
கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு, இயக்கம் ஆகிய நான்கு பணிகளைச் செய்த ஆசியாவின் முதல் பெண் இயக்குனர் என்ற பெரும் விளம்பரத்துடன் பி.ஆர்.விஜயலட்சுமி இயக்கிய முதல் படமே "பாட்டு பாடவா". இதில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், ரகுமான், லாவண்யா ஆகியோர் நடித்திருக்கின்றார்கள். படமும் சுமாரான வெற்றியைக் கண்டிருந்தாலும், இந்தப் படத்திற்குப் பெரிய பலமே இசைஞானி இளையராஜாவின் இசை தான் என்றால் மிகையில்லை.
"பாட்டுப் பாடவா" படத்திற்கு முன்னர் பி.ஆர்.விஜயலட்சுமி ஒளிப்பதிவு செய்த படமே "தாலாட்டு". நவநாகரீக இளைஞன் தோற்றத்தைக் கொண்ட அரவிந்த்சாமியை அரை ட்ரவுசர் போட்டு கழுத்தில் துண்டும் கட்டிய கிராமத்து இளைஞனாக கற்பனை செய்வதே கஷ்டம் இதை இரண்டரை மணி நேரத் திரைப்படத்தில் காட்டினால் எப்படி இருக்கும்? கூடவே சுகன்யா, சிவரஞ்சனி போன்றோரும் நடித்த படம் டப்பா வரிசையில் சேர்ந்து கொண்டது. படத்தை இயக்கியிருந்தவர் டி.கே.ராஜேந்திரன். அந்தப் படத்தின் தயாரிப்பாளர் மோகன்ராஜின் அடுத்த தயாரிப்பான "பாட்டுப் பாடவா" பி.ஆர்.விஜயலட்சுமிக்கு இயக்குனர் அந்தஸ்தை வழங்கியது
சினிமா உலகத்தில் இருந்து விலகி, தமிழ் தொலைக்காட்சித் தொடர்களை இயக்கிப் புகழ் பெற்றதோடு இப்போது சரிகம என்ற நிறுவனத்தின் தயாரிப்பில் வரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்குத் தயாரிப்பாளராகவும் விளங்கிவரும் பி.ஆர்.விஜயலஷ்மி தமிழ்த் திரையுலக வரலாற்றில் பெண்கள் தொழிள்நுட்பக் கலைஞர்களாக பெரும் பங்களிப்பை வழங்கியிராத வெற்றிடத்தை நிரப்பியவர்களில் ஒருவர் என்ற ரீதியில் மறக்க முடியாதவர்.
தொடந்து பி.ஆர்.விஜயலஷ்மி இயக்கிய "பாட்டுப் பாடவா" ஒளிப்பதிவு செய்த "தாலாட்டு" திரைப்படங்களில் இருந்து பாடல்கள் சில.
"பாட்டுப் பாடவா" திரையில் இருந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம், இளையராஜா பாடும் "வழி விடு வழி விடு என் தேவி வருகிறாள்
"பாட்டுப் பாடவா" திரையில் இருந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம், சுரேந்தர், நெப்போலியன் (அருண்மொழி) பாடும் "இனிய கானம் புதிய வேதம்"
"பாட்டுப் பாடவா" திரையில் இருந்து இளையராஜா, உமா ரமணன் பாடும் "நில் நில் நில் பதில் சொல் சொல் சொல்"
"பாட்டுப் பாடவா" திரையில் இருந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் "அட வா வா ராஜா என்னோடு பாட"
நிறைவாக "தாலாட்டு" திரைப்படத்தில் இருந்து மனோ, மின்மினி பாடும் "மெதுவா தந்தியடிச்சானே என் மச்சானே"
12 comments:
அனைத்தும் அவ்வப்போது உச்சரிக்கப்பட்ட பாடல்கள் :)
நன்றி பாஸ்!
தாலாட்டு -1993
பாட்டு பாடவா- 1994
நாடோடி இலக்கியன் said...
தாலாட்டு -1993
பாட்டு பாடவா- 1994//
வணக்கம் நாடோடி இலக்கியன்
நீங்க சொல்வது சரி, தாலாட்டு முதலில் தான் வந்தது, அதோடு இயக்கியது பி.ஆர்.விஜயலட்சுமி அல்ல ஒளிப்பதிவு மட்டும் தான், மூலப்பதிவில் திருத்தி இருக்கிறேன்.
வருகைக்கு நன்றி ஆயில்ஸ்
ஆகா!!!!!!!!! இந்த படத்தை இயக்கியது ஒரு பெண் இயக்குனாரா!!??
கலக்கல் தொகுப்பு தல ;)
தல,
மிக அருமையான தொகுப்பு, நன்றாக இருந்தது.
வருகைக்கு நன்றி தல கோபிக்கும், நண்பர் கார்த்திகேயனுக்கும்
அன்புள்ள றேடியோஸ்பதி..
அணிலுக்கு மூனு கோடு போட்ட ராமரே எனத் தொடங்கும் ராமராஜன், கவுதமி நடித்த பாடல் எந்த திரைப்படம்?
அது படத்தில் கவுதமி பாடும் பாடல்தானா?
அதன் வீடியோ சுட்டி கிடைக்குமா?
அன்புடன்,
ஜெயக்குமார்
அணிலுக்கு மூனு கோடு போட்ட ராமரே எனத் தொடங்கும் ராமராஜன், கவுதமி நடித்த பாடல் எந்த திரைப்படம்?//
வணக்கம் நண்பரே
அந்தப் பாடலை தற்சமயம் நினைவு படுத்த முடியவில்லை, ஆனால் அது தேவா இசையமைப்பில் வந்தது. நிச்சயமாக ராமராஜன், கெளதமி நடித்ததாக நினைக்கவில்லை. சரத்குமார் படம் என்று நினைக்கிறேன்
அணிலுக்கு மூனு கோடு போட்ட ராமரே எனத் தொடங்கும் ராமராஜன், கவுதமி நடித்த பாடல் எந்த திரைப்படம்?//
வணக்கம் நண்பரே
அந்தப் படம் பெயர், பொண்டாட்டி ராஜ்ஜியம், நடிப்பு சரவணன், ரஞ்சிதா
தகவலைத் தந்த சொக்கருக்கு நன்றி ;)
நன்றி கானா பிரபா..
ஜெயக்குமார்
இன்று தான் உங்கள் வலைபக்கத்துக்கு முதல் தடவையாக வந்திருக்கிறேன்...உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை...அதிலும் இசைஞானியையும் அவரின் பாடல்களையும் பற்றிய தொகுப்பு மிகவும் அருமை...இசைஞானியின் தீவிர ரசிகை நான்...அலுவலகத்தில் மாத்திரம் இணையத்தை பாவிக்கும் காரணத்தால் ஆற அமர இருந்து வசிக்க முடியவில்லை.பகிர்ந்துகொண்டதற்கு நன்றிகள்....எங்கே இருந்து தான் இவ்வளவு தகவல்களை சேகரித்து வைத்திருக்கிறீர்களோ எண்டு ஆச்சரியமாக இருக்கிறது
அஞ்சலி
Post a Comment