Pages

Wednesday, February 3, 2010

திரைக்கலைஞன் கொச்சின் V.M.C ஹனீபா நினைவாக

எண்பதுகளின் தமிழ் சினிமாவை அதிகம் நெருங்கி நேசித்தவர்கள் வி.எம்.சி.ஹனீபா என்ற இயக்குனரை சிலாகித்துப் பேச மறக்க மாட்டார்கள். இவ்வளவுக்கும் இவர் மலையாளத்தில் இருந்து பாசில் வித்தியாசமான கதையம்சங்களை அறிமுகப்படுத்தியது போல தன் படங்களைக் கொடுத்தவரல்ல ஆனா குடும்பச்சிக்கல்களைத் தன் பாணி பொழுதுபோக்கு அம்சங்களைக் கலந்து ராஜாவின் இசைக் கூட்டணி சேர ஜனரஞ்சக ரீதியில் வெற்றிப் படங்கள் சிலதைக் கொடுத்தவர் என்ற வகையில் மறக்கமுடியாது.

பாசிலைப் போல மலையாளத்தில் இருந்து வந்து வெற்றி பெற்றவர்களில் ஹனீபாவைத் தாராளமாகச் சேர்க்கலாம். கதையின் இடைவேளக்குப் பின்னான காட்சி ஒன்றி ஒரு திருப்பதைக் கொடுக்கும் காட்சியில் வில்லன் வேஷம் கட்டி அதுவரை கதைக்களன் நகர்த்திய மர்மமுடிச்சுக்களைப் பார்வையாளனுக்கு எடுத்துச் செல்லுவார். இவரும் தான் மலையாளத்தில் இயக்கிய ஜனரஞ்சக ரீதியில் கவனத்தை ஈர்த்த படங்களைத் தமிழுக்கு ஏற்ற நடிகர்களை வைத்து இயக்கினார். பாசப்பறவைகள், பாடாத தேனீக்கள் போன்ற படங்கள் கொடுத்த காலகட்டத்தில் இவரும், ரேவதியும் நடித்த ஏதோவொரு மலையாளப் படத்தினை மொழிமாற்றி வந்ததை உள்ளூர் வீடியோக் கடைப் போஸ்டரில் பார்த்த ஞாபகம்.


இயக்குனர் மணிவண்ணனுக்கும் வி.எம்.சி.ஹனீபாவுக்கும் உள்ள ஒற்றுமைகள், இருவருமே இயக்குனராக இருந்து வில்லன் பாத்திரம், நகைசுவைப் பாத்திரம் என்று காலத்துக்கேற்ப தன்னை மாற்றியவர். அண்மைக்கால சினிமா ரசிகர்களுக்கு வி.எம்.சி.ஹனீபா என்ற இயக்குனரை விட கொச்சின் ஹனீபா என்ற இயல்பான நகைச்சுவை நடிகனைத் தான் தெரியும். அடிப்படையில் ஒரு இயக்குனராக இருந்ததாலோ என்னவோ அளவுக்கு மிஞ்சிய நடிப்பை இவரிடம் எதிர்பார்க்க முடியாது, அதுவே இவரின் பலமும் கூட. மலையாளிகளோடு தம் ஊர்ப்பெயரையும் ஒட்டி வைப்பது போல கொச்சின் ஹனீபாவைத் தான் கேரளம் விரும்பியது.

தமிழிலும் கேரளத்திலும் சமகாலத்தில் சினிமா ரசிகனின் பெரு விருப்புக்குரிய குணச்சித்திரமாகத் திகழ்ந்தவர் வி.எம்.சி.ஹனிபா. அவர் நேற்று தனது 58 வது வயதில் காலமானர் அவரது நினைவாக ஹனீபா இயக்கிய படங்களில் பாடல்களைத் தொகுப்பாகத் தருகின்றேன்.

கலைஞரின் வசனத்தில் அவரது பூம்புகார் புரொடக்ஷனில் வெளியான "பாசப்பறவைகள்" திரைப்படத்தில் இருந்து கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா பாடும் "தென்பாண்டித் தமிழே என் சிங்காரக் குயிலே"பாசப்பறவைகள் வெற்றியைத் தொடர்ந்து "பாடாத தேனீக்கள்" திரையில் இருந்து கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் "வண்ண நிலவே"இளையராஜா, ஹனீபா கூட்டணியில் பெருமளவு ரசிக ஈர்ப்பைக் கொடுக்காத படங்களில் ஒன்று "பகலில் பெளர்ணமி" அந்தத் திரைப்படத்தில் இருந்து இளையராஜா அடியெடுத்துக் கொடுக்க, எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா பாடும் "கரையோரக் காற்று"நிறைவாக நான் தரும் இந்தப் பாடலை நீண்ட நாட்களாகப் பொருத்தமான சூழல் வரும் வரை பதிவில் தரக் காத்திருந்தேன். காரணம் இந்தப் பாடல் என் விடலைப் பருவத்தில் பெரு விருப்புக்குரிய பாடலாக இருந்தது. ஆனால் இப்படியான பதிவு ஒன்றில் பகிர்வேன் என்று நினைத்தும் பார்க்கவில்லை. குறித்த இந்தப் பாடல் "வாசலில் ஒரு வெண்ணிலா படத்தில் இருந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா கூட்டணியில் வரும் "மாலையிலே தெற்கு மூலையிலே மோகனம் பாடுது ஆண் குயில்". ஹனிபாவோடு இசையமைப்பாளர் தேவா கூட்டுச் சேர்ந்த ஒரே படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

11 comments:

butterfly Surya said...

மகாநதியில் அவரது நடிப்பு அசத்தல்.

பகிர்விற்கு நன்றி பிரபா

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பிரபா!
மகா நதியில் இருந்து இவர் நடிப்பு பிடிக்கும். எனக்கு இவர் உடல் மொழி எம் ஆர் ராதைவை
நினைவூட்டும்.
இது பெரும் இழப்பே!
ஆத்மா சாந்தியடையட்டும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மிகச்சிறந்த நடிகர்... அவருக்கு என் அஞ்சலிகள்.. பாடல்களுக்கு நன்றி கானா..

pudugaithendral said...

நேத்து நியூஸ் பாத்துலேர்ந்து வருத்தமா இருந்துச்சு. லேசா லேசா படத்துல நடிப்பு ரொம்ப அருமையா இருக்கும்.

கோபிநாத் said...

பாசப்பறவைகள் இவர் தான் இயக்கியது என்று நீண்ட வருடங்கள் கழித்து தான் தெரியும்.

சமீபத்தில் நடித்த வேட்டைகாரன் வரை இவரின் நடிப்பு மிக இயல்பாக இருக்கும்.

;(

தென்றல் said...

லோகி,முரளி,ராஜன் பி தேவ்... இப்பொழுது ஹனீபா... மற்றொரு மிகப் பெரிய இழப்பு! அவருக்கு நமது அஞ்சலி. அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.

பகிர்விற்கு நன்றி பிரபா!

S Maharajan said...

சிவாஜி படத்தில் கூட காமெடியில் அசத்தி இருப்பர்.

அவரது ஆத்மா சாந்தியடையட்டும்

பாடல்களுக்கு நன்றி தல!

goma said...

ஹனிஃபா குடி போதையில்,திநகரிலிருந்து வடபழனி போவத்ற்காக ஆட்டோ ஏறும் காட்சி ...இல்லாத ஆட்டோவில் அவர் பயணிக்கும் விதம் இன்னமும் மனதை விட்டு அகலவில்லை.
அருமையான குணசித்திர நடிகர்.

KARTHIK said...

இவரோட காமடி ரொம்ப புடிக்கும்
அதுலையும் அந்த கிங் ஓடியன் பார் காமடி ரொம்ப புடிக்கும்
நன்றி தல

Unknown said...

மிக அருமையான பதிவு. எனக்கு அவர் பேசும் தமிழ் ரொம்ப பிடிக்கும். காதலா காதலா வில் அவர் காமெடி கலக்கலாக இருக்கும். அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.

Unknown said...

malayalam cine field loosing their legends one-by-one for the past six months. on this occasion, i request all the malayalam cine people, let Mr.Thilagan(one of the seniour legend) enjoy a peaceful life.