வணக்கம், வந்தனம், வெல்கம் மக்கள்ஸ்,
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் றேடியோஸ்பதியில் கீழ்க்கண்ட அறிவிப்பை வெளியிட்டிருந்தேன், தற்போது உங்கள் ஆக்கங்களை அனுப்புவதற்கான முடிவுத்திகதி மார்ச் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது என்பதை அறியதருகின்றோம்.
நீண்ட இடைவெளிக்குப் பின் றேடியோஸ்பதி சார்பில் ஒரு போட்டி நிகழ்ச்சியை உங்கள் பங்களிப்போடு வழங்கலாம் என்றிருக்கிறோம். அந்தவகையில் ஒரு அறிமுகப் பகிர்வாக இந்தப் பதிவு இது. பாத்ரூமுக்குள் மட்டும் பாடும் பாடகர்களாக இருக்கும் பலரின் திறமையையும், ஏற்கனவெ தம் பாடற்திறமையைக் காட்டிவரும் அன்பர்களுக்கும் கூட இந்தப் போட்டி வகை செய்ய இருக்கின்றது. "நானும் பாடுவேன்" என்ற இந்தப் போட்டிக்காக மார்ச் 31 ஆம் திகதி வரை அனுப்பப்பட்ட ஆக்கங்கள் பின்னர் ஏப்ரல் 12 ஆம் திகதி வரை றேடியோஸ்பதி தளத்தில் நேயர்கள் பார்வைக்காகப் பகிரப்படும். ஆக்கங்களை அனுப்பியவர்களில் சிறந்த பாடகர்கள் ஆண், பெண் என்ற இரு வகையில் தனித்தனியாக வாக்களிக்கும் வசதி செய்யபட்டு இரண்டு பிரிவுகளிலும் அதிக வாக்குகளைப் பெறும் ஆண், பெண் பாடகர்களுக்குச் சிறப்புப் புத்தகப் பொதி ஒன்று பரிசாக வழங்கப்படும். இந்தப் பரிசு இசை சார்ந்த நூல்களாக அமையவுள்ளன.
இதுவரை வந்த படைப்புக்களை வந்த ஒழுங்கின் பிரகாரம் இங்கே பகிருகின்றேன். ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 12 ஆம் திகதி வரை அனுப்பப்பட்ட ஆக்கங்களில் சிறந்த பாடகரை நேயர்களே தேர்ந்தெடுக்கும் வாக்குப்பெட்டி வைக்கப்படும்.
செளம்யா சுந்தரராஜன் பாடும் "நினைத்து நினைத்துப் பார்த்தால்"
திருக்குமார் பாடும் "கண்ணே கலைமானே"
ஜபார் அலி பாடும் "நிலவுப்பாட்டு நிலவுப்பாட்டு"
கவிதா கெஜானனன் பாடும் "ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்"
கார்த்திக் அருள் பாடும் "நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை"
மாதினி பாடும் "இதுவரை இல்லாத"
யோகேஷ் பாடும் "காதல் வைத்துக் காதல் வைத்துக் காத்திருந்தேன்"
நிலாக்காலம்' (எ) நிலா பாடும் "சின்னக் குயில் பாடும் பாட்டு"
பரத்வாஜ் பாடும் "நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை"
கோபி பாடும் "துள்ளி எழுந்தது பாட்டு"
ராகவ் பாடும் "காலையில் தினமும் நான் கண்விழித்தாலே"
இதோ தொடர்ந்து போட்டி விதிமுறைகளைப் பாருங்கள்
1. இதுவரை வந்த தமிழ்த் திரையிசைப்பாடலில் ஏதாவது ஒன்றை நீங்கள் உங்கள் குரலில் பாடி அனுப்ப வேண்டும்.
2. ஒருவர் எத்தனை ஆக்கங்களும் மார்ச் 10 இற்கு முன் அனுப்பலாம் ஆனால் மார்ச் 15 ஆம் திகதிக்குள் தாம் அனுப்பியதில் எதைப் போட்டிக்காகப் பரிசீலிக்க வேண்டும் என்பதை அறியத் தரவேண்டும். ஒருவர் பாடிய ஒரு ஆக்கம் மட்டுமே போட்டிக் களத்தில் இருக்கும்.
3. பாடல்களைத் தேர்ந்தெடுக்கும் போது இசை சேர்த்தோ அல்லது இசை இல்லாமல் தனித்தோ பாடுவது உங்கள் சுய விருப்பம் சார்ந்தது.
4. தமிழில் வந்த திரைப்படப்பாடல்களை மட்டுமே போட்டிக்காகத் தேர்தெடுக்க வேண்டும்
5. பாடல்களில் தனிப்பாடலைத் தவிர்த்து, ஜோடிப்பாடலையும் தேர்ந்தெடுத்து இன்னொரு ஜோடிக் குரலையும் சேர்த்துப் பாடலாம், ஆனால் இருவரில் ஒருவர் மட்டுமே அதே பாடலின் போட்டியாளராக இருக்க முடியும்
6. நீங்கள் பாடிப் பதிவு பண்ணிய ஒலிப்பதிவை radiospathy@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம்
7. போட்டியில் மேலதிக விளக்கங்கள் தேவைப்படின் பின்னூட்டத்திலோ அல்லது மேற்சொன்ன மின்னஞ்சலிலோ அறியத் தாருங்கள்.
8. ஆண், பெண் இரு பாலாருக்குமான இந்தப் போட்டியில் வயது எல்லை கிடையாது.
கணினியில் நீங்கள் பாடலைப் பதிவு பண்ண Audacity http://audacity.sourceforge.net/ போன்ற மென்பொருட்களைப் பரிசீலிக்கலாம்.
ஒகே ரெடி ஸ்டார்ட் மியூசிக்
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
நன்றி :)
கவிதா "கெஜானனன்" இதை மட்டும் மாத்திடுங்களேன் ப்ளீஸ்
;) மாத்தியாச்
சௌம்யா குரல் ரொம்ப நல்லா இருக்குங்க..
எல்லாரும் கலக்கி இருக்காங்க...:)
ஜாபர் ஆரம்பிச்சதும் இது ஒரிஜனலா ந்னு தோணுடிச்சே..:)
Jabar and Thirukumar have done a great job... Jabar resembles the original version of voice ...he should give us more of the same . thanks!
Kavitha, keep polishing ... :)
மீண்டும் ஒரு நன்றி :)
ஆகா...கலக்கல் ஆரம்பம் தல ;-))
நான்கு படைப்புகளும் ஒவ்வொரு விதத்தில் சூப்பரு ;-)
அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ;-)
செளம்யாவின் குரல் ரொம்ப அருமையாக இருக்குங்க.....
திருக்குமார் வேறொரு பாடலைத் தெரிவு செய்திருக்கலாம். அதன் இசையைக் கேட்கும்போதே கே.ஜே. யேசுதாஸ்தான் நினைவுக்கு வருகிறார்.
சௌம்யா குரல் அருமை.
ஜபார் நன்றாகப் பாடுகிறார்.
எனது கணினியில் கவிதா கெஜானனன் பாடல் குரல் வரவில்லை. வேறொரு கணினியில் கேட்டுவிட்டுச் சொல்கிறேன்.
Teka : thx :)
கலந்து கொண்ட அன்பர்கள் அனைவருக்கு வாழ்த்துகள். புதிய இல்லத்தில் இணைய வசதி இன்னும் வரவில்லை. பின்னர் எல்லாப் பாடல்களையும் கேட்கிறேன்.
எல்லா பாடல்களுமே மனதை வசீகரிக்கின்றன. சரியான போட்டியாக இருக்கும் என்று நினைக்கிறேன். எல்லோருக்கும் என் வாழ்த்துகள்.
These 3 are fantastic
ராகவ் பாடும் "காலையில் தினமும் நான் கண்விழித்தாலே"
ஜபார் அலி பாடும் "நிலவுப்பாட்டு நிலவுப்பாட்டு"
யோகேஷ் பாடும் "காதல் வைத்துக் காதல் வைத்துக் காத்திருந்தேன்"
Post a Comment