இன்று காலை இசைஞானி இளையராஜாவின் மனைவியார் ஜீவா அம்மையாரின் மறைவை இணையத்தின் வாயிலாக அறிந்த போது எமது வீட்டில் நிகழ்ந்த ஓர் துன்பியல் நிகழ்வாக எடுத்துக் கொண்டது மனம். எனக்கு மட்டுமல்ல என்னைப்போல இருக்கும் பல்லாயிரக்கணக்கான
இசைஞானியின் தீவிர ரசிகர்களுக்கும் இதே உணர்வுதான் இருக்கும். இசைஞானி என்ற மாபெரும் கலைஞனைக் கைப்பிடித்த நாள் முதல் அவரின் சாதனைகள் பலவற்றுக்கும் நிழலாகத் துணையாக நின்று சோரா மனம் கொண்டிருக்க வைத்தவர். இனிமேல் இளையராஜாவிற்குத் துணையாக அவரின் தொடர்ந்த வாழ்வியல் பயணத்தில் இவர் இருக்கமாட்டார் என்ற துயர் தரும் சேதியையும் இவரின் மரணம் எழுதி வைத்துப் போயிருக்கின்றது.
நண்பர் ரவிசங்கர் ஆனந்த், இசைஞானியின் மனைவிக்கான ஒரு அஞ்சலிப்பகிர்வை வானொலிக்காக ஏற்பாடு செய்யப் பெரிதும் உதவினார், அவரோடு இசைஞானியின் தீவிர ரசிகரான நண்பர் அலெக்ஸ் ராஜாவும் இணைந்து கொள்ள, இளையராஜாவின் வாத்தியக்குழுவில் இயங்கும் பகவதி (இவர் நடிகர் டி.கே.பகவதியின் பேரன் கூட) அவர்களுமாக மூவரும் சேர்ந்து இசைஞானியின் இல்வாழ்க்கைத் துணை திருமதி ஜீவாவிற்கான ஒரு சிறு அஞ்சலிப்பகிர்வைச் சமர்ப்பிக்கின்றோம். இந்த முயற்சியில் பெரிதும் உதவிய நண்பர் ரவிசங்கர் ஆனந்த், இசைஞானியின் பொக்கிஷப்புகைப்படங்களைத் தந்துதவிய நண்பர் அலெக்ஸ் ராஜாவுக்கும் இந்த வேளை நன்றிகளைப் பகிர்கின்றேன்.
தொடர்ந்து திருமதி ஜீவா இளையராஜாவிற்கு இசைரசிகர்கள் தரும் அஞ்சலி
இறுதி நிகழ்வில்
Subscribe to:
Post Comments (Atom)
23 comments:
:-(
ஜீவா அம்மையாரின் ஆத்மா சாந்தியடையட்டும்...
ஆழ்ந்த இரங்கல்கள்....
அவர் ஆத்மா சாந்தியுறட்டும். பிரிவால்
வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
வருத்தமான செய்தி .. ஆன்மா சாந்தி அடைய பிராத்திப்போம்
;-( ஆத்மா சாந்தியடையட்டும்
:(((
அம்மையாரின் ஆத்மா சாந்தியடையட்டும்,ராஜா குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!
எனாக்கும் இன்று முழுவதும் அதே பீலிங்க்ஸ். வேலையே ஓடவில்லை.
என் ஆழ்ந்த வருத்தங்கள்!
கண்டிப்பாகப் பதிவு இடுவீர்கள் என எதிர்பார்த்தேன்.இரவு நேரத்தில் தான் படிக்க முடிந்தது வேறு வேலையாக அலைந்ததால்.நல்ல ஆத்மா என்பதற்கு அடையாளமாக சொல்லப்படுவது வாழ்ந்த விதம் மட்டும் அல்ல இறந்த விதத்தையும் வைத்துத்தான்.புண்ணிய ஆத்மா அதுதான் நெடுநாள் சீரழியாமல் சட்டென்று சென்றுவிட்டார் எனச் சொல்வார்கள்.பொதுவாகவே எந்த அளவுக்கு MENTALLY FREE ஆக இருக்கோமோ அந்த அளவுக்கு நம்மால் வேலையில் நன்கு கவனம் செலுத்த முடியும்.அப்படி ஒரு சூழல் அமைவது வரமும் கூட.அப்படி ஒரு வரத்தை நிச்சயம் ராக தேவனுக்கு இந்த தேவி அருளி இருக்கவே கூடும்.இல்லாவிடில் இத்தனை அதி அற்புத இசையை தங்கு தடையின்றி ராஜா தந்திருக்க இயலாது.நிழலாய்க் கீழே விழுந்தாலும் நிஜத்தை தலை நிமிர்ந்து நடக்க வைத்த பெருமை அம்மையாருக்குச் சேரும்.எத்தனை உறவுகள் வந்தாலும் கணவனுக்கு மனைவியும் மனைவிக்கும் கணவனுமே மிகச் சிறந்த துணைகள்.ஒன்றில் பாதி இழந்தால் அரைகுறைதான் பூர்த்தியடையாது.அதனால் எந்த ஒரு வார்த்தையும் அவர் இழப்புக்கு ஈடு ஆகா.இருப்பினும் கோடானு கோடி ரசிகர்களின் நெஞ்சம் நிறைந்த அவர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும் கூடவே இருந்த இருக்கின்ற உற்ற தோழனுக்காக ஆத்மார்த்தமாக ரசிகர்களின் கண்ணீரும் பிரார்த்தனையும் ராஜாவைச் சென்றடையும் என்று நம்புவோமாக.இத்தனை அன்பு நெஞ்சங்களின் தலைவன் ஆறுதல் கிடைக்கப் பெற்று அவர்களின் அன்பிற்காகவே முழு மனதைரியம் அடைந்து மனதளவிலும் உடலளவிலும் உறுதியாக பிரார்த்திக்கிறேன்.பொதுவாக பிரியமானவர்களின் ஆத்மா எங்கேயும் வெளியே செல்வதில்லை நம்மைச் சுற்றியே தானிருக்கும்.வெகு விரைவில் ராஜாவின் துணைவி குழந்தையாக உருவெடுத்து அந்த வீட்டிற்கு ராஜாவை தேற்ற வருவார் என்றே நம்புகிறேன் அது மெய்யாக வேண்டும் என்ற பிரார்த்தனையையும் இறைவன் முன் சமர்ப்பிக்கிறேன் ...
ஆழ்ந்த இரங்கல்கள்.ஜீவா அம்மையாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
மயிலே மயிலே உன் தோகை எங்கே?
- தன் துன்பமான நேரத்திலும், பாட்டால் ஊருக்கே இன்பம் குடுக்கும் இளையராஜா...
>மஞ்சள் மாங்கல்யம், மன்னன் வழங்க, கெட்டி மேளம் முழங்க<
முருகா, உனக்குன்னு இந்தப் பாட்டு!
ஆறுதலையானே, ஆறுதல் குடு - இளையராஜாவுக்கு!
//இனிமேல் இளையராஜாவிற்குத் துணையாக அவரின் தொடர்ந்த வாழ்வியல் பயணத்தில் இவர் இருக்கமாட்டார் என்ற துயர் தரும் சேதியையும் இவரின் மரணம் எழுதி வைத்துப் போயிருக்கின்றது//
கா.பி...
மென்மையாக மறுக்கிறேன்!
இனிமேலும், இளையராஜாவுக்கு அவர் துணை இருப்பார்! - உறவாய் உணர்வாய் நிழலாய்....
ராஜா சாதாரணமாகவே ஒரு வித Introvert மனிதர். இந்த இழப்பு அவரை மிகவும் பாதிக்கும். இந்த இழப்பு அவரது குடும்பத்தை, ரசிகர்களை தாண்டி இசைக்கும் ஒரு பின்னடைவு தான். ராஜா மேலும் மேலும் தனித்துபோய் ரசிகர்களால் உணரமுடியாத இசையின் இன்னொரு தளத்தை நாடப்போகிறார் என்று நினைக்கிறேன்...அது எந்த அளவில், எப்படியான பாதிப்பை இசையில் ஏற்படுத்தபோகிறது என்பதை காலம் தான் சொல்லும்..
அன்னாருக்கு இரங்கல்கள்
அன்னையின் ஆன்மா அமைதியுறட்டும்! :-(
அன்னையின் ஆன்மா அமைதியுறட்டும்! :-(
ஆழ்ந்த அனுதாபங்கள்.
நேற்று சகோதரி முத்துலெட்சுமி அவர்கள் தன் வலைப்பதிவில் [http://thenkinnam.blogspot.com/2011/11/blog-post_02.html] ராஜாவின் ”ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்” பாடலை இட்டிருந்தார். இப்போது தாங்களோ ஒரு வானொலி நிகழ்சி நடத்துகிறீர்கள். நம் போன்ற இரசிகர்களின் இந்த இரசிகர்களின் இரங்கல்கள் இராகதேவனைத் தேற்றட்டும்
ராஜாவைப் பற்றி நினைக்காமல் ஒரு நாளும் நமக்கு கடப்பதில்லை. அவரின் இழப்பு நமக்கும் தான். ஜீவாம்மா ஓவ்வொரு வருடமும் விஜயதசமியின் போது ராஜா வீட்டில் நடக்கும் கர்நாடக இசை கச்சேரிகளை ஒருங்கிணைப்பார் என்று படித்திருக்கிறேன். அம்மையாரின் ஆன்மா சாந்தி அடையட்டும். உடனடியாக வானொலி நிகழ்ச்சி நடத்திய பிரபாவுக்கு நன்றி.
அன்னையின் ஆன்மா அமைதியுறட்டும்
எனது அஞ்சலி
http://sekkaali.blogspot.com/2011/11/blog-post_4930.html
Post a Comment