இன்று காலை வேலைக்குப் போகும் ரயில் பயணத்தில் விஜய் சூப்பர் சிங்கரில் அரங்கேறிய இந்தப் பாடலைக் கண் வெட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.
https://youtu.be/Wm3t3y1Iezc?si=LFBuCOaGECoF8wj4
ஒரு பாடலோடு தன்னை எவ்வளவு ஆழமாகத் தொடர்புபடுத்த முடியும் என்பதை போட்டியாளர் ஜீவிதாவின் கண்கள் மெய்ப்பித்தன.
ஏதோ ஒரு பெரும் வரம் பெற்றது போல ஆசையாக இதைக் கொடுக்கிறார் பாருங்கள்.
மனோ - மின்மினி அலைவரிசையில் முத்திரைப் பாடல் இது.
கேட்கும் போது இப்படியெல்லாம் அற்புதமான வாய்ப்புத் தந்த ராஜா மீது எப்படி அவதூறை வாரி இறைக்க முடிந்தது என்ற வருத்தமும் எழுந்தது.
முதற்கோணல் முற்றும் கோணல் என்பது போல,
நகரத்து இளைஞன் போல முகபாவம் கொண்ட அர்விந்த்சாமிக்குப் பதில்
கார்த்திக் அல்லது பிரபு நடித்திருந்தாலோ
அல்லது
ஒட்டுப் போட்ட பொம்மை போல சுகன்யாவுக்கு ஒரு கெட் அப் ஐப் போட்டதுக்குப் பதில் குஷ்புவைப் போட்டிருந்தால் வெள்ளிவிழாப் படமாக அமைந்திருக்கும்.ஒரேயொரு ஆறுதல் அந்த சின்னக் குஷ்பு தான் 😄
தாலாட்டு வெளிவந்த காலத்திலேயே இதை இயக்கியது ஒளிப்பதிவாளர் விஜயலட்சுமி ஆகத்தான் இருக்க வேண்டுமென்ற குழப்பம் எனக்கு இருந்தது.
சாய் வித் சித்ராவில் தான் உதவியாக இயக்க வேண்டியிருந்ததைச் சொல்லி இருக்கிறார்
தாலாட்டு படத்தின் அனைத்துப் பாடல்களையும் புலவர் புலமைப்பித்தனை வைத்து எழுத வைத்திருக்கிறார் ராஜா.
கொழந்தை பாடுறேன்
https://youtu.be/sfiO5e5TJMU?si=fjb03GtUJu9ppPwe
மலேசியா வாசுதேவனின் 90கள் பட்டியலில் கண்டிப்பாக இருக்க வேண்டியது.
எனக்கென ஒருவரும் இல்லாமல் போனாலும்
https://www.youtube.com/watch?v=scBnduzWaHA
ஒத்தடம் போடும்.
இளையராஜா வெறும் இசையமைப்பாளர் என்பதைத் தாண்டி ஆகச் சிறந்த கலை இயக்குநர், அதை விடவும் ஒரு அற்புதமான நடன இயக்குநருக்கான தாளக்கட்டை உருவாக்க வல்லோன் என்பதை “மெதுவா தந்தியடிச்சானே”
https://youtu.be/_8Wdqg2eSmI?si=9ThNrj3J2SO1Lkpj
இல் உணரலாம்.
அந்த முன்னிசையில் ஒரு கொலுசு நடையை நோகாமல் நடக்க விட்டு, தபேலா குலுக்கலைக் காட்டுவதில் இருந்து பெருக்கெடுத்துப் பாயும் துள்ளல் இசையனுபவம் ❤️
கானா பிரபா
0 comments:
Post a Comment