Pages

Saturday, June 4, 2016

முன்னணிப் பாடகர் S.P.பாலசுப்ரமணியமும் 50 இசையமைப்பாளர்களும்

இன்று தனது 70 வது பிறந்த தினத்தைக் கொண்டாடும் திரையிசைச் சிகரம் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கான சிறப்புப் பகிர்வு இது.
 திரையிசைப் பாடகராகப் பொன் விழா ஆண்டைத் தொட்ட பாடும் நிலா பாலுவுக்கான பகிர்வாகவே இதனை முதலில் கொடுக்க இருந்தேன். ஆனால் காலம் தள்ளிப் போய் இன்று தான் இந்தத் திருப்பணியைச் செய்து முடிக்க வாய்த்தது 😄

இந்திய மொழிகளில் எல்லாம் பாடிப் புகழ் பூத்த எஸ்.பி.பி அவர்கள் தமிழ்த் திரையிசையில் மட்டும் இணைந்து பணியாற்றிய ஐம்பது இசையமைப்பாளர்களைத் தொகுக்க எண்ணி, ஒவ்வொரு இசையமைப்பாளரின் இசையிலும் இவர் பாடிய முத்துகளைக் காலையில் இருந்து பட்டியலிட ஆரம்பித்தேன். எழுதிக் கொண்டிருக்கும் போதே எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் அளவுக்கு முன்னும் ஏன் எதிர்காலத்திலும் கூட இம்மட்டு இசையமைப்பாளர்களிடம் பாடும் வாய்ப்பு யாருக்கும் கிட்டியதா/கிட்டுமா என்பது ஐயமே என்ற பிரமிப்பும் ஏற்பட்டது.
இங்கே நான் கொடுத்த இசையமைப்பாளர்களைத் தாண்டி இன்னும் பல இசையமைப்பாளர்களிடம் பல்வேறு மொழிகளில் இவர் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ என் தொகுப்பில் ஒரு அவசரப் பிறந்த நாள் பொதி எங்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு.


1. ராகங்கள் பதினாறு - தில்லு முல்லு - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் 
2. பூந்தேனில் கலந்து - ஏணிப் படிகள் - கே.வி.மகாதேவன்
3. சம்சாரம் என்பது வீணை - மயங்குகிறாள் ஒரு மாது - விஜய பாஸ்கர்
4. நந்தா என் நிலா - நந்தா என் நிலா - வி. தெட்சணாமூர்த்தி
5. தேன் சிந்துதே வானம் (எஸ்.ஜானகி) - பொண்ணுக்குத் தங்க மனசு - ஜி.கே.வெங்கடேஷ்
6. வாழ்வில் செளபாக்கியம் வந்தது (பி.சுசீலா) - தூண்டில் மீன் - வி.குமார்
7. அவள் ஒரு மேனகை - நட்சத்திரம் - சங்கர் & கணேஷ்
8. சங்கீத மேகம் - உதயகீதம் - இளையராஜா
9. நீல வான ஓடையில் - வாழ்வே மாயம் - கங்கை அமரன்
10. நீலக்குயில்கள் ரெண்டு - விடுதலை - சந்திரபோஸ்
11. வண்ணம் கொண்ட வெண்ணிலவே - சிகரம் - எஸ்.பி.பாலசுப்ரமணியம்
12. செம்பட்டுப் பூவே - புருஷ லட்சணம் - தேவா
13. தங்கத் தாமரை மலரே - மின்சாரக் கனவு - ஏ.ஆர்.ரகுமான்
14. மலரே மெளனமா (எஸ்.ஜானகி) - கர்ணா - வித்யாசாகர்
15. சல சல என ஓடும் (சித்ரா) - பொண்ணு பார்க்கப் போறேன் - பாக்யராஜ்
16. உன்னைப் பார்த்த பின்பு தான் - காதல் மன்னன் - பரத்வாஜ்
17. புத்தம் புது மலரே - அமராவதி - பாலபாரதி
18. வா வா எந்தன் நிலவே - சேரன் பாண்டியன் - செளந்தர்யன்
19. ஒரு பெண் மானை நான் பாட - மைதிலி என்னைக் காதலி - டி.ராஜேந்தர்
20. முன் பனியா - நந்தா - யுவன் ஷங்கர் ராஜா
21. கவிதைகள் சொல்லவா (சுஜாதா) - கார்த்திக் ராஜா - உள்ளம் கொள்ளை போகுதே
22. பார்த்த பார்வையில் - கெளரி மனோகரி - இனியவன்
23. கவிதைகள் - உயிரே உனக்காக - லஷ்மிகாந்த் & பியாரிலால் 
24. வாழும் வரை போராடு - பாடும் வானம்பாடி - பப்பி லகரி
25.  கண்ணுக்குள் நூறு நிலவா (சித்ரா & குழு) - வேதம் புதிது - தேவேந்திரன்
26. எந்தப் பெண்ணிலும் இல்லாத - கேப்டன் மகள் - அம்சலேகா
27. மாமாவே - தர்ம தேவதை - ரவீந்திரன்
28. சின்னச் சின்ன மேகம் - காற்றுக்கென்ன வேலி - சிவாஜி ராஜா
29. ஆகாயம் ஏனடி அழுகின்றது (எஸ்.ஜானகி) - ஒரு இனிய உதயம் - மனோஜ் கியான்
30. சாதி மல்லிப் பூச்சரமே - அழகன் - மரகதமணி
31. ஐய்யய்யோ நெஞ்சு (எஸ்.பி.பி.சரண், பிர்சாந்தினி)
  - ஆடுகளம் - ஜி.வி.பிரகாஷ்குமார் 
32. ஓ பொன்மாங்குயில் - மனசுக்குள் மத்தாப்பு - எஸ்.ஏ.ராஜ்குமார்
33. அன்பே ஒரு ஆசை கீதம் - பூவுக்குள் பூகம்பம் - சங்கீதராஜன் 
34. காதல் இல்லாதது (சித்ரா)  - மணி ரத்னம் - சிற்பி
35. உடலும் இந்த உயிரும் (சித்ரா) - நாளைய தீர்ப்பு - மணி மேகலை
36. உச்சி மீது - ஏழாவது மனிதன் - எல்.வைத்யநாதன்
37. ஆவாரம் பூவூ (பி.சுசீலா) - அச்சமில்லை அச்சமில்லை - வி.எஸ்.நரசிம்மன்
38. நதியா நதியா - பூ மழை பொழியுது - ஆர்.டி.பர்மன்
39. மழை தருமோ என் மேகம் (எஸ்.பி.சைலஜா) - மனிதரில் இத்தனை நிறங்களா - ஷியாம்
40. எங்கே போனாய் - ஜீவா - இம்மான்
41. மாலை வேளை (எஸ்.பி.சைலஜா) - சாமந்திப் பூ - மலேசியா வாசுதேவன்
42. சந்திரனே சூரியனே - அமரன் - ஆதித்யன்
43. யம்மா யம்மா - ஏழாம் அறிவு - ஹாரிஸ் ஜெயராஜ்
44. உடையோடு பிறக்கவில்லை ( சித்ரா) - நம்மவர் - மகேஷ்
45. நாடோடிப் பாட்டு பாட - ஹரிச்சந்திரா - ஆனந்த்
46. நான் என்னும் பொழுது - அழியாத கோலங்கள் - சலீல் செளத்ரி
47. சந்தோஷம் சந்தோஷம் - யுத் - மணி ஷர்மா
48. சங்கமத்தின் சங்கமே ராகமே - நாளைய மனிதன் - பிரேமி ஶ்ரீனி
49. காதல் போதை - முடிசூடா மன்னன் - சத்யம்
50. எங்கிருந்தோ வந்தான் - எங்கிருந்தோ வந்தான் - விஸ்வநாதன் & ராமமூர்த்தி

எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடிப் பணிபுரிந்த மேலும் பல இசையமைப்பாளர்கள்

Sagar Ravi பகிர்ந்தவை

1. ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் - நான் அடிமை இல்லை - விஜய் ஆனந்த் 
2.கன்னித்தமிழோ கம்பன் கவியோ - அபிராமி - மனோரஞ்சன் 
3.பூவும் மலர்ந்திட தேனும் வடிந்திட - சுவர்ணமுகி - ஸ்வரராஜ் 
4.எந்தன் காதல் நாயகி - அம்மா பொண்ணு - ஏகாந்தன் 
5.இன்ப ராகங்கள் நெஞ்சுக்குள்ளே - ஹலோ ப்ரதர் - ராஜ் கோட்டி 
6.சிறகுள்ள நிலவே வா - இனிது இனிது காதல் இனிது - தேவி ஸ்ரீ பிரசாத் 
7.அவ கண்ண பார்த்தா ஐயோ அம்மா - சார்லி சாப்ளின் - பரணி 
8.ரோஜாப்பூ ஒன்று ராஜாவின் கை சேர - இரண்டாவது படம் - கண்ணன் 
9.என்ன அழகு எத்தனை அழகு - லவ் டுடே - சிவா ( நாடோடி இலக்கியனும் குறிப்பிட்டார்)
10.ரவிவர்மன் ஓவியமோ நான் தினம் பாடும் காவியமோ - புதுவயல் - அரவிந்த்
11.ஒரு வானமாய் ஒரு பூமியாய் - ஜனா - தினா 
12.நான் போகிறேன் மேலே மேலே - நாணயம் - ஜேம்ஸ் வசந்தன் (நண்பர் கார்த்திக் அருள் கூடக் குறிப்பிடுகின்றார்)
13.கனவுல பார்த்தன் நெனவுல பார்த்தேன் - பலம் - யுகேந்திரன்
14.தீந்தேனா தீ வடியும் தேனா - தலைமகன் - பால் J 
15.ஒரு துளி இருதுளி மழைத்துளி விழுந்தது - ஆச்சார்யா - ஸ்ரீகாந்த் தேவா 
16.மழை நின்றும் நிற்காது தூவானம் நம் வாழ்க்கை - தூவானம் - ஐசாக் தாமஸ்
17.ஞாபகம் இல்லையோ என் தோழி - ஞாபகங்கள் - ஜேம்ஸ் விக்
18.ரம்யா ரம்யா ரம்யா ரம்யா - தொட்டாசிணுங்கி - பிலிப் ஜெர்ரி
19. சந்தனப் பூவ சம்மதம் கேக்கப் போறேன் - ஓடங்கள் - சம்பத் செல்வம் 
20. ஒரு வரம் தருகிறாய் தாயே - கொல கொலையா முந்திரிக்கா - செல்வகணேஷ்

ஜி.ரா பரிந்துரை
1. வானில் வாழும் தேவதை (வாணி ஜெயராம்) - உருவங்கள் மாறலாம் - எஸ்.வி.ரமணன்

ரஜினி ராமச்சந்திரன் பரிந்துரை
1. வருவாயா வேல் முருகா (சரளா) - ஏன் - டி.ஆர்.பாப்பா


5 comments:

Anonymous said...

அருமை, அற்புதம் | அசத்தல் பதிவு பாராட்டுக்கள் பிரபா சார்

Umesh Srinivasan said...

வழக்கம்போல அசத்தலான பதிவு. பாடும் நிலா இன்னும் பல்லாண்டுகள் வாழ வேண்டும்.

Anonymous said...

அட்டகாசமான பதிவு. எம்.எஸ்.விசுவநாதனில் தொடங்கி விசுவநாதன் இராமமூர்த்தியில் முடித்தது அருமை.

நீங்கள் குறிப்பிட்ட அத்தனை பாடல்களுமே அருமை.

இந்த ஐம்பது பாடல்களோடு எஸ்.பி.இரமணன் இசையில் எஸ்.பி.பி பாடிய வானில் வாழும் தேவதை பாடலையும் சேர்த்துக் கொள்ளலாம்.

Unknown said...

கண்காட்சி திரைப்படத்தில் வரும் அனங்கன் அங்கதன் அன்பன் ௭ல்ஆஆர் ஈஸ்வரி குன்னக்குடி வைத்தியநாதன் பாடலையும் சேர்த்து கொள்ளுங்கள்

Murugaraj said...

என் வானம் நீதானே -தினம்தோறும் -ஓவியன்
அற்புதமான பாடல் நண்பரே!