளைத் தூண்டும் ஒரு காவியம். இந்தப் படத்தை மனதில் அசைபோடும் போது தானாக வந்து நினைவில் மிதக்கும் பாடல் "நான் என்னும் பொழுது....." என்னும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் கங்கை அமரன் வரிகளில் வந்த பாடல். பாடலுக்கு இசையமைத்தவர் பிரபல இசையமைப்பாளர் சலீல் செளத்ரி அவர்கள். பாலுமகேந்திரா என்றால் இளையராஜா தான் இசை என்பதற்கு விதிவிலக்காக வந்த திரைப்படம் "அழியாத கோலங்கள்".

இந்தப் படத்தில் இடம்பெறும் "நான் என்னும் பொழுது" என்ற பாடலின் மூல வடிவம் பெங்காலி மொழியில் வந்த, லதா மங்கேஷ்கர் பாடி, சலீல் செளத்ரியே இசையமைத்த கஸல் பாடல்களின் தொகுப்பில் ஒரு பாடல் ஆகும். பின்னர் இதே பாடல் "ஆனந்த்" என்ற ஹிந்தித் திரைப்படத்தில் சிறிது மாற்றம் கண்டு லதா மங்கஷ்கரே பாடி வந்திருந்தது. அடுத்து இரண்டு முறை பெண்குரலில் இரு வேறு மொழிகளில் வந்த இந்த மெட்டு "அழியாத கோலங்கள்" திரையில் ஆண்குரலாக எஸ்.பி.பியின் குரலாக ஒலிக்கும் இந்த ஒலிப்பகிர்வில் இம்மூன்று பாடல்களையும் கேட்டு மகிழுங்கள்.
புகைப்படம் உதவி: சலீல் செளத்ரி பிரத்யோகத் தளம்

11 comments:

ramachandranusha(உஷா) said...

ஆஹா, நன்னி, நன்னி..................

SurveySan said...

lovely lovely.

i was thinking this was a Raja song.

வடுவூர் குமார் said...

நான் இளையராஜா என்று நினைத்துக்கொண்டிருந்தேன். பல நல்ல பாடல்கள் உள்ள படம்.

வவ்வால் said...

கானா,
அழியாதக்கோலங்கள் படமும் பாடல்களும் அருமையானவை.சலில் சவ்த்ரி அப்படத்தில் பயன் படுத்திய டூயுன்கள் எல்லாம் ஏற்கனவே மலையாளத்தில் போட்டது என நினைக்கிறேன்.

பின்னர் , ஹிந்தி, பெங்காலிக்கும் அவை போனது.

பூவண்ணம் போல மின்னும்(ஜெயச்சந்திரன், சுசீலா)என்ற பாடல் படத்தின் ஹை லைட் இப்போ கேட்டாலும் நன்றாக இருக்கும்.

கானா பிரபா said...

வாங்க உஷாக்கா, சர்வேசன், மற்றும் வடுவூர்குமார்

நிறையப் பேர் இளையராஜாவின் இசை என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் போல.

குட்டிபிசாசு said...

தோழரே,

வெகுநாட்கள் கழித்து உங்கள் பதிவிற்கு வந்ததும் பெருமகிழ்ச்சி. அரிய சுவையான தகவல்கள். வாழ்த்துக்கள்.

கானா பிரபா said...

//வவ்வால் said...
கானா,
அழியாதக்கோலங்கள் படமும் பாடல்களும் அருமையானவை.சலில் சவ்த்ரி அப்படத்தில் பயன் படுத்திய டூயுன்கள் எல்லாம் ஏற்கனவே மலையாளத்தில் போட்டது என நினைக்கிறேன்.//

வாங்க வவ்வால்

நீங்க சொல்வது சரி, பூவண்ணம் பாடலின் மூலம் கூட மலையாளத்தில் இருக்கு. முன்பு நண்பர் ராகவன் அதைத் தன் இசையரசி பதிவில் இட்டிருந்தார்.

இங்கே தந்த கஸல் பாடல் திரையிசைப் பாடல்களுக்கு முந்தியதாக ஒரு செய்தி உண்டு.

கானா பிரபா said...

//குட்டிபிசாசு said...
தோழரே,

வெகுநாட்கள் கழித்து உங்கள் பதிவிற்கு வந்ததும் பெருமகிழ்ச்சி. அரிய சுவையான தகவல்கள். //

வாங்க நண்பா

நீண்ட நாளைக்குப் பின் உங்களைக் காண்பதில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி, நன்றிகள்

G.Ragavan said...

நல்ல அருமையான பாடல். சலீல் சௌத்ரி என்ற சலீல்தா மிக அருமையான இசையமைப்பாளர். அவருடைய தமிழ்ப் பாடலை எடுத்துக் கொடுத்தமைக்கு நன்றி.

அதுக்கு மேல நான் சொல்ல வேண்டியதெல்லாம் நீங்களே சொல்லீட்டீங்களே.

சலீல்தாவிற்கு இதுவரையில் மற்ற தமிழ்த்திரை இசையமைப்பாளர்களுக்குக் கிடைக்காத ஒரு பெருமை உண்டு. ஆம். சிலப்பதிகாரத்தின் கானல்வரிக்கு இசையமைத்த பெருமைதான் அது. இசையரசியையும் ஏசுதாசையும் பாட வைத்திருக்கிறார். அருமையான பாடல்.
அந்தப் பெருமை மெல்லிசை மன்னருக்கும் கிடைத்திருக்கும். ஆனால் தட்டிப் போய் விட்டது. இறையருட் கலைச்செல்வர் கே.சங்கர் சிலப்பதிகாரத்தை, ராமாயணம் மகாபாரதம் போல தொடராகத் தமிழில் எடுக்க சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தை அணுகினாராம். அதற்கு இசையமைக்க மெல்லிசை மன்னரையும் ஒப்பந்தம் செய்திருந்தார். ஆனால் சென்னைத் தொலைக்காட்சி நிலையம் அந்த ஒப்பந்தத்தை நிராகரித்து விட்டது.

கானா பிரபா said...

வாங்க ராகவன்

நிறைய அரிய தகவல்கள் தந்திருக்கின்றீர்கள், உங்கள் தகவல்களின் படி "திங்கள் மாலை" பாட்டுக்கும் ஒரு நிகழ்ச்சி செய்திருக்கின்றேன், பின்னர் தருகின்றேன். நன்றி

Unknown said...

superb superb.I like very much Azhiyatha kolangal songs.Every time i ll get some thing from that songs.Salildha is a legent.
Thanks a lot.
music director V.S.Udhayaa Chennai