பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் பிறந்த தினமான (47) இன்று என் நினைவில் மிதந்த அவர்களின் பாடல்களில் ஒன்று இது.
இசைஞானி இளையராஜாவின் இசையில் “கஸ்தூரி மான்” திரைக்காக நா.முத்துக்குமாரால் எழுதப்பட்டது இந்தப் பாட்டு.
17 ஆண்டுகளை எட்டிய தன் திரையிசைப் பாட்டுப் பயணத்தில் கடைசி ஒரு தசாப்தம் அவரை இன்னும் ஆழமாக நேசித்தது அடுத்த தலைமுறை. நா.முத்துக்குமார் இன்மையிலும் தம் இருப்பாகவே அந்த ரசிக உள்ளங்கள் தம்முள் அவரை வைத்திருக்கிறார்கள்.
தொண்ணூறுகளுக்குப் பின்னான திரையிசை இயக்கத்தில் ஏறக்குறைய அனைத்து இசையமைப்பாளர்களுக்குமே எழுதிய பெருமை பெற்றவர் இன்னொன்றையும் தனதாக்கி வைத்திருக்கின்றார்.
“நித்தம் நித்தம் வானொலியில்
நேயர் விருப்பம் கேட்பேன்
உன் பேரை எழுதிப் போட்டு
சொல்லும் வரைக்கும் கேட்பேன்”
என்ற வரிகளைக் கடக்கும் போது, இளையராஜாவின் மூத்த இசை வாரிசு கார்த்திக் ராஜாவின் இசையில் “ஆல்பம்” படத்துக்காக நா.முத்துக்குமார் வரிகள் சமைத்த
காதல் வானொலி
சேதி சொல்லுதே
மோக மூட்டங்கள்
மனதை தொடுமா
மனதை
தொடுமா தொடுமா
மனதை தொடுமா......
https://www.youtube.com/watch?v=ogXmH7GWDIs
இசைஞானி இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா என்று இசைக்குடும்பத்தில் இருப்பவர்கள் மூவரோடும் இயங்கிய இன்னொருவர் என்ற பெருமையோடும் பயணித்திருக்கிறார்.
மேகத்துக்கு மேல..பறந்திடப் போறேன்
மழைத் துளி போல குதிச்சிடப் போறேன்
பால் நிலவ தேன் நிலவா கொண்டு வந்து
நெஞ்சில் வெச்சிருக்கேன்
அட நேத்து வரைக்கும் முழிச்சு முழிச்சு
காத்து மழைய தாங்கி
வந்திருக்கேன் வந்திருக்கேன்
https://www.youtube.com/watch?v=3gf4Q2jsjTk
பாடல்களால் நிறைந்திருக்கும் பாடலாசிரியர் நா.முத்துக்குமாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
0 comments:
Post a Comment