Pages

Friday, February 3, 2012

றேடியோஸ்பதி வழங்கும் =>" நானும் பாடுவேன்" போட்டி நிகழ்ச்சி


வணக்கம், வந்தனம், வெல்கம் மக்கள்ஸ்,

நீண்ட இடைவெளிக்குப் பின் றேடியோஸ்பதி சார்பில் ஒரு போட்டி நிகழ்ச்சியை உங்கள் பங்களிப்போடு வழங்கலாம் என்றிருக்கிறோம். அந்தவகையில் ஒரு அறிமுகப் பகிர்வாக இந்தப் பதிவு இது. பாத்ரூமுக்குள் மட்டும் பாடும் பாடகர்களாக இருக்கும் பலரின் திறமையையும், ஏற்கனவெ தம் பாடற்திறமையைக் காட்டிவரும் அன்பர்களுக்கும் கூட இந்தப் போட்டி வகை செய்ய இருக்கின்றது. "நானும் பாடுவேன்" என்ற இந்தப் போட்டி இன்று முதல் வரும் மார்ச் 15 ஆம் திகதிவரை நிகழவுள்ளது. மார்ச் 15 ஆம் திகதி வரை அனுப்பப்பட்ட ஆக்கங்கள் பின்னர் ஏப்ரல் 12 ஆம் திகதி வரை றேடியோஸ்பதி தளத்தில் நேயர்கள் பார்வைக்காகப் பகிரப்படும். ஆக்கங்களை அனுப்பியவர்களில் சிறந்த பாடகர்கள் ஆண், பெண் என்ற இரு வகையில் தனித்தனியாக வாக்களிக்கும் வசதி செய்யபட்டு இரண்டு பிரிவுகளிலும் அதிக வாக்குகளைப் பெறும் ஆண், பெண் பாடகர்களுக்குச் சிறப்புப் புத்தகப் பொதி ஒன்று பரிசாக வழங்கப்படும். இந்தப் பரிசு இசை சார்ந்த நூல்களாக அமையவுள்ளன.

இதோ தொடர்ந்து போட்டி விதிமுறைகளைப் பாருங்கள்
1. இதுவரை வந்த தமிழ்த் திரையிசைப்பாடலில் ஏதாவது ஒன்றை நீங்கள் உங்கள் குரலில் பாடி அனுப்ப வேண்டும்.

2. ஒருவர் எத்தனை ஆக்கங்களும் மார்ச் 10 இற்கு முன் அனுப்பலாம் ஆனால் மார்ச் 15 ஆம் திகதிக்குள் தாம் அனுப்பியதில் எதைப் போட்டிக்காகப் பரிசீலிக்க வேண்டும் என்பதை அறியத் தரவேண்டும். ஒருவர் பாடிய ஒரு ஆக்கம் மட்டுமே போட்டிக் களத்தில் இருக்கும்.

3. பாடல்களைத் தேர்ந்தெடுக்கும் போது இசை சேர்த்தோ அல்லது இசை இல்லாமல் தனித்தோ பாடுவது உங்கள் சுய விருப்பம் சார்ந்தது.

4. தமிழில் வந்த திரைப்படப்பாடல்களை மட்டுமே போட்டிக்காகத் தேர்தெடுக்க வேண்டும்

5. பாடல்களில் தனிப்பாடலைத் தவிர்த்து, ஜோடிப்பாடலையும் தேர்ந்தெடுத்து இன்னொரு ஜோடிக் குரலையும் சேர்த்துப் பாடலாம், ஆனால் இருவரில் ஒருவர் மட்டுமே அதே பாடலின் போட்டியாளராக இருக்க முடியும்

6. நீங்கள் பாடிப் பதிவு பண்ணிய ஒலிப்பதிவை radiospathy@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம்

7. போட்டியில் மேலதிக விளக்கங்கள் தேவைப்படின் பின்னூட்டத்திலோ அல்லது மேற்சொன்ன மின்னஞ்சலிலோ அறியத் தாருங்கள்.

8. ஆண், பெண் இருப்பாலாருக்குமான இந்தப் போட்டியில் வயது எல்லை கிடையாது.

கணினியில் நீங்கள் பாடலைப் பதிவு பண்ண Audacity http://audacity.sourceforge.net/ போன்ற மென்பொருட்களைப் பரிசீலிக்கலாம்.

ஒகே ரெடி ஸ்டார்ட் மியூசிக்

7 comments:

கோபிநாத் said...

கலக்குறிங்க தல ;-)) அருமையான போட்டி...வெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள் ;)

குறையொன்றுமில்லை. said...

சரியான போட்டி. வெற்றி பெற வாழ்த்துகள்.

pirapa said...

அருமையான போட்டிவெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

தனிமரம் said...

போட்டியில் சிங்கம்கள் கலக்கட்டும் பிரபா அண்ணா வாழ்த்துக்கள்.

மன்மதகுஞ்சு said...

அண்ணா சூப்பர் போட்டி.. களமிறங்கிட்டா போச்சு

கலைக்கோவன் said...

சபாஷ்...சரியான போட்டி..
கலந்து கொண்டு
கலக்க போகும்
அனைவருக்கும் வாழ்த்துக்கள்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

குட்.. அனுப்பிடறோம்.. (மகளோட)பாடலை :))