Saturday, March 19, 2011
"எழுத்தில் இருந்து சினிமாவிற்கு" இயக்குனர் பாலுமகேந்திரா வழங்கும் ஒலிப்பகிர்வு
கிழக்குப் பதிப்பகம் வழங்கி வரும் மொட்டை மாடிக் கூட்டத்தில் நேற்று இயக்குனர் பாலுமகேந்திரா அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றார் என்ற செய்தி வந்தபோது அந்த நிகழ்வு சென்று கொண்டிருக்கும் நேரம் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரக்குக் கூட்டுத்தாபனத்தில் எனது வானொலி நிகழ்ச்சியும் சமகாலத்தில் இடம்பெறுவதால் ஒரு புதுமுயற்சியாக நேரஞ்சல் செய்வோமே என்று நினைத்தபோது கிழக்குப் பதிப்பகமும், நண்பர் ஹரன் பிரசன்னாவும் முழு ஒத்துழைப்புக் கொடுத்தார்கள். எனது நேயர்களோடு நேரடி உரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே மறுமுனையில் ஒலித்தரம் குறித்த பரிசோதனையை ஹரன்பிரசன்னா முழு அர்ப்பணிப்போடு செய்து உதவினார் ;-)
50 நிமிடங்கள் வரை சென்ற இந்த நேரடி இந்த நிகழ்வை வெற்றிபெறச் செய்ய மறுமுனையில் இருந்து உதவிய நண்பர் ஹரன்பிரசன்னாவுக்கு இந்த வேளையில் எனது நன்றிகள். இந்த முயற்சியை சென்னையில் இருந்து சிட்னி, ஐரோப்பா வரை நேரடியாகக் கேட்டு மகிழ்ந்த நேயர்கள் பலர்.
"எழுத்தில் இருந்து சினிமாவிற்கு" (from writing to cinema) இதுதான் இயக்குனர் பாலுமகேந்திரா அவர்கள் எடுத்துக் கொண்ட கருப்பொருள். இதனை வைத்துக் கொண்டு கிட்டத்தட்ட 50 நிமிடங்கள் மூன்று மாதங்களுக்குப் போதுமான சினிமாப் பாடத்தையே எடுத்து முடித்து விட்டார் இந்தக் கருத்தரங்கில். எழுத்து வடிவம் கொண்ட ஒரு படைப்பு எப்படி சினிமாவாக் மாற்றம் காண்கின்றது என்பதை பல்வேறு நடைமுறை உதாரணங்களையும் வாழ்வியல் அனுபவங்களையும் இணைத்து அவர் பேசுகின்றார். உண்மையில் சினிமாவை நேசிப்போருக்கும், முனைப்பில் இருப்போருக்கும் இந்தப் பேச்சு கண்டிப்பாகப் பயனளிக்கும். எனவே இங்கே ஒலிப்பகிர்வாகத் தருகின்றேன்.
Download பண்ணிக் கேட்க
அங்கம் 1
அங்கம் 2
நேரடியாகக் கேட்க
அங்கம் 1
அங்கம் 2
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
எதாவது இடையில் பேசி சொதப்பிட்டேனா? நன்றி ரொம்ப பலமா இருக்கே பிரபா?
உண்மையில் நாங்கள்தான் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும். நன்றி.
ஆமா இடையில் பேசிட்டீங்க, 1.01 நிமிட் ஐ கேட்கவும் ;-)
மிக நல்ல பகிர்வு தல...இது வித்தியாசமான அனுபவம் எனக்கு ;)
நன்றி தல
புதிய முயற்சி புதுமையானதும் கூட. இயக்குனர் பாலு மகேந்திராவின் பேச்சை ரசித்துக் கேட்ட பல்லாயிரக் கணக்கான நேயர்களில் நானும் ஒருவன். நிகழ்ச்சியை மிக அருமையாக ஒலிப்பதிவு செய்து ஒளிபரப்பிய உங்களுக்கு என் பாராட்டுகளும் நன்றியும்.
எங்கள் வானொலியோடு இணைந்திருந்தமைக்கு மிக்க நன்றி ராகவன் சார்
பாடல்களுக்கென்றே உள்ள றேடியோஸ்பதியில் இது ஒரு வித்தியாசமான முயற்சி!
அடுத்த முறை வானொலியில் மட்டுமல்லாது, இங்கும் நேரடி ஒளிபரப்பு வேணும்! :)
பாலு மகேந்திரா தொட்டுச் சென்றிருக்கும் விஷயங்களும் யோசிக்க வைக்கின்றன! எழுத்தாளர் ஜெயமோகனும் இது பற்றி ஏற்கனவே பேசி இருக்கார் என்றாலும், ஒரு இயக்குனர் பார்வையில் இருந்து வருவது முக்கியமான சிந்தனையோட்டம்!
//ஆமா இடையில் பேசிட்டீங்க, 1.01 நிமிட் ஐ கேட்கவும் ;-)//
அரன் பிரசன்னாவைச் சொல்றீங்க? நீங்க மட்டும் என்னவாம்?
ஆமா நீங்களும் இடையில் பேசிட்டீங்க, 1:04 நிமிட்-ஐக் கேட்கவும்! :))
வாங்க கே.ஆர்.எஸ்
ஆக ரெண்டுபேருமே பேசிட்டோம் ;)
இந்த நேரடி அஞ்சல் செய்யும் போது ட்விட்டர், பஸ் வாயிலாகவும் அறிவித்தோமே
ஒலி துல்லியமாக இருக்கிறது. அருமையான முயற்சி நண்பரே.
மிக்க நன்றி கிருஷ்ணபிரபு
Post a Comment