Pages

Saturday, April 21, 2012

தேனிசைத் தென்றல் தேவா கொடுத்தவை சில

தொண்ணூறுகளில் தமிழ்த்திரையிசையை இப்போது திரும்பிப்பார்க்கும் போதும் ஒரு கலவையான உணர்வு தான் தோன்றும். எண்பதுகளிலே தனிக்காட்டு ராஜாவாக இசைஞானி இளையராஜா இருந்தபோது வானொலிப்பெட்டிகளுக்கு மட்டுமே அதிகம் நெருக்கமான இசை தொண்ணூறுகளிலே அள்ளிவீசப்பட்ட தொலைக்காட்சி சானல்களால் இன்னும் நெருக்கமாக வந்து சேர்ந்தது. ஆனால் திரையிசையில் ஏ.ஆர்.ரஹ்மானின் வரவு என்ற ஒரு புதிய அத்தியாயம் நிகழ்த்தப்பட்டது மட்டுமே முக்கியமான மைல்கல்லாக நினைவில் நிறுத்தவேண்டியிருக்கிறது. எண்பதுகளிலே பட்ஜெட் இசையமைப்பாளர்கள் என்றிருந்த சங்கர் கணேஷ், சந்திரபோஸ், எஸ்.ஏ.ராஜ்குமார் என்ற வட்டம் சிறிதாக ஆதித்யன் போன்றோரின் வரவு நிகழ்த்தப்பட்டாலும் அதையும் தாண்டி சின்ன பட்ஜெட் படங்களின் பெரு விருப்புக்குரிய தேர்வாக அமைந்தது தேவாவின் வருகை.
புதுவசந்தம் படத்தின் பெருவெற்றியைத் தக்க வைக்கமுடியாமல் தொடந்து "பெரும்புள்ளி" போன்ற படங்களின் தோல்வியோடு வில்லனாக நடிக்க ஆசைப்பட்டுத் தயாரிப்பாளராகி ஒட்டாண்டியாகிய எஸ்.ஏ.ராஜ்குமார் ஒருபக்கம், அமரன் என்ற முதல் படத்தில் கவனிக்க வைத்தாலும் அதே படத்தின் தோல்வியும் தொடந்து துறைமுகம் போன்ற படங்களும் ஆதித்யனை அடுத்த நிலை இசையமைப்பாளாராக அதிகம் உருவாக்கவில்லை.
"வைகாசி பொறந்தாச்சு" படத்தின் பெருவெற்றியோடு அளவுகணக்கில்லாமல் படங்களை ஒப்புக்கொண்டு அதில் வெற்றியின் சதவிகிதத்தையும் கூட்டிக் கொண்டு முன்னணிக்கு வந்தார் தேவா. பாடல்களைக் காப்பியடிப்பவர் என்ற பரவலான விமர்சனம் தேவா மீது. ஆனாலும் இன்றைக்கு ஹாரிஸ் ஜெயராஜையே பத்துவருஷமாக மன்னிக்கும் தமிழ் இசை ரசிகர் உலகம் பரவலாக அள்ளிப்போட்ட தேவாவைக் கருணையோடு பார்த்தது. ராஜா காலத்தில் கேட்ட மெட்டும், ஆர்ப்பாட்டமில்லாத இசைக்கோர்வையும் மட்டும் போதும், கூடவே கவிஞர் காளிதாசன் போன்ற கவிஞர்களையும் வைத்துக் கொண்டு நிதானமாகக் களத்தில் தன் ஆட்டத்தைக் காட்டினார் தேவா.

இன்றைக்கு கானா பாடல்கள் என்றால் தேவா என்ற நிலைக்குக் காரணமான "காதல் கோட்டை"க்கு முன்பே பாமர ரசிகர்கள் இதயங்களுக்குள் எளிமையான தேவாவின் மெட்டு நுளைந்துகொண்டது. இன்னொரு காரணம் இசைஞானி இளையராஜா அதுவரை கொடுத்து வந்த இசையின் போக்கில் வந்த மாற்றம், கூடவே ஏ.ஆர்.ரஹ்மானின் மேற்கத்தேய வாத்தியக் கோர்ப்பு மற்றும் தமிழ்ச்சூழலுக்கு அந்நியப்பட்ட இசையை உள்வாங்கத் தமிழ் ரசிகர்கள் எடுத்துக் கொண்ட காலம். இவற்றை எல்லாம் விட உடனேயே ஒரு பட்ஜெட் படம், எங்கோ கேட்ட பாடல் மாதிரி ஈசியாக நுளையக்கூடிய மெட்டுத் தேடிய தயாரிப்பாளர்களின் நோக்கம் எல்லாம் தேவாவால் நிறைவேறியது.

இன்றைக்கும் எமது கிராமங்களில் தேவாவின் தொண்ணூறுகள் தான் வானொலிப்பெட்டிகளால் ஆராதிக்கப்படுகின்றன. அந்த வகையில் தேனிசைத் தென்றல் கொடுத்த பாடல்களிலே என் மனசுக்கு நெருக்கமான பாடல்களில் சிலதை இங்கே பகிர்கின்றேன்.
தேனிசைத் தென்றல் தேவா என்ற பட்டத்தை மெல்லிசை மன்னர் கொடுத்த ராசி வைகாசி பொறந்தாச்சு படத்தோடு ஆரம்பித்தது. படத்தில் ஏகப்பட்ட துண்டு துண்டான பாடல்களோடு "சின்னப்பொண்ணுதான் வெக்கப்படுது அம்மா அம்மாடி" பாடல் சென்னை வானொலியில் தேசிய கீதங்களில் ஒன்றானது அப்போது
கருப்பு வெள்ளை என்றொரு படம், விஜயா வாஹினி என்ற பெரும் தயாரிப்பு நிறுவனத்தால் எடுக்கப்பட்டது. தொண்ணூறுகளில் கொழும்பில் தனியார் வானொலி எஃப் எம் 99 என்று மெட்டவிழும் நேரம் அடிக்கடி ஒலிபரப்பிப் புண்ணியம் தேடிக்கொண்டது. இப்போது கேட்டாலும் இனிய சுகம். எஸ்.பி.பி, சித்ரா குரல்களில்நடிகர் சிவக்குமாரின் 150 வது படம் என நினைக்கிறேன் "வாட்ச்மேன் வடிவேலு" என்ற தோல்விப்படம். படத்திலே பாடல்கள் தேவாவின் கைவண்ணத்தில் வெகு சிறப்பு. "சம்மதம் தந்துட்டேன் நில்லு" என்ற இசைஞானியின் பாடலில் கொள்ளை இன்பம் கொண்டு அதே மெட்டில் "கன்னத்தில் கன்னம்" வைத்தவர். இதே படத்தில் வரும் சந்திரனும் சூரியனும் பாடல் தித்திப்பு ஆனால் அதை வயதான பாட்டன், பாட்டி பேரப்பிள்ளையை நோக்கிப் பாடவைத்து மொக்கை ஆக்கினார் இயக்குனர்.பி.வாசுவின் கதையை கே.எஸ்.ரவிக்குமார் படமாக்கிய "புருஷ லட்சணம்" டூப்ளிகேட் பிரபுவாக ஜெயராமும் குஷ்புவும் ஜோடி கட்டிய அந்தப் படத்தில் வரும் "செம்பட்டுப் பூவே" பாடல் தேவாவை #WhyDevaIsGod என்று ட்விட்ட வைக்கும்.தேவாவுக்குப் பெருவாழ்வு கொடுத்த இயக்குனர்களில் முக்கியமானவர் சுரேஷ்கிருஷ்ணா, அண்ணாமலை, பாட்ஷா ஆகிய ரஜினி படங்களில் ஜெயித்த இந்தக் கூட்டணி மற்றப்படங்களில் வெற்றிக்கோட்டை எட்டவில்லை. ஆனாலும் என்ன "ரோஜாவைக் கிள்ளாதே" படத்தில் வரும் இந்தப் பாட்டைக் கேட்டுப்பாருங்கள் சொக்கிப்போவீர்கள். "நீ ஒரு பட்டம் நானொரு பட்டம் சந்தர்ப்பத்தால் சந்தித்தோம்"
மிகக்குறுகிய காலத்திலேயே அதாவது இரண்டு வருஷங்களுக்குள் அரைச்செஞ்சரி போட்ட தேவாவுக்கு 50 வது படம் கஸ்தூரிராஜாவின் சோலையம்மா வெளிவந்த ஆண்டு 1992. இளையராஜாவத் துதிபாடி கங்கை அமரன் பாடும் பாடலை விசுவாசமாகப் போட்டு வைத்தார். கூடவே "தாமிரபரணி ஆறு இது தரையில் நடக்கும் தேரு" தேவாவுக்கே உரிய தனித்துவம்

23 comments:

கோபிநாத் said...

கலக்கல் தல ;-)

Yokesh said...

வசந்த் கூட்டணியில் வந்த "ஆசை" , "நேருக்கு நேர் " பின் நாளில் "அப்பு" போன்ற திரை படங்களில் தேவாவின் கலப்படம் குறைந்த நல்ல பாடல்களை கேட்க முடிந்தது.. சூர்யா படங்களான "வாலி" "குஷி" படங்களும் அவருக்கு பெரிய வெற்றிப்படங்களானவை என நினைக்கிறேன்..தேவா அவர்களின் குரலும் மிக வித்தியாசமான ஒன்று.

நீங்கள் குறிப்பிட்ட சோலையம்மா படத்தில் "கூவுற குயிலு" என் மனதுக்கு மிக நெருக்கமான பாடல். நினைவுகளை மீட்டியமைக்கு நன்றி ..!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அருமையான தொகுப்பு. நீங்க குறிப்பிட்டிருக்கும் பாடல்களை நானும் விரும்பி கேட்பதுண்டு. கட்டபொம்மன் படத்தில் வரும் ப்ரியா ப்ரியா படப்பாடலும் நன்றாக இருக்கும்.

கானா பிரபா said...

தல கோபி

வருகைக்கு நன்றி :0

கானா பிரபா said...

யோகேஷ்

தேவாவின் வெற்றிப்பாடல்களில் நீங்கள் சொன்னவை உட்பட நீண்டவை

Riyas said...

அருமையான தொகுப்பு.. இது போன்று எத்தனையோ ஹிட் பாடல்கள் தேவாவிடமிருந்து,,

Suddi said...

Dear Sir,

Panchalankurinchi - Un udatora chevappu, antha marudhani kadana kekkum.

Basha - Thanga magan

Priya, Priya song from Kattabomman is one of the master pieces.

After Raja, I found only Deva using violin and flute properly..
Deva's music + Kaalidasan lyrics was very prominent in many of 90's Anbalaya Prabhakaran movies.
This Vaikasi poranchu also from same combination.

Sudharsan

குப்பத்து ராசா said...

நல்ல தொகுப்பு. சிவக்குமாரின் 100 வது படம் 'ரோசாப்பு ரவிக்கைகாரி'

தமிழ்வாசி பிரகாஷ் said...

தேவா அவர்களின் கானாவை விட இத்தகைய மேலோடிகள் என்றும் கேட்கலாம். அருமையான தொகுப்பு அன்பரே....

கானா பிரபா said...

குப்பத்து ராசா

ரோசாப்பூ ரவிக்கைக்காரி தான் அவரின் 100வது படம் திருத்தத்துக்கு நன்றி. வாட்ச்மேன் வடிவேலு 150 என்று நினைக்கிறேன்

கானா பிரபா said...

வருகைக்கு நன்றி பன்னிக்குட்டி ராம்சாமி மற்றும் ரியாஸ்

ravikumar said...

Not only Vaali, Kushi but also Rajni's blockbuster Annamalai & Batsha was done by Mr.Deva

Unknown said...

இசை ராட்ஷசன் ராஜா ரசிகனாய் இருப்பது புலி வாலை பிடித்த கதை தான். அவர் காலத்தில் வந்த பிறரும் நன்றாகவே இசை அமைத்தாலும் பெரும்பாலும் ராஜாவின் தரத்தை ஒத்து பார்த்து நிராகரித்து விடுவேன். இதை எல்லாம் மீறி எங்கெங்கே எங்கெங்கே... "நேருக்கு நேர்" பாட்டில் தேவா என்னைக் கட்டிப் போட்டார்.

வைகை said...

அருமையான தொகுப்பு...இன்னும்கூட நிறைய பாடல்கள் உள்ளது, தொடர் தொகுப்பாகவே வெளியிடலாம் :-)

கானா பிரபா said...

சுதர்சன்

நன்றாகக் கவனித்துள்ளீர்கள் :) நீங்கள் கேட்ட பாட்டு எனக்கும் கொள்ளைப்பிரியம்

தமிழ்வாசி பிரகாஷ், ரவிக்குமார், வைகை மிக்க நன்றி

அன்பின் மீனாட்சிசுந்தரம்

எங்கெங்கே பாட்டு அற்புதம் ;0

Anonymous said...

kalaichelvan
தலைவா தேவாவை தேட வைச்சிட்டியள்.. காதல் கோட்டையில் அவ்ர் போட்ட சிவப்பு லோலாக்கு .. குலுங்குது.. குலுங்குது , அசர வைச்ச பாட்டு ஒரு கணம் எம்பெருமான் ராசா போட்ட மெட்டோ என திரும்பிப்பாக்க வைச்ச பாட்டு, கன்ணோடு காண்பதெல்லாம் படத்தில் தாஜ்ஜு மகால் ஒன்று.. நாடி நரம்பை முறுக்கிய பாட்டு..
கண்ணெதிரே தோண்றினாள் படத்தில் சின்ன வண்ண‌க்கிளியே.. சிம்ரனை காதலிக்க வைச்சபாட்டு மற்றும் சலோமியா (இது ஹிந்தி பாடலின் அப்பட்டமான தழுவல்) பாட்டுக்காகவே பியர் அடிக்க வைச்ச பாட்டு,
தேவா படத்தில் ஒரு கடிதம் எழுதினேன் என் உயிரை அனுப்பினேன் ..என்ற பாட்டு காதலை பற்றி சிந்திக்காத காலத்தில் காதலிச்சு தொலைக்க வேணும் எண்ட‌ வீம்பை ஏற்படுத்தின‌ பாட்டு

காதல் கோட்டையில் நலம் நலமறிய ஆவல் ..ஆஹா அந்த பாட்டின் ஆரம்ப கிட்டார் இசையை கேட்கும் போதே மனமெல்லாம் பரவசமாகும்.. முற்றத்து மல்லிகை பந்தலுக்கு கீழ் படுத்திருந்து நிலாவை ரசிக்கிற உனர்வைத்தந்த பாட்டு அது... இப்படி இன்னும் எத்தனையோ அருமையான பாடல்கள் அவை எல்லாத்தையும் சொல்ல இட்ங்காணாது பிறகு பாப்பம்

70 களில் வேதா என்றொரு இசையமைப்பாளர் , நான் மலரோடு தனியாக ஏன் இங்கு வந்தேன் போன்ற பிரபலமான ஜெய்சங்கரின் பாடல்களுக்கு சொந்தக்காரர் .அவ்ரின் பெரும்பாலான பாடல்கள் ஹிந்தியிலிருந்து தழுவப்பட்டவை வெர்றி பெற்ற‌வை, அவரின் பாணியை பின்பற்றியதால் தான் தேவனேசன் என்ற தன் பெயரை தேவா என மாற்றிக்கொண்டாரோ???. (தேவா > < வேதா)

ராஜா ரசிகன் கலைசெல்வன்

Kalaichelvan Rexy Amirthan said...

தலைவா தேவாவை தேட வைச்சிட்டியள்.. காதல் கோட்டையில் அவ்ர் போட்ட சிவப்பு லோலாக்கு .. குலுங்குது.. குலுங்குது , அசர வைச்ச பாட்டு ஒரு கணம் எம்பெருமான் ராசா போட்ட மெட்டோ என திரும்பிப்பாக்க வைச்ச பாட்டு,
கன்ணோடு காண்பதெல்லாம் படத்தில் தாஜ்ஜு மகால் ஒன்று.. நாடி நரம்பை முறுக்கிய பாட்டு.. கண்ணெதிரே தோண்றினாள் படத்தில் சின்ன வண்ண‌க்கிளியே.. சிம்ரனை காதலிக்க வைச்சபாட்டு மற்றும் சலோமியா (இது ஹிந்தி பாடலின் அப்பட்டமான தழுவல்) பாட்டுக்காகவே பியர் அடிக்க வைச்ச பாட்டு,
தேவா படத்தில் ஒரு கடிதம் எழுதினேன் என் உயிரை அனுப்பினேன் ..என்ற பாட்டு காதலை பற்றி சிந்திக்காத காலத்தில் காதலிச்சு தொலைக்க வேணும் எண்ட‌ வீம்பை ஏற்படுத்தின‌ பாட்டு

காதல் கோட்டையில் நலம் நலமறிய ஆவல் ..ஆஹா அந்த பாட்டின் ஆரம்ப கிட்டார் இசையை கேட்கும் போதே மனமெல்லாம் பரவசமாகும்.. முற்றத்து மல்லிகை பந்தலுக்கு கீழ் படுத்திருந்து நிலாவை ரசிக்கிற உனர்வைத்தந்த பாட்டு அது...
இப்படி இன்னும் எத்தனையோ அருமையான பாடல்கள் அவை எல்லாத்தையும் சொல்ல இட்ங்காணாது பிறகு பாப்பம்

70 களில் வேதா என்றொரு இசையமைப்பாளர் , நான் மலரோடு தனியாக ஏன் இங்கு வந்தேன் போன்ற பிரபலமான ஜெய்சங்கரின் பாடல்களுக்கு சொந்தக்காரர் .அவ்ரின் பெரும்பாலான பாடல்கள் ஹிந்தியிலிருந்து தழுவப்பட்டவை வெர்றி பெற்ற‌வை, அவரின் பாணியை பின்பற்றியதால் தான் தேவனேசன் என்ற தன் பெயரை தேவா என மாற்றிக்கொண்டாரோ???. (தேவா > < வேதா)

ராஜா ரசிகன் கலைசெல்வன்

swejeni said...

vasantha kaala paravai padathil semparuthi semparuthi

VELAN said...

முக்கியமான பாடல்கள் மிஸ்ஸிங்.

முதல் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே - ஆஹா - ஆனால் இது காபி.

என் மனதை கொள்ளையடித்தவளே - கல்லூரி வாசல்

ஒத்தையடி பாதையிலே - ஆத்தா உன் கோவிலிலே

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

பெண்கள் பலர் தேவாவின் பாடல்களை விரும்புகின்றனர்.பாடல்களின் எளிமையும் பிரபல இசைகொவைகளை எளிதாகி தருவதில் வல்லவர். ஆசை,குஷி பாடல்கள் அற்புதமாக இருக்கும்.
உண்மையான திரை இசை ரசிகனின் நல்ல பதிவு

Dhivya said...

அருமையான பதிவு

Anonymous said...

தேவா இசையில் இன்னும் நிறைய பாடல்கள் தந்திருக்கலாம் பிரபா சார். இந்த பதிவிற்க்கே நீங்க குறைந்த பட்சம் 3 மணி நேரம் செலவிட்டிருப்பீங்கள் இருந்தாலும் தொகுப்பு மீண்டும் கேட்க இனிமை. வாழ்த்துக்கள.

Unknown said...

அருமையான பதிவு ராஜா தொடர்ந்து ஒரே மாதிரியான படங்களில் பணியாற்றியதால் ஏற்பட்ட சலிப்பு 90 களில் திரையுலகில் சில ஆண்டுகள் விலகி நிற்க ரஹுமான் மற்றும் தேவா சரியாக பயன்படுத்தி கொள்ள ராஜா தன் திறமைக்கு ஏற்ப படங்களுக்கு மட்டுமே தெரிவு செய்து கொண்டார்.(மோகமுள்,அவதாரம்,ஆவாரம் பூ) ரஹ்மான் பெரிய பட்ஜெட் படங்களுக்கு இசை அமைக்க புதிய இயக்குனர்களின் பார்வை தேவாவிடம் சேர அவர் ஹிட் பட இசை அமைப்பாளர் ஆன விதம் உங்கள் பதிவு சிறந்த உதாரணம்.(சேரன் ,அகத்தியன் வசந்த் )