Pages

Sunday, January 10, 2010

(பால்)"கோவா" - கேட்டதில் இனித்தது
நேற்றுத்தான் எண்பதுகள் பாணி பாடலைப் பற்றிப் பேசி முடித்தால் இன்று இன்னொரு இன்னொரு இன்ப அதிர்ச்சி கோவா பாடல்களைக் கேட்ட பின்னர்.

ராஜ்கிரண், ராமராஜன் வகையறாப் படங்களில் ஒரு தெம்மாங்கு குத்தோடு களைகட்டும் ராஜாங்கம் படம் முழுக்க கோயில் மடை மாதிரி விரவியிருக்கும். அதே புத்துணர்வை "ஏழேழு தலைமுறைக்கும்" பாடலைக் கேட்ட போது மீண்டும் உணர்ந்தேன். வெங்கட்பிரபு, கார்த்திக் ராஜா, பவதாரணி, யுவன் ஷங்கர் ராஜா, ப்ரேம்ஜி ஆகியோர் கூட்டுச் சேர்ந்த பாடல் காட்டுக் கத்தலாக இல்லாமல் குலவைச் சத்தம் போல ரீங்காரிக்கின்றது. தமது தந்தையரின் கிராமத்துப் பெருமையோடு பாடம் இந்தப் பாடலின் இசையாகட்டும், பொருத்திய வரிகளாகட்டும் அக்மார்க் எண்பதுகளின் இளையராஜா ரகம். பாடலில் இணைத்த அத்தனை வாத்தியங்களுமே பாரம்பரிய இசையை விரவி நிற்கின்றமை இன்னொரு சிறப்பு. கண்ணை மூடிக் கொண்டே பாடலைக் கேட்டால் அப்படியே காலச்சக்கரம் எண்பதுகளுக்குப் பின்னோக்கிப் பயணிக்கின்றது. பாடலுக்கான இசை யுவன் ஷங்கர் ராஜா என்பதை முழுமையாக ஏற்க மறுக்கின்றது மனம். நிச்சயம் அண்ணன் கை கொடுத்திருப்பார் என்று எண்ணத் தோன்றுகின்றது.

முன்னர் கோழி கூவுது, கொக்கரக்கோ, எங்க ஊரு பாட்டுக்காரன், கரகாட்டக்காரன், சின்னவர் என்று கணக்கில்லாத படங்களில் கைகோர்த்த அண்ணன் தம்பி ஜோடியான இளையராஜா - கங்கை அமரன் குறித்த படங்களில் இசை விருந்தே படைத்திருந்தார்கள். இளையராஜாவோடு கங்கை அமரன் கூட்டுச் சேர்ந்த படப்பாடல்களை இன்று கேட்டாலும் ஒரு ஸ்பெஷல் விருந்தாக இருக்கும். அதே வரிசையில் அவர்களின் அடுத்த தலைமுறையாக வெங்கட் பிரபு - யுவன் ஷங்கர் ராஜா ஜோடியும் சேர்ந்து விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. அதுவும் "கோவா" அதை ஆணித்தரமான நிரூபித்திருக்கின்றது.
9 comments:

Anonymous said...

கார்த்திக் அண்ணா கிராமத்து மெட்டுக்களில் கலக்க கூடியவர்தான் என்பது பலருக்கு தெரியாமல் போனது வருத்தமே.. மானிக்கம் படத்தில், சந்தனம் தேச்சாச்சு பாடலே அதற்க்கு ஒரு சான்று

~ரவிசங்கர் ஆனந்த்

M.Rishan Shareef said...

அருமையான பாடலொன்று.
இடைக்காலப் பாடல் போலவே இருக்கிறது.

'தமிழ்ப்படம்' படத்தில் ஒரு பாடல் இருக்கிறது..கேட்டிருக்கிறீர்களா? எல்லாப் பிரபலப் பாடல்களினது புரியாத வார்த்தையை எடுத்துக் கோர்த்திருக்கிறார்கள். :)

கோபிநாத் said...

தல கேட்டிட்டிகளா...நான் நினைச்சதை அப்படியே சொல்லியிருக்கிங்க....இதுல வரிகள் வேற கலக்கலாக இருக்கும்.

இதுவரை பாட்டை கேட்டிங்களா...கலக்கலாக இருக்கு ;))

Logesh said...

இந்த பாட்டு சகலகலா வல்லவனில் வரும் "அம்மன் கோயில் கிழக்காலே..." பாட்டு மாதிரியே ஒலிப்பது சற்றே நெருடலாக இருக்கிறது...

இளையராஜா, பாலா, சித்ரா பாடியிருக்கும் பாடலும் அருமை. மற்ற பாடல்களைக் கேட்கும் போது, சமீபத்தில் வந்த பையா, தீராத விளையாட்டுப் பிள்ளை பாடல்கள் போலவே இருக்கின்றன :-(
யுவன் இந்தப் பாணியிலிருந்து சற்று வெளியே வர வேண்டிய நேரம் வந்துவிட்டது..

Unknown said...

உண்மையாகவே ஒரு இளையராஜ் பாடல் கேட்ட அனுபவம்

Venkatesh Kumaravel said...

"இது வரை...” கேட்டீங்களா தல? கேட்டுட்டு சொல்லுங்க!

நிஜமா நல்லவன் said...

நன்றி தல...இப்ப தான் பாட்டு கேட்டுட்டு தரவிறக்கம் பண்ணிட்டு இருக்கேன்!

கானா பிரபா said...

வணக்கம் ரவிசங்கர்

கார்த்திக் ராஜாவின் திறமையை இன்னும் உலகம் புரிந்து கொள்ளவில்லை.

ரிஷான்

தமிழ்ப்படம் பாட்டு இனிமேல் தான் கேட்க வேண்டும்

தல கோபி

இதுவரை பாடலும் பக்கா ;)

லோகேஷ்

நீங்கள் சொன்னதன் பின்னர் தான் உறைக்கிறது, அம்மன் கோயில் கிழக்காலே பாட்டோடு நெருங்கிப் போகிறது மெட்டு

சங்கர், நிஜம்ஸ்

வருகைக்கு நன்றி

வெங்கிராஜா

இதுவரை பாடலும் கலக்கல் இல்லையா

குட்டிபிசாசு said...

தல,

கங்கைஅமரன், ஆர்வி.உதயகுமார் படத்தில் கேட்ட இளையராஜா பீட்... ரசித்தேன்.

ஆயிரத்தில் ஒருவன் பாடல்கள் கேட்டாகிவிட்டதா? அது பற்றி ஒன்னும் சொல்லாம இருக்கிங்க. ஒருவேளை படம் வந்த பிறகு எழுதலாம் என்று இருக்கிங்களா?