Pages

Monday, January 4, 2010

ஏ.ஆர் ரஹ்மான் வழங்கும் உலகின் முதல் இலவச இசைவிருந்து

Sydney Festival 2010 என்ற வருடாந்திர நிகழ்வின் அதிதிக் கலைஞராக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடன் நாற்பது கலைஞர்களை அவுஸ்திரேலியாவின் நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தின் Parramatta என்ற பிராந்தியத்தில் நடாத்த இருக்கும் மாபெரும் இசை நிகழ்வு வரும் ஜனவரி மாதம் 16 ஆம் திகதி மாலை 5 மணிக்கு ஆரம்பமாக இருக்கின்றது.

"அமைதிக்கான என் இசை விருந்து" என்று ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய இந்த இசை நிகழ்வு குறித்துப் பேட்டி அளித்ததோடு, அவுஸ்திரேலியாவில் வாழும் பல்லின மக்களின் சகோதரத்துவத்திற்கான அடையாளமாக இந்த இசை நிகழ்ச்சியை அமைக்கவிருப்பதாகச் சொல்லியிருக்கின்றார்.

நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தின் முதல் பெரும் நகராக சிட்னியும் அதற்கு அடுத்த பெரு நகராக பரமற்றா பகுதியும் விளங்கி வருகின்றது. இந்த பரமற்றா நகரின் மையமாக அமைந்திருக்கும் பெரும் பூங்காத் திடலின் வெட்ட வெளி அரங்கிலேயே நகர சபை ஏற்பாட்டில் முழுமையான இலவச நிகழ்ச்சியாக இந்த இசை விருந்து இடம்பெற இருக்கின்றது.

இந்திய சூப்பர் ஸ்டார் என்ற அறிமுகத்துடன் உள்ளூர் ஊடகங்களின் மூலம் ஏ.ஆர்.ரஹ்மான் வருகைக்கான வரவேற்புக்களும், நிகழ்வு குறித்த விளக்கங்களும் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கூடவே இந்தப் பிராந்தியத்தின் ஐந்து நட்சத்திர விடுதிகள் ரஹ்மானின் வருகையை முன்னுறுத்தி தமது விளம்பரங்களைச் செய்து வருகின்றன. நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தின் போக்குவரத்து அதிகார சபை முன் கூட்டியே இந்த விழாவுக்கு வருவோர் மேற்கொள்ள வேண்டிய போக்குவரத்து ஒழுங்குகளை அறிவித்து வருகின்றது.குறித்த நிகழ்வுக்காக நியூசவுத்வேல்ஸ் ரயில்வே இலாகா மேலதிக ரயில்சேவையை ஒழுங்கு செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலிய வரலாற்றில் முன்னெப்போதும் ஒரு ஆசிய நாட்டவருக்கு இவ்வாறான பெரும் எடுப்பிலான முன்னேற்பாடுகளோடு கெளரவமளிப்பது பெருமைக்குரிய விஷயம.
இந்த நிகழ்வு குறித்த மேலதிக விபரங்களை அவ்வப்போது இந்தப் பதிவில் சேர்த்துக் கொள்கின்றேன்.

மேலதிக இணைப்புக்கள்
Sydney Festival 2010

Parramatta Park

4 comments:

ஆயில்யன் said...

ம்ம்ம்ம் அப்படியே எங்க ஊர்லயும் உண்டான்னு ரகுமான்க்கிட்ட கேட்டு சொல்லுங்க ஜனவரி 8 ந்தேதி !

நல்லா பாட்டு கேட்டு என் ஜாய் பண்ணிப்புட்டு வழக்கம்போல அவுரு கூட நின்னு போட்டோ எடுத்து அதை போடுங்க பாஸ்! வழக்கம்போல நாங்க ஹம்ம்ம்ம்ம்ம்ம்ம் பெருமூச்சு விட்டுக்கிடறோம்! :)))))

geethappriyan said...

தல ரொம்ப அருமையான செய்தி.பாக்க முடிஞ்சவங்க எஞ்சாய் பண்ணுங்க

Anonymous said...

என்ன கொடுமை இது கானா!!! மெல்பர்ண்ல இதப்பத்தி ஒரு பேச்சும் இல்லை.

Anonymous said...

அவுஸ்திரெலியா அரசு இப்படி ரகுமானைக்கூப்பிட்டு இசை விழா வைக்கிறது. நம்மட இந்தியர்களும் அவுஸ்திரெலியாவுக்கு சென்று குடியேறுகிறார்கள். எல்லா வசதியும் பெறுகிறார்கள். ஆனால் அவுஸ்திரெலியா ரெசிஸ்ட் நாடு என்றும் கத்துகிறார்கள். மானங்கெட்ட பிழப்புகள்.