எல்லோரும் ராவணன் படம் பார்த்துக் களித்துக்/களைத்துக் கொண்டிருக்கும் சமயம் கீதாஞ்சலி (தெலுங்கு) இதயத்தைத் திருடாதே (தமிழ்) இரண்டையும் இணைத்த டிவிடி ஒன்றை ஓடவிட்டு வழக்கம் போலப் பின்னணி இசைப்பிரிப்பு வேலைகளை ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட ஐந்து நாட்களாக மெல்ல மெல்ல இசைஞானியின் இதயத்தைத் திருடிய இசை மீண்டும் திருட வைத்துக் கொண்டே பூவினை அதன் காம்பிலிருந்து காயம்படாது எடுப்பது போலப் பிரித்தெடுத்தேன். மொத்தமாக 19 இசைக்குளிகைகள் வந்தன. கூடவே கண்ணில் ஒற்றிக் கொள்ளும் பி.சி.ஶ்ரீராமின் காமிராக் கண் வழியே திருடிய காட்சிகளையும் டிவிடியில் இருந்து பாகம் பிரித்தேன். இப்போது உங்களுக்கும் இந்த இன்ப அனுபவம் கிட்டவேண்டும் எனப் பகிர்கின்றேன் இங்கே.
கீதாஞ்சலி, இயக்குனர் மணிரத்னம், இசைஞானி இளையராஜா, நாகார்ஜீனா என இந்தப் படத்தில் பணியாற்றிய முக்கிய கலைஞர்களுக்குப் பெரும் பேர் வாங்கிக் கொடுத்த படம் மட்டுமல்ல 21 வருஷங்களுக்குப் பின்னர் இன்றும் அதே புத்துணர்வைப் படம் பார்க்கும் இரண்டு மணி நேரம் கொடுக்கும் வல்லமை நிறைந்த காதல் காவியம். ஆரம்பத்தில் சற்றுத் தட்டு தடுமாறிப் பின்னர் மெளனராகம், நாயகன், அக்னி நட்சத்திரம் என்று தமிழில் தொடர்ச்சியான வெற்றிகளைக் குவித்த மணிரத்னம், மெல்ல ஆந்திராவை முற்றுகையிட்டு அப்போது வளர்ந்து வந்த வாரிசு நடிகர் நாகர்ஜீனாவை வளைத்துப் போட்டு கீதாஞ்சலி என்ற காவியத்தைக் கொடுத்தார். தந்தை நாகேஸ்வரராவ் தேவதாஸ் படத்தில் பின்னி எடுத்தவராயிற்றே, மகன் நாகார்ஜீனா விடுவாரா என்ன.
கூடவே ஜோடி கட்டிய கிரிஜா அப்போது புதுமுகம், அமெரிக்காவிலிருந்து வந்திருந்தார். கீதாஞ்சலி படத்தைத் தொடந்து மலையாளத்தில் பிரிதர்ஷன் இயக்கி மோகன்லால் நடித்த வந்தனம் படத்திலும் தலைகாட்டினார். அன்றைய காலகட்டத்தில் நடிகை அமலா மோகம் எங்கும் வியாபித்திருந்ததால் சற்றேறக்குறைய அதே முகவெட்டுடன் கிரிஜாவை மணி கட்டியிருக்கலாம். கீதாஞ்சலி படத்தின் வெற்றியில் கிரிஜாவின் அடக்கமான அதே சமயம் நாசூக்காகப் பண்ணும் குறும்பு நடிப்பும் பங்கு போட்டிருக்கும். நுறு நாட்களுக்கு மேல் ஓடிய கீதாஞ்சலி வெற்றிச் சித்திரம் சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த கதை, கலை இயக்கம் உட்பட ஆந்திர அரசின் ஏழு நந்தி விருதுகளையும், தேசிய அளவில் சிறந்த பொழுதுபோக்குச் சித்திரமாகவும் விருதுகளை அள்ளியது. பாரதிராஜாக்கள் காலத்துக்குப் பின் தமிழ் சினிமாவில் இன்னொரு பரிமாணத்தை ஆரம்பித்த மணிரத்னத்தின் ஓவ்வொரு வெற்றிப்படமும் வித்தியாசமான களங்களை அன்று கொண்டிருந்தது. அந்த வகையில் முழுமையாக காதலை மையப்படுத்தியிருந்தது இப்படம். மணிரத்னம் என்ற கலைஞனின் உயிர் நாடியாக ஒளிப்பதிவாளர் பி.சி.சிறீராமும் , இசைஞானி இளையராஜாவும் படமுழுதும் செயற்பட்டிருப்பது தெரிகின்றது.
எண்பதுகளில் தனிக்காட்டு ராஜாவாக இருந்த இசைஞானிக்கு கீதம், காதல், கிராமம் என்றிருந்தால் மனுஷர் அடிபின்னி விடுவார். அதைத் தான் இங்கேய்யும் காட்டியிருக்கின்றார். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் முன்னர் பாவலர் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் முரளியை வைத்து ஒரு படம் தயாரித்த போது அந்தப் படத்துக்கு கீதாஞ்சலி என்று பெயர் சூட்டியவர் இளையராஜா. சில வருஷங்களுக்குப் பின் அதே தலைப்பு தெலுங்குக்குப் போய் இன்னொரு கதையோடு வரும் போது அங்கேயும் தான் இசையமைப்பேன்னு எண்ணியிருப்பாரா என்ன? இன்னொரு விஷயம் இளையராஜாவின் பக்தி இசைத் தொகுப்பு ஒன்றுக்கும் பெயர் "கீதாஞ்சலி".
இந்தப் படத்தில் வரும் ஆத்தாடி அம்மாடி பாட்டின் இடையில் வரும் ஆர்மோனிய இசையைத் தன் இசைக் குழுவில் இருந்தவர் சரிவர உள்வாங்காமல் இசையமைக்க, சலித்துப் போய் அந்த ஆர்மோனிய இசையைத் தானே இசையமைத்துப் பாட்டை உருவாக்கினார் இளையராஜா என்று முன்னர் பாடகி சித்ரா சிட்னி வந்த போது சொன்னதை இங்கே சொல்லியிருக்கிறேன்.
பாடகி சித்ரா சொன்ன அந்தப் பாட்டு
தெலுங்கில் "ஜல்லண்ட" என்றும் தமிழில் "ஆத்தாடி அம்மாடி தேன் மொட்டு தான்" என்றும் சித்ரா பாடும் அந்தப் பாட்டில் இசைஞானி இளையராஜாவே ஆர்மோனியம் வாசித்த பகுதி இதுதான்.
இதயத்தைத் திருடாதே பற்றிப் பேசிக்கொண்டே இருக்கலாம், எனவே இத்தோடு முற்று புள்ளி வைத்து ராஜாவை அழைக்கிறேன் இசை ராஜாங்கம் படைக்க
படத்தின் முகப்பு இசை ஒன்று
படத்தின் முகப்பு இசை இரண்டு
டாக்டரை கல்யாணம் பண்ணக் கேட்கும் பிரகாஷ் - பின்னணியில் விடிய விடிய நடனம் பாடலின் இசை வடிவம்
டாக்டரிடம் தனது வியாதி பற்றி அறியும் பிரகாஷின் அப்போதைய மனநிலையைக் காட்டும் இசை
பிரகாஷ் தன் பெற்றோரிடமிருந்து விலகித் தனியாகப் போகும் நேரம் துணையாக வரும் இசை
குறும்புக்கார கீதாஞ்சலியின் அறிமுகத்துக்குத் துணையாக வரும் இசை
"காவியம் பாடவா தென்றலே" பாடகி சித்ரா குரலில் ஒரு சில அடிகள், கீதாஞ்சலி பிரகாஷை கலாய்க்கும் தொனியில்
கீதா ஞ்சலியின் குறும்புத்தனக்காட்சி ஒன்றில் வளையவரும் இசைவடிவம்
விளையாட்டாக கீதாஞ்சலி சொல்லும் "ஐ லவ் யூ" பிரகாஷ் மனதில் விதையாக, பின்னணியில் எல்லாம் கலந்த இசைக்கலவை
பிரகாஷ் தன் மனம் இளைப்பாற பியானோ வாசிக்கும் காட்சி
கீதாஞ்சலியை தனியே விட்டு விட்டு வந்த விபரீதம் உணர்ந்து பிரகாஷ் அவளைத் தேடும் காட்சியில் பயம், ஏக்கம் எல்லாம் கலந்த இசையில் மேற்கத்தேய இசையோடு ஈடுகொடுக்கும் மிருதங்கத்தின் உணர்வும்
இந்தப் படத்தின் அடி நாதமாக விளங்கும் கதைக்கருவை கீதாஞ்சலி தன் உணர்வாக வெளிப்படுத்தும் நேரம் பரவசமாகப் பாயும் இசை பிரகாஷின் உள்ளத்துடிப்பாய் , இப்படத்தின் உச்சபட்ச இசை ஆலாபனை இதுதான். இதில் வரும் வயலின்களின் ஆர்ப்பரிப்பு ஏற்கனவே ராஜாவின் தனி ஆல்பமான nothing but wind இல் வரும் Mozart I Love You என்ற பாகம் தான்.
கீதாஞ்சலியை கல்யாணம் பண்ணச் சீண்டும் பிரகாஷ், குறும்புக்கார இசையோடு
பிரகாஷ் கீதாஞ்சலியின் இதயத்தைத் திருடிய போது வரும் காதல் ரீங்காராம்
கீதாஞ்சலி தன் காதலை வெளிப்படுத்தும் நேரம் புல்லாங்குழலில் "ஓ ப்ரியா ப்ரியா" மெட்டிசைக்க
பிரகாஷிற்கு நோய் இருப்பதை அறிந்து கீதாஞ்சலி அவனை விட்டு விலகும் நேரம்
நோய் முற்றிய நிலையில் கீதாஞ்சலி, எல்லாம் தொலைத்த நிலையில் பிரகாஷ் வயலின் மட்டும் அவனுக்குத் துணையாக சோகராகம் இசைக்கிறது ஓ ப்ரியா ப்ரியா என்று ஒலிக்கும் வயலின் அந்த இசையை மெல்லப் புல்லாங்குழலுக்குக் கையளிக்கின்றது.
கீதாஞ்சலி பிழைப்பாளா என ஏங்கும் உணர்வாய் எழுப்பும் இசையலைகள் அவள் எழும்பியதைக் கண்டு ஆரவாரிக்கின்றன
படத்தின் இறுதிக்கட்டம் கீதாஞ்சலியோடு பிரகாஷ் இணைவானா என்ற ஆர்ப்பரிப்பில் இசை மட்டும் பரவி நிற்க 4.17 நிமிடக்காட்சியில் "ஓடிப்போயிடலாமா" எனக் கீதாஞ்சலி அவன் காதில் கிசுகிசுக்கும் ஒற்றை சொல் மட்டுமே வசனமாக இருக்கிறது.
ஏக்கம் என்ன பைங்கிளி என்னை வந்து சேரடி
நெஞ்சிரண்டு நாளும் பாட காவல் தாண்டி பூவை இங்காட
காதல் கீர்த்தனம் காணும் மங்கலம்
ப்ரேமை நாடகம் பெண்மை ஆடிடும்
"கீதாஞ்சலி தெலுங்குப் படத்தில் வந்த பாடல்களின் தொகுப்பு
1. ஓ ப்ரியா ப்ரியா - எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா
2. நந்தி கொண்ட - எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா
3. ஓம் நமஹ -எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி
4. ஆமனி பாடவா - எஸ்.பி.பாலசுப்ரமணியம்
5. ஜல்லன்ர - சித்ரா
6. ஜகட ஜகட ஜகடம் - எஸ்.பி.பாலசுப்ரமணியம்
Subscribe to:
Post Comments (Atom)
32 comments:
பொறுமையா கேட்டுட்டு திரும்ப வர்றேன்:)
பாஸ்...உங்க உழைப்புக்கும் ஆர்வத்துக்கும் ஒரு ராயல் சல்யூட்!
//ஏக்கம் என்ன பைங்கிளி என்னை வந்து சேரடி
நெஞ்சிரண்டு நாளும் பாட காவல் தாண்டி பூவை இங்காட
காதல் கீர்த்தனம் காணும் மங்கலம்
ப்ரேமை நாடகம் பெண்மை ஆடிடும் ///
கிளைமாக்ஸுக்குரிய அத்தனை உணர்வுகளினையும் காட்டிடுச்சு பாஸ் பாட்டு - எக்ஸ்ட்ரா சவுண்ட் - ஆர்வத்துல டேபிளை நீங்க தட்டியிருக்கீங்க தெரியுது லவ் சீன் மியூஜிக் போயிக்கிட்டிருக்கும்போது இப்பிடியெல்லாம் செய்யப்ப்பிடாது :))))
பாடல்களையும் இணைத்தமைக்கு பலமான கரகோஷங்கள் சப்தம் ஒலிக்க கமெண்டுறேன் :))
//நிஜமா நல்லவன் said...
பாஸ்...உங்க உழைப்புக்கும் ஆர்வத்துக்கும் ஒரு ராயல் சல்யூட்!/
கேக்காமலே பயபுள்ள ஆர்வத்துல வந்து குதிக்கிதுன்னா என்ன அர்த்தம் படம் அந்தளவுக்கு இவரை அந்த காலத்துல பாதிச்சிருக்கு! :)))
வருகைக்கு நன்றி நிஜம்ஸ், சாவகாசமா கேளுங்க கேளுங்க கேட்டுக் கிட்டே இருங்க ;)
one movie i can never forget :)
ஓம் நமஹா பண்ணிட்டான் :-) அப்பிடின்னு இந்த படம் வந்ததும் ஒரு ஸலேங்கு வந்திச்சு மெட்ராசுல.. இன்னிக்கும் அந்த பாட்ட கேட்டா சிம்ப்ளி மெஸ்மரைஸிங் .... ஆனா ஒன்லி இன் தெலுகு.. தமிழ்ல கேட்டா மனோ கர்ண கொடூரமான அறுத்து போட்டிருப்பாரு அது எப்படித்தான் மனசு வந்த்தோ? பாலுவயே பாட வச்சிருக்கலாம்....
ஆமா எங்க ராப் சாங் ஜகட ஜகட அதையும் போடுங்க சார்.... அந்த கிடார் லிக்ஸூக்கு என்னா மெனக்கெட்டிருப்போம் பிராபான்னே இன்னிக்கு உங்க புண்ணியத்துல மனசு நிறைஞ்சுது... இனி வரும் நாட்கள்ல இந்த பிளாக் போஸ்டுலயே குடியிருக்க போறேன்
ரொம்ப நன்றிங்க
தல,ஃபண்டாஸ்டிக்கான தொகுப்பு,
நோஸ்டால்ஜியாக்கள் கிளம்பின.
========
இன்று மலையோரம் மயிலே ஹெட்போனில் கேட்டால்
மயில் அகவும் ஓசை , அனுபல்லவியிலும்,சரணத்திலும் வேறொரு ட்ராக்கில் அருமையாய் கேட்க முடிந்தது,இதை நீங்களும் உணர்ந்துள்ளீர்களா?,ஸ்பீக்கரில் இதை கேட்க முடியவில்லை, அதுதான் ராஜா சார்,மைன்யூட் டீட்டெயில்களை நாம் அறியாவாறு புதைத்து தேடி எடுத்துக்கோள் என்கிறார்.
அதே போல பாட்டுக்கு நான் அடிமையில்
தாலாட்டு கேட்காத பேரிங்கு யாரு? என்னும் பாடலில்,இடையில் ரயில் சத்தம் வெவ்வேறு தாளகதியில் வரும்,
ரயில் சத்தம் அப்படியே கட் அண்ட் பேஸ்ட் கிடையாது,ரயில் வேகம் எடுப்பதை,வேகம் குறைப்பதை பாடலை உன்னிப்பாய் கேட்டால் உணரலாம்.
[மேலும் இவர் என்றைக்கும் சிறிய ஆள் பெரிய ஆள் என பார்த்து வேலை செய்ததில்லை,
சாதாரண டாஸ்மாக் ஒய்ன் ஷாப்பிலேயே ரெகுலர் கஸ்டமருக்கு தான் மரியாதையுடன் சில்டு பீர் , ஓல்டு மான்க் போன்ற சர்க்குகள் தரப்படும்-கீழான உவமைக்கு மன்னிக்கவும்]
யார் போய் அணுகினாலும் ஒப்பில்லாத இசையை படைத்துள்ளார்.
மேலும் இவரின் ப்ரொபோர்ஷன் மெய்மறக்க வைக்கிறது.
இவர் Fibonacci Numbers ஃபிபுனேசி எண்களை தன் இசை நோட்சுகளில் பயன்படுத்தினாரா? என வியப்படைகிறேன், உலகின் எல்லா புகழ்பெற்ற கலைகளிலும் ஃபிபுனேசி எண்களின் பங்கு திண்ணம்.
http://www.maths.surrey.ac.uk/hosted-sites/R.Knott/Fibonacci/fibInArt.html ,
எவ்வளவு ஞானம்?
ஏனென்றால் நம் 80 களின் சினிமாக்களுக்கு இவ்வளவு உன்னதமான இசை மிகவும் தொலைநோக்கு.நம் தமிழர்களின் வாழ்வியலை இளையராஜாவின் இசை இல்லாமல் பிரித்து பார்க்கவே முடியாது,என ஆகிவிட்டது.
தல...மிக்க நன்றிகள் ;)))
இந்த பதிவில் மூலமாக தான் தெலுங்கு பாட்டு எல்லாம் கேட்குறேன். இதுக்கு முன்னாடி கேட்டது இல்லை...உண்மையில் நீங்கள் இசைஞானியை பார்க்கும் போது நீங்க கேட்ட வேண்டிய கேள்வி மிக சரியான கேள்வி தான் ;))
அந்த கடைசி சீன் இருக்கே...அதுல இழை இழைன்னு இழைச்சிருப்பாரு பாருங்க தெய்வம்...இன்னும் கண்ணுக்குள்ளவே இருக்கு ;))
அந்த பெட்டியை போடுறதுல இருந்து அவகிட்ட வந்து அந்த பெண்ணு டைலாக் சொல்றவரைக்கும் ராஜா தான் பேசுவாரு ;))
போன வாரம் ராஜ் டிவியில போட்டாங்க ;))) பார்த்துட்டோம்ல்ல ;))
இசை தெய்வத்துக்கு மீண்டும் ஒரு நன்றி...;)
உங்களுக்கும் ஒரு நன்றி ;)
வருகைக்கு நன்றி ஆயில்ஸ், க்ளைமாக்ஸ் இசையில் வரும் ஒலிக்கோளாறை நிவர்த்தி பண்ணியாச்சு.
வருகைக்கு நன்றி சர்வேசன் ;)
வாவ் அருமை.. மீண்டும் எனது சின்னப் வயது காலத்துக்கு போன மாதிரி இருந்தது..
தகவல்கள் சில புதிது.
இசைக் கோர்வை ஒவ்வொன்றும் கலக்கல்.
மறக்க முடியாத படம். எத்தனை முறைப்பார்த்தாலும் சலிக்காது. பகிர்வுக்கு நன்றி பாஸ்
தலைவா .. ஜகட ஜகட பாட்ட விட்டுறீங்களே :( சில்க் ஆத்மா உங்கள மன்னிக்காது :)
//மேலும் இவர் என்றைக்கும் சிறிய ஆள் பெரிய ஆள் என பார்த்து வேலை செய்ததில்லை,// //யார் போய் அணுகினாலும் ஒப்பில்லாத இசையை படைத்துள்ளார்//
- இத பத்தி நான் ரேடியோஸ்பதில எழுதின கட்டுரையில குறிப்பிட்டு இருக்கேன்.
நான் கேட்டு கொண்டபடி பகவதிபுரம் ரயில்வே கேட் படத்திலிருந்து பின்னணி இசை தொகுப்பை வெளியிடுங்கள். நான் சொன்னா நாலு பேரு தான் கேப்பாங்க.. நீங்க ரேடியோஸ்பதில வெளியிட்டால் உலகத்திள்ள உள்ள அத்தனை ராஜா ரசிகர்கள் மட்டும் அல்லாது இசை பிரியர்களுக்கு விருந்தாய் அமையும்
BIGLE ! பிகில் said...
ஆமா எங்க ராப் சாங் ஜகட ஜகட அதையும் போடுங்க சார்.... அந்த கிடார் லிக்ஸூக்கு என்னா மெனக்கெட்டிருப்போம் பிராபான்னே இன்னிக்கு உங்க புண்ணியத்துல மனசு நிறைஞ்சுது.//
வாங்க பிகில் தம்பி, முதல் தடவையா தளத்துக்கு வந்ததுக்கு முதலில் நன்றி. ஜகட ஜகட போட்டாச்சு அனுபவியுங்க ;)
உங்கள் கருத்தைப் பகிர்ந்தமைக்கும் நன்றி
|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...
தல,ஃபண்டாஸ்டிக்கான தொகுப்பு,
நோஸ்டால்ஜியாக்கள் கிளம்பின.
//
வாங்க தல
பதிவுக்கு உங்க பின்னூட்டம் வெகு சிறப்பா அணி சேர்க்குது, உங்கள் கருத்துடன் முழுமையாக ஒத்துப்போகிறேன். கூடவே இசைஞானி குறித்து இவ்வளவு தேடல்களுடன் இருப்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கின்றது.
கோபிநாத் said...
தல...மிக்க நன்றிகள் ;)))
இந்த பதிவில் மூலமாக தான் தெலுங்கு பாட்டு எல்லாம் கேட்குறேன். இதுக்கு முன்னாடி கேட்டது இல்லை...உண்மையில் நீங்கள் இசைஞானியை பார்க்கும் போது நீங்க கேட்ட வேண்டிய கேள்வி மிக சரியான கேள்வி தான் ;))//
தல
பாலுவைப் பாடவைக்காத காரணத்தை முந்திய பதிவில் கடைசியா ஒருத்தர் சொல்லியிருந்தார், இந்திரன் சந்திரன் குரல்வளைப் பிரச்சனை .
ராஜ் டிவியில் இந்தப் படமெல்லாம் போட்டு பொளந்து கட்டுறாங்களா ஆகா
பிரபா, எனக்கும் இந்தப் பதிவு மிகவும் பிடித்துள்ளது.
- aamani padave
http://www.youtube.com/watch?v=r8Nu8EDIku8
தமிழில் "காவியம் பாடவா" பாடலைவிடவும் எஸ்.பி.பி.யின் குரலில் இப்பாடல் அருமையாகவே உள்ளது.
ஆனாலும் எனது விருப்பப் பாடல்களில் இந்தப்பாடலுக்குத்தான் முதல் இடம்.
நீண்ட காலம் கடந்தாலும் இளமை குன்றாத பாடல்களை இப்படம் கொண்டுள்ளது.
இந்தப் படம் தமிழுக்கு வந்த போது சொல்லப்பட்ட குற்றச் சாட்டு படம் இருட்டாக உள்ளது என்பதே.ஆனால் தெலுங்கில் காட்சிகள் துல்லியமாகவே உள்ளன.
இந்தப் பாடல்களோடு, இந்தப் படம் வெளிவந்த 1989 இன் பள்ளிக் கூட நாட்களும் அப்போது நாட்டில் காணப்பட்ட இருண்ட காலமும் நினைவுக்கு வருகின்றன.
பாராட்டுக்கள் பிரபா.
பாடல் இணைப்புக்கு ரொம்ப நன்றிங்க...
என் மனைவியிடம் கேட்டதற்கு பாலு அந்த சமயத்தில் அமெரிக்கா போய்விட்டதால் தமிழில் அவரால் பாட இயலவில்லை என்று கூறினார்.. என்ன செய்ய இங்கேயும் அமெரிக்காவால் பிரச்சனை :-(
காபி, இப்படி கீதாஞ்சலி நினைவு வத்தி சுத்த வச்சிட்டீங்களே...! அத்தனை கீதாஞ்சலி யூட்யூப் விடியோவும் தேடித் தேடிப் பாத்தேன்.
உங்க உழைப்பும் ஆர்வமும் நிஜமாகவே பாராட்டத்தக்கவை. ஆவணப் படுத்தலுக்கும் நன்றி.
என் மனதோடு ரீங்காரமிடும் பாடல்களில் ஓ ப்ரியா ப்ரியாவும் ஒன்று. ராஜாவின் ஒவ்வொரு இசைக்கோர்பையும் பொக்கிசம் தான். இதனை அழகாக தொகுத்த அண்ணன் கானாவிற்க்கு நன்றிகள்.
வருகைக்கு நன்றி லோஷன்
வருகைக்கு நன்றி புதுகைத் தென்றல்
kalakkal thala
Anonymous said..
நான் கேட்டு கொண்டபடி பகவதிபுரம் ரயில்வே கேட் படத்திலிருந்து பின்னணி இசை தொகுப்பை வெளியிடுங்கள். .//
தல, கண்டிப்பா போடுவேன் ;)
ஃபஹீமாஜஹான் said...
பிரபா, எனக்கும் இந்தப் பதிவு மிகவும் பிடித்துள்ளது.//
மிக்க நன்றி சகோதரி, இப்படியான திரை நினைவுகள் அந்தக் காலகட்டத்து வாழ்வியலை மீட்டுப்பார்க்கும் என்பதை நானும் ஏற்கிறேன். எனக்கும் அதே அனுபவம் கிட்டியது
கெக்கே பிக்குணி said...
காபி, இப்படி கீதாஞ்சலி நினைவு வத்தி சுத்த வச்சிட்டீங்களே...! அத்தனை கீதாஞ்சலி யூட்யூப் விடியோவும் தேடித் தேடிப் பாத்தேன்.//
ஆகா, மிக்க நன்றி தல ;)
வந்தியத்தேவன் said...
என் மனதோடு ரீங்காரமிடும் பாடல்களில் ஓ ப்ரியா ப்ரியாவும் ஒன்று. ராஜாவின் ஒவ்வொரு இசைக்கோர்பையும் பொக்கிசம் தான். //
வருகைக்கு நன்றி வந்தி
வருகைக்கு நன்றி யோகா
அண்ணா,பதிவுக்கு நன்றி.
இந்த பதிவு எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது.
இசையில் உங்களுக்கு இருக்கிற ஆர்வம் பிரமிப்பாய் இருக்கு.
தெலுங்கு பாட்டு இப்ப தான் முதல் முறை கேட்கிறேன்.படத்தில் எல்லா பாட்டுகளும் அருமை தான்.
எனக்கு மிகவும் பிடித்த படம் இதயத்தை திருடாதே.
பல தடவைகள் பார்த்தும் அலுக்காத படம் என்றால் இது தான்.
வாங்கோ வாசுகி, கனகாலத்துக்குப் பிறகு
பல முறை தூர்தர்ஷனில் போட்ட படம்.
“ஓடிப்போலாமா?” இந்த வசனத்தை மறக்கமுடியாது.
அசத்தலான ஒளிப்பதிவு, அளவான வசனங்கள் (நெறையப் பேருக்கு வந்த புதிதில் இது ஒரு மொழி மாற்றுப் படம் என்று தெரியவே இல்லை), தலைவரின் இசை, எல்லாம் சேர்த்து பத்தாவது படிக்கும் போது பத்து தடவைக்கு மேல் இந்த படத்தை பார்க்க வைத்தது. படத்தின் "முகப்பு இசை இரண்டு" எனக்கு மிகவும் பிடித்த ஒன்று, தலைவர் செல்லோவை இழைய விட்டிருப்பார்.
இப்போது முப்பது சொச்சம் வயதுள்ளவர்கள் மிக பாக்கியம் செய்தவர்கள், ராஜாவின் இசையோடு வளர்ந்ததால் அவர் இசை சம்பந்த பட்ட எல்லாமே பசுமையாக எப்போதும் மனதிலிருக்கும். உங்கள் உழைப்பிற்கு நன்றிகள் பல, இதெல்லாம் ராஜாவின் "Hidden Symphonies" வாழ்நாள் முழுவதும் ரசித்துக் கொண்டே இருக்க கிடைத்த பொக்கிஷம்.
kaliraj - Qatar said...
பல முறை தூர்தர்ஷனில் போட்ட படம்.
“ஓடிப்போலாமா?” இந்த வசனத்தை மறக்கமுடியாது.//
வாங்க நண்பா, ஓடிப்போலாமா இதை வச்சே நிறைய நகைச்சுவை துணுக்குகள் கூட வந்தன அப்போது
மீனாட்சி சுந்தரம் said...
இப்போது முப்பது சொச்சம் வயதுள்ளவர்கள் மிக பாக்கியம் செய்தவர்கள், //
சரியாகச் சொன்னீர்கள், ராஜாவின் காலத்துப் பாடல்கள் அன்றிலிருந்து இன்றுவரை திகட்டாத சுவையாக இன்னும் இருப்பதும் அதை நாம் அனுபவிப்பதும் பாக்கியம்
தெலுங்கில் கீதாஞ்சலி மிக பெரிய தோல்வியை தழுவிய படம். தமிழில் அடைந்த மிக பெரிய வெற்றிக்கு இளையராஜா காரணம். எல்லா பாடல்களையும் மனோ பாடி இருந்தார். இந்த படத்தில் மனோ பாடிய பாடல்களை கேட்பது புதிய அனுபவம்.
ராஜாவின் இசையில் , மணியின் இயக்கத்தில் வெளிவந்த ‘இதயத்தை திருடாதே’ படத்தை டிஜிட்டல் செய்து மீண்டும் ராஜா, மணி இருவரின் பிறந்தநாளான ஜூன் 2 ஆம் தேதி வெளியிட்டால், தமிழ் சினிமா உலகில் நிச்சயம் ஒரு புரட்சி மலரும் என என்னுகிறேன்! காப்புரிமை வைத்திருக்கும் ராஜ் வீடியோ முன்வந்தால் நலம். இந்நாள் இளைஞர்களும் முன்னால் இளைஞர்களும் வசூலுக்கு கியாரண்டி!!!
Post a Comment