மூன்றாம் பிறை படத்தில் இடம்பெற்ற பின்னணி இசைக்கோர்ப்பு ஒன்றை அப்பட இயக்குனர் பாலுமகேந்திரா, தனது ஓளங்கள் மலையாளப்படத்தின் பாடல் வடிவமாக்கித் தருமாறு இசையமைப்பாளர் இளையராஜாவைக் கேட்கவும் அவர் அப்படியே மலையாளப்பாடலாக்கிக் கொடுத்திருந்தார். பின்னர் அதே மெட்டு பாலுமகேந்திராவின் "நிரீக்சனா" என்ற தெலுங்குப் படப்பாடலாகவும், ஓட்டோ ராஜா தமிழ்த் திரைப்படத்தின் காதல் ஜோடிப் பாடலாகவும் தாவியதை விபரிக்கின்றது இவ் ஒலித்தொகுப்பு.
ஒரு மெட்டு மூன்று பாட்டு |
23 comments:
பிரபா!
இந்தப் பாடல் ஏனைய மொழிகளிலும் உள்ளதென்பது எனக்குப் புதியசெய்தி; அன்றைய இலங்கை வானொலி அடிக்கடி ஒலிபரப்பிய பாடல்;படத்தை ஆவலுடன் எதிர் பார்த்தும் வெளிவரவில்லை.
ஏன் ? பாடல் ஒலிப்பதிவு கூடக் கிடைக்கவில்லை; தமிழ் புரிவதால் புலமைப்பித்தனின் சொல்விளையாட்டை அன்றே ரசித்தேன். இப்பாடலுக்கு இளையராஜா குரல் மிகப் பொருத்தமென்பது என் அபிப்பிராயம்.
இளையராஜாவின் வைரத்தில் ஒன்று;என்னைப் பொருத்தமட்டில்.
super பாட்டு,
உங்கள் குரல் பகுதியின் ஒலித்தரம் பாட்டின் பகுதியை விட நல்ல இருக்கு.
(பாட்டு ஒரு பக்க காதுக்கதான் கேட்குது)
என்னுடைய கணினியில் நீங்கள் என்ன எழுதியுள்ளீர்கள் என்றே படிக்கமுடியவில்லை.
இது எனக்கு மட்டும் உள்ள பிரச்சனையா என்று தெரியவில்லை.
பார்க்கவும்.
ஆதாவது பின்புல கலரும் எழுத்து கலரும் சரியாக அமையவில்லை.
நன்றாக இருக்கிறது, பிரபா. ஆனால், ஒரு விடயம் நினைவுக்கு வருகிறது. தமிழில் இந்தப் பாடலைக் கொண்டு வந்தது, அந்தக் காலத்து காப்பி மன்னர்கள் சங்கர்-கணேஷ்! ஒருவேளை காப்பியடித்ததைச் சமாளிக்கத்தான் இளையராஜாவைப் பாட வைத்தனரோ என்னவோ?
வைசா
நல்ல பாடல் பிரபா. ஓலங்கள் திரைப்படத்தில்தான் இந்த மெட்டி பாட்டாக முதலில் வந்தது. ஆனால் அந்தப் பாட்டிலும் தெலுங்குப் பாட்டிலும் ஜானகியின் குரல் சற்றுக் கடினமாக இருந்தது. ஆனால் தமிழில் இளையராஜாவின் குரல் மிகப் பொருத்தம். அத்தோடு வரும் ஜானகியின் சந்தங்களும் மிகப் பொருத்தம்.
புலமைப்பித்தம் மிகச் சிறந்த கவிஞர். ஆனால் அவர்.....ம்ம்ம்...சரி. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதி.
இன்னொரு தகவல். இதே போலத் தேர் கொண்டு சென்றவன் என்ற தமிழ்ப்பாடல் (பி.சுசீலா பாடியது. எனக்குள் ஒருவன் படத்திற்காக) மலையாளத்திலும் உண்டு. நீலக்கருங்குழல் என்று தொடங்கும் என்று நினைக்கிறேன். ஏசுதாசின் குரலில்.
//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
அன்றைய இலங்கை வானொலி அடிக்கடி ஒலிபரப்பிய பாடல்//
வணக்கம் யோகன் அண்ணா
படமும் பின்னர் வந்தது, விஜயகாந்த் நடித்தது. உண்மை தான் அருமையான பாடல், இலங்கை வானொலியில் வந்து என் சிறு பிராயத்தில் சன்னமாக ஒலித்த பாடல்.
//Thillakan said...
super பாட்டு,
உங்கள் குரல் பகுதியின் ஒலித்தரம் பாட்டின் பகுதியை விட நல்ல இருக்கு.//
வணக்கம் திலகன்
நல்ல ஒலித்தரம் கொண்ட பாடல் கிடைக்கவில்லை, இப்படியான நல்ல பாடல்கள் இந்த ஒலித்தரத்தில் தான் கிடைக்கின்றன.
//வடுவூர் குமார் said...
என்னுடைய கணினியில் நீங்கள் என்ன எழுதியுள்ளீர்கள் என்றே படிக்கமுடியவில்லை.//
ரவியும் சொல்லியிருந்தார், எழுத்துருவின் நிறத்தை மாற்றுகின்றேன். நன்றி
//வைசா said...
நன்றாக இருக்கிறது, பிரபா. ஆனால், ஒரு விடயம் நினைவுக்கு வருகிறது. தமிழில் இந்தப் பாடலைக் கொண்டு வந்தது, அந்தக் காலத்து காப்பி மன்னர்கள் சங்கர்-கணேஷ்!//
வணக்கம் வைசா
இதே படத்தில் வரும் மலரே என்னென்ன கோபம் பாடல் கூட சங்கர் கணேஷ் கன்னடத்தில் இருந்து சுட்டதாம்;-)
இளையராஜா பாடும் "சங்கத்தில்" பாடலை மட்டும் ராஜா இசையமைத்துக் கொடுத்ததாகவும் ஒரு தகவல்.
// G.Ragavan said...
ஆனால் அந்தப் பாட்டிலும் தெலுங்குப் பாட்டிலும் ஜானகியின் குரல் சற்றுக் கடினமாக இருந்தது. ஆனால் தமிழில் இளையராஜாவின் குரல் மிகப் பொருத்தம்.//
உண்மை தான் ராகவன், ராஜா, ஜானகி ஜோடிப்பாட்டுதான் இந்த மெட்டுக்கு அழகு சேர்க்குது. உண்மையில் இந்த மெட்டு மேலும் நிரீக்சனாவின் மொழிமாற்றமான யாத்ரா மலையாளப்படம், கண்ணே கலைமானே தமிழ்ப்படம் ஆகிய மேலும் இரண்டு படங்களுக்கும் பயன்பட்டது, ஆனால் எனக்கு பாடல்கள் கிடைக்கவில்லை.மொத்தத்தில் ஒரு மெட்டு அஞ்சு பாட்டு ;-)
தேர்கொண்டு வந்தவன் இன்னும் என்னைக் கிறங்கடிக்கும் பாடல், ராஜா ராஜாவாக இருந்த காலத்தில் வந்தது.
//ஓலங்கள் திரைப்படத்தில்தான் இந்த மெட்டி பாட்டாக முதலில் வந்தது. ஆனால் அந்தப் பாட்டிலும் தெலுங்குப் பாட்டிலும் ஜானகியின் குரல் சற்றுக் கடினமாக இருந்தது.//
வாங்க ராகவன் வாங்க...ஜானகியின் குரலை குறை சொல்ல வாய்ப்புக்காக காத்திருந்தது போல் இருக்கிறது. மலையாளிகளின் தேசிய கீதம் ஜானகி பாடிய 'தும்பி வா' பாடல். தேன் ஆற்றில் குளித்தது போன்ற ஒரு உணர்வு இந்த பாடலை கேட்ட பின்பு தோன்றும். இந்த தேன் குரலில் எது கடினமாக இருந்ததோ? அதை கொஞ்சம் விளக்குங்கள்.ஜோடி பாடலை விட 'தும்பி வா' பாடலே இனிமையானது.
நன்றி
// sreesharan said...
//ஓலங்கள் திரைப்படத்தில்தான் இந்த மெட்டி பாட்டாக முதலில் வந்தது. ஆனால் அந்தப் பாட்டிலும் தெலுங்குப் பாட்டிலும் ஜானகியின் குரல் சற்றுக் கடினமாக இருந்தது.//
வாங்க ராகவன் வாங்க...ஜானகியின் குரலை குறை சொல்ல வாய்ப்புக்காக காத்திருந்தது போல் இருக்கிறது. மலையாளிகளின் தேசிய கீதம் ஜானகி பாடிய 'தும்பி வா' பாடல். தேன் ஆற்றில் குளித்தது போன்ற ஒரு உணர்வு இந்த பாடலை கேட்ட பின்பு தோன்றும். இந்த தேன் குரலில் எது கடினமாக இருந்ததோ? அதை கொஞ்சம் விளக்குங்கள்.ஜோடி பாடலை விட 'தும்பி வா' பாடலே இனிமையானது.
நன்றி //
வாங்க ஸ்ரீசரண். அப்படியில்லை நண்பரே. குறிப்பாக தமிழ் வெர்சனில் ஜானகியின் குரல் சாகசம் மிக அபாரம். அத்தனை சங்கதிகளும் தேன். அதே போல மெட்டி ஒலி பாட்டு கேட்டிருக்கின்றீர்களா? அதில் இளையராஜா பாடுவார். ஆனால் ஜானகி அரசாள்வார். வெறும் சந்தங்களை வைத்தே அவர் மாயாஜாலம் செய்திருப்பார். அந்த வகையில் இந்தப் பாட்டைத் தமிழில் கேட்டு விட்டு இந்தப் பாட்டை இன்று மலையாளத்தில் கேட்ட பொழுது ஏதோ ஒரு குறை. ஒருவேளை தரமான ஒலிப்பதில் பிரபாவிற்குப் பாடல்கள் கிடைக்காமல் போயிருக்கலாம். அதனால் கூட ஜானகியின் குரல் வேறுமாதிரி தோன்றியிருக்கலாம். மற்றபடி ஜானகி ஒரு திறமையான பாடகி என்பதில் மறுகருத்து கிடையாது. மலையாளத்திலும் தெலுங்கிலும் இந்தப்பதிவின் வழியாகத்தான் நான் பாடலைக் கேட்டேன். ஆனால் தமிழ்ப்பாட்டு...நன்றாக உள்வாங்கியிருப்பது. அதனால் கூட அந்த வேறுபாடு தோன்றியிருக்கலாம்.
வணக்கம் ஸ்ரீசரண் மற்றும் ராகவன்
என்னைப் பொறுத்தவரை தமிழ்ப்பாடல் அதிகம் ஈர்க்கக்காரணம், இயல்பாக மெதுவாக வந்து கலக்கும் ராஜா மற்றும் ஜானகியின் கூட்டணி. மலையாளத்திலும் தெலுங்கிலும் ஜானகி தனி ஆவர்த்தனமாக வேகமாகப் பாடிக்கொண்டே போவது போன்ற பிரமை. மற்றப்படி கேரளநாட்டு சின்னத்திரை இப்போதும் இப்பாடலுக்குச் சிவப்புக்கம்பளம் தான் போடுகின்றது என்பது மறுப்பதற்கில்லை. இதே மெட்டு கடந்த சில மாதங்களுக்கு முன் நகைக்கடை விளம்பரமொன்றுக்கு நடிகை சினேகா தோன்ற வந்ததையும் பார்த்திருப்பீர்கள்.
கானா
முன்பு சுந்தரி என்ற பேரில் பின்னூட்டகள் போட்டனான்.கறுத்தக் கொழுந்தைப் பாருங்கோ தெரியும்.
எப்படி,சுகமா?
இது புதுசா தொடங்கினீங்களா?
நல்லாயிருக்குது.
நான் இப்பதான் blooger தொடங்கின்னான். ஆனால் இன்னும் ஒண்டும் எழுதத் தொடங்கேலை.நேரம் இருக்கேக்கை பாப்பம் எண்டிருக்கிறன்.
சுந்தரி
கானா பிரபா said...
சுந்தரி
எப்பிடி சுகம், உங்களை மறக்கமுடியுமே? எங்க கனகாலம் சிலமனில்லை?
இந்த வலைப்பதிவில் என் இசையாசைகளைக் கொட்டித்தீர்க்கப்போகின்றேன், கேட்டே ஆகவேண்டியது உங்கள் பொறுப்பு ;-)
புளக்கர் பதிவதில்/ தமிழ்மணத்தில் இணைப்பதில் ஏதாவது சிரமம் இருந்தால் பின்வரும் மின்னஞ்சலுக்கு மடல் போடுங்கோ
kanapraba@gmail.com
மலையாளப் படத்தின் பெயர் ஒலங்களா ஓளங்களா
ஓ(ள)ங்கள் என்றே நினைக்கிறேன்..
நல்ல இசை.
பலமுறை கேட்டிருக்கிறேன். இது பின்னணி இசையிலிருந்து வந்தது என்பது புதிய தகவல்.
நன்றி. கலக்குறீங்க பிரபா.
வணக்கம் சிறில் அலெக்ஸ்
ஓளங்கள் தான் சரியென்று நானும் நினைக்கிறேன், ஆரம்பத்தில் அப்படி எழுதிவிட்டு ஏதோ ஒரு சந்தேகத்தில் மாற்றிவிட்டேன். ஓளங்கள் என்பதற்கு அர்த்தம் என்ன என்பதை மலையாளம் தெரிந்த நண்பர் யாராவது சொன்னால் நல்லது. தங்கள் வருகைக்கு மிக்க நன்றிகள் ;-)
// கானா பிரபா said...
வணக்கம் வைசா
இதே படத்தில் வரும் மலரே என்னென்ன கோபம் பாடல் கூட சங்கர் கணேஷ் கன்னடத்தில் இருந்து சுட்டதாம்;-)
இளையராஜா பாடும் "சங்கத்தில்" பாடலை மட்டும் ராஜா இசையமைத்துக் கொடுத்ததாகவும் ஒரு தகவல். //
தவறான தகவல் பிரபா. ஆட்டோராஜாவிலேயே இன்னொரு படம் உண்டு. அதற்குத்தான் சங்கர்-கணேஷ் இசை. இந்த விஜயகாந்த் ஆட்டோராஜாவிற்கு இளையராஜாதான் இசை. மலரே என்னென்ன கோபம்..கன்னடத்தில் அவர் பயன்படுத்தியதுதான்.
சங்கர்-கணேஷின் ஆட்டோராஜாவில் ஒரு இனிமையான பாலு-ஜானகி இணைப்பாடல் உண்டு. "சந்தனப் புன்னகை சிந்திடும் மல்லிகை மந்திர முல்லைகள் தானோ..தேன் மழை பொழியும்...இதழ்களில் வழியும்...விடிந்ததும் காய்ந்துவிடும்" என்ற பாடல் அது.
தெளிவுபடுத்தியமைக்கு மிக்க நன்றிகள் ராகவன்
ஒரு மெட்டு மூன்று பாட்டு போட்டாலும் போட்டேன், நிறையப் புதுத் தகவல்கள் வருகின்றன ;-) இப்போ ஆட்டோ ராஜா என்று இரண்டு படம் ஒரே தலைப்பில் நிக்குது.
நல்ல தகவல் பாடல்.... சுவாரசியமான பதிவுகள்...
கெட்டோம், ரசித்தோம்....
மிக்க நன்றிகள் வி.ஜெ
மலையாளப் பாட்டுல, ஜானகி கொஞ்சம் ஸ்பீடா பாடின மாதிரி இருக்கு.
நல்ல பதிவு. ஸ்வாரஸ்யமான விஷயங்கள்.
ஆட்டோ, ஏன் ஓட்டோ ஆச்சு? கேரளாவின் தாக்கமா, இல்லை இலங்கையிலும் அப்படித்தானா?
ஆ ~ ஓ காரணம் தெரியுமா? :)
உதிரிப்பூக்கள் படத்திலுருக்கும் பாடல்களை கலந்து ஒரு பதிவு போட்டா நல்லா இருக்கும்.
வணக்கம் சர்வேசா
மலையாளப் பாட்டில் வேகமிருப்பது எனக்கும் உறுத்தியது.
நம்மூரிலும் ஆ என்பது ஓ ஆகிவிடும் ;-) அதாவது ஆட்டோவை ஓட்டோ என்றுதான் சொல்லுவார்கள்.
உதிரிப்பூக்கள் பாடலைக் குறித்த பதிவும் தர எண்ணம் இருக்கிறது. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.
Mr.Ragav
santhana punnagai song
film is not Auto Raja
that film is Nadodi Raja
starring Rajiv, aruna
Post a Comment