Thursday, February 16, 2012
இசையமைப்பாளர் வி.எஸ்.நரசிம்மன் பாடல்களோடு பேசுகிறார்
தமிழ் சினிமா உலகம் தன் கைக்கெட்டும் தூரத்தில் வைத்திருந்தும் அதிகம் பயன்படுத்திக் கொள்ளாத அற்புதமான கலைஞர்களில் இசையமைப்பாளர் வி.எஸ்.நரசிம்மனும் ஒருவர். எண்பதுகளிலே எவ்வளவுக்கெவ்வளவு இசைஞானி இளையராஜாவின் பாடல்களைக் கேட்டு அனுபவிக்க வேண்டும் என்ற தீரா வெறி இருந்ததோ அதையும் கடந்து மனதில் தென்றலாக வந்து போன இசையமைப்பாளர்களில் இசைஞானி இளையராஜாவுக்கு அடுத்த தட்டில் வைத்து என் மனசு எப்போதும் கெளரவிக்கும் வி.எஸ்.நரசிம்மன் இசையமைப்பாளராகக் கொடுத்த பங்களிப்பை.
இசைஞானி இளையராஜாவின் முக்கிய வாத்தியக்காரராகப் பாடல்களின் பின்னால் ராஜாங்கத்தின் ஆஸ்தான கெளரவத்தோடு இருந்த வி.எஸ்.நரசிம்மன் அவர்களை இளையராஜாவே ஶ்ரீரங்கம் ராஜகோபுரம் அமைக்கும் திருப்பணி இசை நிகழ்ச்சி நடந்த மேடையில், "இவரை இசையமைப்பாளராகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்" என்று சொன்னபோது இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் கண்பட்டு தனது "அச்சமில்லை....அச்சமில்லை...!" திரைக்காக இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்ட இவர் தமிழ்த் திரையுலகில் இசையமைப்பாளராகப் பணியாற்றியது மிகச் சொற்பப் படங்களே. அச்சமில்லை அச்சமில்லை, புதியவன், ஆயிரம் பூக்கள் மலரட்டும், கல்யாண அகதிகள் போன்ற குறிப்பிடத்தக்க படங்களோடு, சின்னத்திரையில் கலக்கிய "ரயில் சினேகம்" தொடருக்கும் பாடல்களோடு இசையமைப்பாளர் என்ற பணியையும் மேற்கொண்டார்.
ஆவாரம்பூவு ஆறேழு நாளா பாடலில் பொங்கி வரும் அருவியாகப் பாயும் இசையாகட்டும், பூமேடையோ பொன்வீணையோ பாடலில் ஒரு மினி இசை ஆலாபனையைப் பாடலின் இடையிசையில் நிரப்பிவைத்திருப்பதாகட்டும், வி.எஸ்.நரசிம்மனின் தனித்துவத்துக்குச் சின்ன உதாரணங்கள் அவை. வி.எஸ்.நரசிம்மன் இசைக்க, பிரியதர்ஷன் இயக்கத்தில் கார்த்திக் நடிக்க "சின்ன மணிக்குயிலே" என்று எடுக்கவிருந்த படத்தில் வந்த "அழகிய கல்யாணப்பூமாலை தான் விழுந்தது என் தோளில் தான்" என்ற பாடலுக்கு ஆயுட்கால அடிமை நான்.
வி.எஸ்.நரசிம்மன் அவர்களை என் ஊடக வாழ்வில் ஒருமுறையாவது பேட்டி எடுத்துவிடவேண்டும் என்ற கனவு அவ்வளவு சீக்கிரம் நனவாகும் என்று நினைக்கவில்லை. வழக்கம் போல ரேகா ராகவன் சார் வி.எஸ்.நரசிம்மனின் தொடர்பிலக்கத்தைப் பெற்றுத்தர, நானோ தயக்கத்தோடு அழைக்கிறேன். மீடியாவின் வெளிச்சம் அதிகம் படாத, தொலைக்காட்சிப் பேட்டிகளுக்கே வரக் கூச்சப்படும் இவர் வானொலிப்பேட்டிக்குச் சம்மதிப்பாரா என்ற எண்ணம் தான் காரணம். ஆனால் என் பேட்டி பற்றிச் சொன்னதுமே "ஒரு மணி நேரத்தில் செய்வோமா" என்ற போது நாட்கணக்கில் இழுத்தடிக்கும் பிரபலமே இல்லாத பிரபலங்களும் திடீரென்று வந்து போயினர். பேட்டி முடிந்ததும், "திருப்தியா இருந்துச்சா, நான் பேசினது எல்லாம் கரெக்டா" என்று கேட்டபோது நிறைகுடமாகப்பட்டார்.
வி.எஸ்.நரசிம்மன், திரையிசையிலும், திரையிசை கடந்தும் செய்த சாதனைகள் ஏராளம், அவரைப் பற்றி அறிந்தவர்களுக்கு அவரின் தெரியாத பக்கங்களைச் சொல்ல இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்ட அளவில் எனக்குப் பரமதிருப்தி.
இதோ அவர் பேசுவதைக் கேளுங்கள், பாடல்களோடு
வி.எஸ்.நரசிம்மனின் இசையில் மலர்ந்த பாடற்தொகுப்பு ஒன்று
வி.எஸ்.நரசிம்மனின் இசையில் மலர்ந்த பாடற்தொகுப்பு இரண்டு
வி.எஸ்.நரசிம்மன் அவர்களின் வயலின் இசை ஜாலத்தைக் கண்குளிரக் காண
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
பகிர்வுக்கு நன்றி தல ;)
நேர்காணல் நன்றாக இருக்கிறது.
கல்யாண அகதிகள் படத்தில் (முதல் படம் என்று நினைக்கிறேன்) வரும் ’மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய்’ பாடல் என் all time favourite-ல் ஒன்று.
நன்றிகள்
Kan simittum neram padathil vandha vizigalil kodi abinayam pattayum serthukonga sir .appadiye manoj kiyan,devendhran, ivargalai pattriyum oru padhivu podunga boss.ennudaya reversetamilcinema.blogspot.com parthu adhai develop panna edhavadhu idea kodunga boss
பகிர்வுக்கு நன்றி
பகிர்வுக்கு நன்றி.
வருகைக்கு நன்றி தல கோபி
வேங்கட ஶ்ரீனிவாசன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்
சிறு வயதில் ஆவரம்பூவு இளையராஜா பாடல் என்றே நினைத்திருந்தேன்.அதில் வரும் தபலா ரிதம் எனக்கு மிகவும் பிடிக்கும். அருமையான பேட்டி.
வணக்கம் அபிராம்,
கண் சிமிட்டும் நேரம் படப்பாடலும் அருமையானதொன்று, விடுபட்டுவிட்டது. உங்கள் தளத்தை இன்று தான் பார்த்தேன் நறுக்கென்று நல்ல அரிய செய்திகளோடு நன்றாக இருக்கிறது. மேலும் சில இசையமைப்பாளர்கள் குறித்துத் தருவேன்
ராஜா
வருகைக்கு நன்றி
மீனாட்சி சுந்தரம்
அச்சமில்லை அச்சமில்லை படத்தின் ஆவாரம்பூவு பாடல் சிறந்த ஒலித்தரமும் கட்டுக்கோப்பான வாத்தியக் கோர்வையும் கொண்டது. இன்னும் பலர் அது ராஜாவுடையது என்று தான் எண்ணுமளவுக்கு திறன் கொண்டது.
நன்றி கானா..
"How to name it " ன் வயலினுக்கு சொந்தக்காரர்.
இவர் இசையமைத்த பாசமலர்கள் படத்து "செண்பக பூவை பார்த்து" பாடல் என்னுடை favorites களில் ஒன்று.
வெங்கடேச ஸ்ரீனிவாசன் சொன்னது போல மனசுக்குள் உட்கார்ந்து மணி அடித்தாய் .. gem!
அருமை கானாபிரபா
நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.
நன்றி
யாழ் மஞ்சு
வி. எஸ். நரசிம்மன் எனக்கு ரொம்ப பிடித்த இசையமைப்பாளர். அவரைப் பற்றி அதிக விவரங்கள் தெரிய வர இந்தப் பதிவு உதவியது. நன்றி. அவரின் இசையில் வந்த படங்களின் எல்லாப் பாடல்களை தொகுக்கும் ஆசை வருகிறது. வெளிச்சம் என்ற படத்தில் வந்த ’துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே’ எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
வாங்க சித்ரன்
துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே இசை மனோஜ் கியான்
ச்சே.. அது VSN என்று இத்தனை நாள் நினைத்துக்கொண்டிருந்தேன். தகவலுக்கு நன்றி.
வி.எஸ்.நரசிம்மன் அவர்களின் பேட்டிக்கு நன்றி கானா.
இசையமைப்பாளராக இருந்துவிட்டு மீண்டும் இன்னொருவரின் கீழ் பணிபுரிவது மனரீதியாக எப்படி இருந்ததோ........
கரகாட்டக்காரன் திரைப்படத்தின் இந்த பாடலில் வரும் வயலின் இசைக்கலைஞர் நரசிம்மன் அவர்கள்தானே?
https://www.youtube.com/watch?v=3r1X0sb2Uuw
கேமரா முன்பு ராஜாவும் நரசிம்மனும் நடிக்க படும்பாடு , நரசிம்மன் சிரிப்பு காட்ட, ராஜாவும் அடக்க முடியாமல் சிரிக்க.......... ஆஹா அழகான கவிதை. [2.17]
இந்த பாடலின் மற்றும் ஓர் மென் சோகம் ஜி.கே.வி [2.36], எவ்வளவு பெரிய இசையமைப்பாளர்.
[பொருளாதார ரீதியாக சிரமத்தில் இருந்த போது வேறு எங்கும் செல்ல வேண்டாம் என்னோடவே கடைசி வரை இருங்கள் என்று ராஜா தன்னுடனே வைத்துக் கொண்டதாக கேள்விப்பட்டதுண்டு]
ஆவாரம் பூவு ஆறேழு நாளா...
Post a Comment