Friday, April 13, 2012
"நானும் பாடுவேன்" போட்டி முடிவுகள்
வணக்கம், வந்தனம், வெல்கம் மக்கள்ஸ்
கடந்த சில வாரங்களாக றேடியோஸ்பதி வழியாக நடாத்தியிருந்த "நானும் பாடுவேன்" போட்டி இன்றோடு ஒரு நிறைவை நாடுகின்றது. இதுவரை காலமும் இந்தப் போட்டிக்கு ஒத்துழைப்பு நல்கிய உங்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவிப்பதோடு இந்தப் போட்டியில் ஆர்வத்தோடு பங்கெடுத்துக்கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி கலந்த வணக்கங்களை அளிக்கின்றோம்.
போட்டி என்றால் கண்டிப்பாக முடிவு வரவேண்டும். ஆனால் இந்தப் போட்டியிலே வெற்றியாளரோடு, பங்கெடுத்துக் கொண்ட ஒவ்வொருவரின் திறமையும் தனித்துவமானது. அந்த வகையில் நீங்கள் எல்லோருமே தனித்துவமானவர்கள்.
போட்டி நடத்துவதிலே ஒரு சில சிரமங்கள் இருந்தன. அவற்றில் முக்கியமாக தகுந்த வாக்குப் பெட்டியை அளிப்பதில் இருந்து, வாக்குகளை முறையாகப் பெற்றுக் கொள்வதிலும் சவால்கள் இருந்தன. ஆனால் தொழில்நுட்பத்தோடு போட்டி போடவேண்டிய வேலை அது. கூடவே நீண்ட கால இடைவெளியும் இந்தப் போட்டியின் வாக்கெடுப்புக்காகக் கொள்ளப்பட்டது. இப்படியான குறைகளைக் களைந்து எதிர்வரும் காலங்களிலே சிறப்பான போட்டிகளை உங்கள் ஒத்துழைப்போடு தரவேண்டும் என்ற முனைப்பு இருக்கின்றது. எனவே குறைகளைப் பொறுத்தருள வேண்டுகிறேன்.
கூடவே போட்டிப் பரிசிலும் ஒரு மாற்றம். முதல் பரிசு மட்டுமே உண்டு என்று அறிவித்திருந்தேன். இப்போது மேலதிகமாக இரண்டாவது பரிசையும் வெற்றி பெற்றவர்களுக்கு அளிக்கிறேன்.
இதுவரை நீங்கள் எல்லோரும் அளித்த வாக்குகளின் பிரகாரம் போட்டியிலே வெற்றி பெற்றவர்கள்
பெண் பாடகர்கள்
முதல் பரிசு: நிலாக்காலம் எ நிலா ( மொத்த வாக்குகள் 370 )
பரிசுப் புத்தகம்: கவிப்பேரரசு வைரமுத்துவின் "இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்"
இரண்டாவது பரிசு: செளம்யா சுந்தரராஜன் ( மொத்த வாக்குகள் 264 )
பரிசுப் புத்தகம்: யானி ஒரு கனவின் கதை (சித்தார்த் ராமானுஜன்)
ஆண் பாடகர்கள்
முதல் பரிசு: ஜபார் அலி ( மொத்த வாக்குகள் 141 )
பரிசுப் புத்தகம்: கவிப்பேரரசு வைரமுத்துவின் "நேற்றுப் போட்ட கோலம்"
இரண்டாவது பரிசு : யோகேஷ் ( மொத்த வாக்குகள் 108)
பரிசுப்புத்தகம்: யானி ஒரு கனவின் கதை (சித்தார்த் ராமானுஜன்)
இரண்டு கட்ட வாக்கெடுப்பின் முழுமையான விபரங்கள் கீழே
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!
கலந்து கொண்டவர்கள் எல்லோருக்கும் பாராட்டுக்கள்
வெற்றிப்பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் ! :)
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!
சூப்பரு தல....வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ;-)))
கலந்து கொண்டவர்களுக்கு வாழ்த்துகளும் வெற்றி பெற்றவருக்குப் பாராட்டுகளும்.
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்
வெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
இந்தப் போட்டியை நடத்திய 'ரேடியோஸ்பதி' கானா பிரபா, எனக்கு வாக்களித்த மற்றும் எனக்காக வாக்குச் சேகரித்த நண்பர்கள், இங்கு வாழ்த்தியவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி!! :)
Post a Comment