Friday, March 23, 2007
அப்பு, ஆச்சி, ஆன்ரி ஓடியாருங்கோ
சயந்தன், மலைநாடான், கொழுவி, வசந்தன், டி சே, சினேகிதி என்று ஆளாளுக்கு "நாங்கள் பொம்பிளை பார்க்கும் முறை" என்று பதிவு மேல் பதிவு போட்டு ஓய்ந்த இந்த வேளை (மிச்சம் இருக்கிறவை மதி, சின்னக்குட்டி, யோகன் அண்ணை, மழை, செல்லி) நானும் என் பங்கிற்கு ஏதாவது தரலாம் என்று யோசித்தேன். கிடைத்தது கைவசம் வைத்திருந்த ஒலிநாடா ஒன்று.
தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் இங்கிலாந்தின் லூசியம் தமிழ் நண்பர்கள் வெளியிட்ட பூபாளம் ஒலிநாடா.அதில் நகைச்சுவையாக வெளிநாட்டு அவலங்களைச் சொல்லும் பாடல்கள் உள்ளன. இங்கே நான் தருவது, வெளிநாடு சென்று ஊரில் இருக்கும் தன் குடும்பத்துக்காக ஓடாய் உழைக்கும் இளைஞர் கூட்டமும், அவர்களின் வயசுக்கோளாறைக் (?) கண்டும் காணாமல் இருக்கும் பெற்றோரின் பணம் குறித்த சிந்தனையும். இப்பாடல் வரிகளையும் தருகின்றேன். முழுமையான ஈழத்துப் பேச்சு வழக்கில் இப்பாடல் அமைந்திருக்கின்றது. இரண்டு வகையான இசையில் இவை இங்கே தரப்படுகின்றன.
ட்றம்ஸ் ஒலிக்கலவையோடு கேட்க
தபேலா ஒலிக்கலவையோடு கேட்க
எழுத்தில் இந்த அரிய (!) கவியாக்கத்தைக் கேட்க ;-)
அப்பு, ஆச்சி, ஆன்ரி ஓடியாருங்கோ
எனக்கொரு கலியாணம் செய்து தாருங்கோ
காசு பணம் உழைக்கலாம் யோசிக்காதேங்கோ
குடும்பத்துக்கேற்ற பெண்ணைப் பாருங்கோ
பொறு தம்பி பொறு தம்பி இப்பதானே முப்பத்தஞ்சு
அப்பு, ஆச்சி, ஆன்ரி ஓடியாருங்கோ
முருகற்ற மூத்ததுக்கு மொன்றியல்ல பெடியன்
கனகற்ற கடைசிக்கு ரண்டு மூண்டு போய்(boy) பிறண்ட்
மயிலற்ற மகளுக்கு கியூவில பெடியள்
ஒருத்தி கூட மிச்சமில்லை, இங்கு நானும் என்ன செய்ய
பொறு தம்பி பொறு தம்பி இப்பதானே முப்பத்தஞ்சு
அப்பு, ஆச்சி, ஆன்ரி ஓடியாருங்கோ
கந்தற்ற மகளின்ர குறிப்பைக் கொஞ்சம் பாருங்கோ
கொழுந்தற்ற மச்சாளிற்ற கதையை மெல்லப் போடுங்கோ
குருவற்ற கெளரிக்கு வயதென்ன கேளுங்கோ
பிளீஸ்..பிளீஸ்..பிளீஸ்...பிளீஸேதுஞ்செய்யுங்கோ
பொறு தம்பி பொறு தம்பி இப்பதானே முப்பத்தஞ்சு
அப்பு, ஆச்சி, ஆன்ரி ஓடியாருங்கோ
காலமைல வேலை, கஷ்டப்பட்டுச் செய்யிறன்
கண்டறியாப் படிப்பில கனகாலம் போக்கிப் போட்டன்
கறி புளி சமைக்கத் துணையொண்டைத் தேடுறன்
காத்திருந்து காத்திருந்து கோட்டை விட்டுட்டன்
பொறு தம்பி பொறு தம்பி இப்பதானே முப்பத்தஞ்சு
அப்பு, ஆச்சி, ஆன்ரி ஓடியாருங்கோ
கோயில், குளம், டிஸ்கோ குறிவைக்கப் போறன்
கே றேஸ் காறில குட்டி பார்க்கப் போறன்
கறுவலோ வெள்ளையோ கொண்டுவரப் போறன்
கடைசியா உங்களுக்கு எச்சரிக்கை செய்யிறன்
Subscribe to:
Post Comments (Atom)
21 comments:
//அப்பு, ஆச்சி, ஆன்ரி ஓடியாருங்கோ
எனக்கொரு கலியாணம் செய்து தாருங்கோ
காசு பணம் உழைக்கலாம் யோசிக்காதேங்கோ
குடும்பத்துக்கேற்ற பெண்ணைப் பாருங்கோ//
நேரயே சொல்லி போட்டியள்:)) வீட்டுகாரர் ஆரேணும் பதிவை பாக்கிறவையோ??
//
முருகற்ற மூத்ததுக்கு மொன்றியல்ல பெடியன்
கனகற்ற கடைசிக்கு ரண்டு மூனண்டு போய் பிறண்ட்
மயிலற்ற மகளுக்கு கியூவில பெடியள்
ஒருத்தி கூட மிச்சமில்லை, இங்கு நானும் என்ன செய்ய//
பொறுத்தது பொதும் :::
சிட்னியில ஒருத்தரும் இல்லையோ??
PS:: மெல்போனுக்கும் try பண்ணுங்க??
தெரிந்ச ஆக்கள் இருக்கினமெல்லோ!!
=))))))))))))))))
சூப்பர் ...கானபிரபா நன்றிகள்.. இப்பத்தான் முதல் தரமாய் கேட்கிறன்.
ஆச்சி அப்பு கூப்பிடுறியள் சரி... ஏன் ஹி ஹி அன்ரிமாரை கூப்பிடுறியள்.
//Thillakan said...
நேரயே சொல்லி போட்டியள்:)) வீட்டுகாரர் ஆரேணும் பதிவை பாக்கிறவையோ??//
திலகன்,
எனக்கு உந்தக் கவலையே இல்லை ;-)
என்ன சொல்லாமல் சொல்லுற மாதிரிகிடக்கு...:))
//எனக்கு உந்தக் கவலையே இல்லை ;-)//
உந்த சமாளிப்பும் நல்லா தான் இருக்கு...
(உந்த பாட்ட முந்தியும் ஒருக்கா கேட்ட ஞாபகம்)
//சின்னக்குட்டி said...
சூப்பர் ...கானபிரபா நன்றிகள்.. இப்பத்தான் முதல் தரமாய் கேட்கிறன்.//
சின்னக்குட்டியர்,
உங்கட ஊரில இருந்த இளசுகள் தான் பாடினது.
// வி. ஜெ. சந்திரன் said...
//எனக்கு உந்தக் கவலையே இல்லை ;-)//
உந்த சமாளிப்பும் நல்லா தான் இருக்கு...//
சொன்னாக் கேட்கிறியள் இல்லை, சரி பரவாயில்லை
மிகவும் ரசித்தேன்...:)))
இந்தப் பாட்டை ஊரில நிறையத்தடவை கேட்டிருக்கிறன்.
இங்கே தந்ததுக்கு நன்றி.
சந்திரனும் திலகனும் அநியாயத்துக்கு அப்பாவியளா இருக்கினமே!
ஆகா, அருமை! இப்பதான் முதலாகக் கேட்கிறன். சரியான சிரிப்புத்தான்!
பாவம் இந்தப் பெடியன் பாக்கிற வயசில படிச்சு போட்டு, நல்ல பெட்டையளை கோட்டை விட்டிட்டு, கடைசீல போடுற எச்சரிக்கை பெரும் பொல்லாப்பாக் கிடக்கு.
ஆனா இப்பத்தைய பெண்கள்
"இரண்டு மூண்டு வயசுகூடியதா
வெள்ளையும் கொஞ்சம் உயரமா
அம்மாவின்ர விருப்பப்படி
செவ்வாய் தோசமேதுமில்லாம
என்ர படிப்புக்கும் பொருத்தமா
எங்கையேனுமிருந்தா பாருங்கோ"
எண்டல்லோ கேட்கினம். என்ன செய்யப் போகினம் பெடிப் பிள்ளையள்.?
பகிர்ந்தமைக்கு நன்றி, பிரபா
கானா பிரபா,
இதுவரை கேட்டிராத பாடல். பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.
பகிடியான பாடல் போல் தெரிந்தாலும்,இப் பாடலில் சொல்லப்பட்டுள்ள பல கருத்துக்கள் எமது சமூகத்தில் சில இளைஞர்கள் சந்திக்கும் சில அவலங்களைச் சித்தரிக்கிறது. நான் அறியக் கூடியதாக எத்தனையோ இளைஞர்கள் தமது குடும்பங்களுக்காக தமது இளமைச் சுகங்களைத் தொலைத்து இரண்டு, மூன்று வேலைகள் செய்வதும் உண்டு.
haha enaku intha paadu theriume....itha vachu inga oru remix seithavai.
appuram indaiku nanum kuralpathviu podanan :-)
//செந்தழல் ரவி said...
மிகவும் ரசித்தேன்...:)))//
உங்களுக்குக் கட்டாயம் பிடிக்கும் ரவி ;-)
//வசந்தன்(Vasanthan) said...
இந்தப் பாட்டை ஊரில நிறையத்தடவை கேட்டிருக்கிறன்.//
வசந்தன்
இப்பாடலை நீங்கள் தாயகத்தில கேட்டது அதிசயமான தகவல். ஏனெனில் நான் நினைத்தேன் இது புலத்தில் தான் எடுபடக்கூடிய பாடல் என்று.
// செல்லி said...
பாவம் இந்தப் பெடியன் பாக்கிற வயசில படிச்சு போட்டு, நல்ல பெட்டையளை கோட்டை விட்டிட்டு, கடைசீல போடுற எச்சரிக்கை பெரும் பொல்லாப்பாக் கிடக்கு.//
என்ன செய்யிறது செல்லி, ஆண்கள் காலாகாலமாக வஞ்சிக்கப்படுகிறார்கள் :-(
பிரபா!
முதல் தடவையாக அறிகிறேன். ஆனால் உண்மை!
ஆசை;வயது;வாலிபம் யாவும் தொலைத்த ஆண்கள் பலர்.
சிந்திக்க வேண்டியது. பெற்றோரே!
//சிந்திக்க வேண்டியது. பெற்றோரே!//
சிந்திக்க வேண்டியதும் விரைந்து முடிவெடுக்க வேண்டியதும் இளைஞர்களும் இளைஞிகளுமே தவிர பெற்றோர்கள் அல்ல என்பதை கூறிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.
//வெற்றி said...
கானா பிரபா,
இப் பாடலில் சொல்லப்பட்டுள்ள பல கருத்துக்கள் எமது சமூகத்தில் சில இளைஞர்கள் சந்திக்கும் சில அவலங்களைச் சித்தரிக்கிறது.//
வெற்றி
நீங்கள் கூறுவது உண்மை, பல இளைஞர்கள் தடம் மாறிப்போனதற்கு அவர்களின் பெற்றோர்களின் பாராமுகமும் முக்கிய காரணம்
//சினேகிதி said...
haha enaku intha paadu theriume....itha vachu inga oru remix seithavai.//
சினேகிதி
இது இளைஞர்களின் அவலம் குறித்த பாடல். இது எப்படி உங்களுக்குப் பிடித்திருக்கும் ;-)
//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
பிரபா!
முதல் தடவையாக அறிகிறேன். ஆனால் உண்மை!
ஆசை;வயது;வாலிபம் யாவும் தொலைத்த ஆண்கள் பலர்.
சிந்திக்க வேண்டியது. பெற்றோரே!//
யோகன் அண்ணா சீரியசா எடுத்திட்டியள் ;-)
ஆனாலும் உண்மைதான் இது நகைச்சுவையாக இருந்தாலும் மறுபக்கத்தில் ஒரு அவலமும் இருக்கிறது.
//சயந்தன் said...
சிந்திக்க வேண்டியதும் விரைந்து முடிவெடுக்க வேண்டியதும் இளைஞர்களும் இளைஞிகளுமே தவிர பெற்றோர்கள் அல்ல என்பதை கூறிக் கொள்ள ஆசைப்படுகிறேன். //
சயந்தன்
இப்படியான அபலைகளுக்கு ஒரு சங்கம் நாம் அமைக்கவேண்டும். வாழாவெட்டி வாலிபர் சங்கம் என்ற பெயரை நான் முன்மொழிகிறேன்.
//மிச்சம் இருக்கிறவை மதி, சின்னக்குட்டி, யோகன் அண்ணை, மழை, செல்லி//
என்ன அண்ணை, என்னையெல்லாம் இந்த ஆட்டத்தில சேக்க மாட்டியளோ??
:))
பாட்டு நல்லாயிருக்கு...
\\சினேகிதி
இது இளைஞர்களின் அவலம் குறித்த பாடல். இது எப்படி உங்களுக்குப் பிடித்திருக்கும் ;-)
\\
எனக்கு விருப்பம் என்று சொல்லல பிரபாண்ணா...கனதரம் கேட்டிருக்கிறன் என்று சொன்னான்.ஒரு 6 மாசம் நானும் வானொலி அறிவிப்பாளராகவிருந்தேன் அந்த நேரம் "நீங்களுமொரு இயக்குனர்" என்ற நிகழ்ச்சியென நினைக்கிறன்.. ஒரு அண்ணா வந்து ஒரு கதை சொல்லி உந்தப்பாட்டைப்போடச்சொல்லி கேட்டார் பிறகு உந்தப்பாட்டு பேமஸாகி நிறை அண்ணாமார் விரும்பிக்கேப்பினம்.
படியாதவன்
சரி உங்களையும் சேர்த்துத் தான் ;-)
சினேகிதி
மேலதிக தகவலுக்கு நன்றிகள்.
அண்ணா பாட்டு நல்லாயிருக்கு.
இப்படியான பாட்டுகளை அடிக்கடி பகிர வேண்டும்.
//சந்திரனும் திலகனும் அநியாயத்துக்கு அப்பாவியளா இருக்கினமே!//
வசந்தன் அண்ணே என்ன செய்யிறது !!
நீங்க சொன்ன சரி :)
இப்ப தான் உலாத்தலில் பாத்தன்.
திலகன்
விளங்கினாச் சரி ;-)
Post a Comment