
செக்கச்செவேல் என்று அரிதாரம் பூசிக் கொண்டு நாயக வேஷம் கட்டிய காலம் போய் தமிழ் மண்ணின் அடையாளமாகக் கறுப்புத் தோல் நாயகர்கள் ஜெயிச்சுக் காட்டிய வேளை தான் முரளி என்ற இளைஞனும் "பூவிலங்கு" மூலம் திரைக்கு வந்தார். நடிக்க வந்து 26 வருஷங்கள் கடந்தாலும் தமிழ் சினிமாவின் முக்கியமான நாயகர்கள் பட்டியலில் இல்லாவிட்டாலும் இத்தனை ஆண்டுகள் ரசிகர்கள் இதயத்தில் முரளியை இருத்தியிருந்தார்கள். அதற்குக் காரணம் இவர் பெரும்பாலும் ஏற்றிருந்த பாத்திரங்கள் தமிழ்ச்சூழலுக்கு அந்நியப்படாதவை.

மிக அதிகமான இயக்குனர்கள் தமது முதற்படத்திற்குக் கற்பனை செய்து வைத்திருந்த பாத்திரமாக மாறியதோடு அந்தப் பாத்திரங்களைத் திரையில் வெற்றிகரமானவையாகக் காட்டியதிலும் முரளியின் பங்கு இருக்கின்றது. அதாவது இயக்குனர்களின் நாயகன் என்று சொல்லக் கூடியவர்களில் இவரும் ஒருவர். பாலசந்தர் தன் சிஷ்யர் அமீர்ஜானை வைத்து பூவிலங்கு தயாரித்த போது தமிழுக்கு அறிமுகமானவர் முரளி. ஏற்கனவே அலைகள் ஓய்வதில்லை படத்திற்காக பாரதிராஜா இவரை ஒப்பந்தம் செய்து அது கைகூடாமல் போனது வேறு கதை. மணிரத்னம் தமிழுக்கு அறிமுகமான போது தன் "பகல் நிலவு"திரைப்படத்திற்குத் தேர்ந்தெடுத்த பாத்திரத்துக்குக் கச்சிதமாகப் பொருந்திச் சிறப்பித்தார்.

இடையில் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் படங்கள் பண்ணிச் சறுக்கினாலும் பல புது இயக்குனர்களை அறிமுகப்படுத்துவதில் முரளியின் பங்கு தொடர்ந்தது. அவரின் வெற்றிப் பயணத்தில் ஒரு சிறு தடங்கலை புது இயக்குனர் விக்ரமனின் "புது வசந்தம்" வெற்றிகரமாகச் சீர் செய்தது. மீண்டும் அடுத்த சுற்று ஓட்டம். கார்வண்ணனின் "பாலம்", ரமேஷ் கிருஷ்ணாவின் "அதர்மம்" என்று பல முத்திரைப் படங்களின் வெற்றிக் கூட்டணியில் முரளி தான் நாயகன். வெற்றி பெற வேண்டிய ஆனால் தோல்வி கண்ட பாக்யநாதனின் "என்றும் அன்புடன்" முரளிக்கு இன்னொரு பரிமாணம்.
இவையெல்லாம் தாண்டி "இதயம்" படம் முரளியின் திரை வாழ்வில் ஒரு மகுடமாக அமைந்ததோடு கதிர் என்ற புதுமுக இயக்குனரை அறிமுகப்படுத்திச் சிறப்பித்து. தமிழ்த் திரையுலகில் முரளி ஒரு பெருங் கலைஞனாக அமையாவிட்டாலும் அவரை அடுத்த ஆட்டத்தில் ஒரு நல்ல குணச்சித்திரமாகக் கண்டு களிக்க முடியாமற் போனது தமிழ்த் திரையுலக ரசிகனுக்கு ஒரு இழப்பு.
முரளி அறிமுகப்படுத்திய முக்கிய இயக்குனர்களின் முதற்படங்க்களில் இருந்து சில பாடல்களைப் பகிர்கின்றேன்
அமீர்ஜான் - பூவிலங்கு "ஆத்தாடி பாவாட காத்தாட"
மணிரத்னம் - பகல் நிலவு "பூவிலே மேடை நான் போடவா"
கதிர் - இதயம் "இதயமே இதயமே"
விக்ரமன் - புதுவசந்தம் "பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா"
பாக்யநாதன் - என்றும் அன்புடன் "துள்ளித் திரிந்ததொரு காலம்"
ரமேஷ்-கிருஷ்ணா - அதர்மம் "தென்றல் காற்றே"

17 comments:
RIP!!!
:(
எல்லோரையும் ஈர்க்கும் அமைதியான முகம்.இளமை மாறாத வடிவம். அவரை இழந்த குடும்பத்தாருக்கு அனுதாபங்கள்.:(
ஆத்தாடி பாவாட காத்தட என்று பாட்டுப்படித்து 1980 களின் ஆரம்பத்தில் இளசுகளின் மனதில் இடம் பிடித்தவர். நல்ல நடிகரும் கூட.
அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்.
அவரை இழந்த குடும்பத்தாருக்கு அனுதாபங்கள்
உண்மையிலேயே கேட்பதற்கு அதிர்ச்சியாக இருந்தது. நாற்பது வ்யதுக்கு மேல் ஆனதுமே அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு இவருடைய மரணமும் ஒரு உதாரணம். கடந்த வாரம் ரஜினி வீட்டு திருமணத்தில் கூட அவரை டிவியில் பார்த்தேன்.
ஆழ்ந்த அனுதாபங்கள்...
ஆமா ப்ரபா.. அவரோட கேரக்டர் எல்லாமே நல்லா இருக்கும்... இப்ப்பக்கூட காலேஜ் பையனா நடிக்கலாம்ன்னும் அப்படியே இருக்காரேன்னும் கண்ணு தான் வச்சிட்டோம் போல காபி வித் அனு ல் என்ன சிம்பிளா பேசினார்..:(
http://thenkinnam.blogspot.com/2010/09/blog-post_4264.html அவருக்காக இன்று தேன்கிண்ணம் ல வாராயோ வான்மதி பாட்டு..
அவரோட கேரக்டர் எல்லாமே நல்லா இருக்கும்... இப்ப்பக்கூட காலேஜ் பையனா நடிக்கலாம்ன்னும் அப்படியே இருக்காரேன்னும் கண்ணு தான் வச்சிட்டோம் போல காபி வித் அனு ல் என்ன சிம்பிளா பேசினார்..:(//
ஆமாம். இதை வருத்தத்தோடு வழிமொழிகிறேன். பிரபா சொல்லியிருப்பது போல மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்து இல்லாவிட்டாலும் இதயத்தில் இவருக்கென ஒரு இடம் கண்டிப்பாய் இருக்கும். பாவம் மகளுக்கு திருமணம் நிச்சயித்திருந்தாராம். :((( எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
முரளியை பற்றி சுருக்கமாகவும் நிறைவாகவும் நினைவுகூர்ந்துள்ளீர்கள் கானா பிரபா.
என் ஆழ்ந்த அனுதாபங்கள்...
சிறப்பான தொகுப்பு
முரளிக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்
பாடகனாகவே நடித்து புகழ் பெற்ற முரளிக்கு பாடல்களாலேயே வாழ்த்துகள்...அருமை...
//அவரை அடுத்த ஆட்டத்தில் ஒரு நல்ல குணச்சித்திரமாகக் கண்டு களிக்க முடியாமற் போனது தமிழ்த் திரையுலக ரசிகனுக்கு ஒரு இழப்பு.
இதனைத் தான் நானும் உணர்கின்றேன்.. :(
//தமிழ்த் திரையுலகில் முரளி ஒரு பெருங் கலைஞனாக அமையாவிட்டாலும் அவரை அடுத்த ஆட்டத்தில் ஒரு நல்ல குணச்சித்திரமாகக் கண்டு களிக்க முடியாமற் போனது தமிழ்த் திரையுலக ரசிகனுக்கு ஒரு இழப்பு//
உண்மை கலந்த அஞ்சலி!
வாராயோ வான்மதி பாடல் மிகவும் பொருத்தமானது!
நான் பாடும் பாடலே
காதில் கேட்க வில்லையோ?
ஆறுதல் இல்லையோ?
ஆசை கொண்ட மனதினை
நான் மறந்தேன் தலைவனே
இன்று நான் மாறினேன்
சம்மதம் கூறினேன்
வாராயோ வான்மதி!
கனவிலும் நினைத்து பார்க்க இயலவில்லை.
அவரை இழந்த குடும்பத்தாருக்கு அனுதாபங்கள்
இன்னும் நம்ப முடியாத இழப்பு.வாழ்வு இவ்வளவுதானா !
Post a Comment