Pages

Wednesday, December 2, 2009

2009 றேடியோஸ்பதி திரையிசைப் போட்டி: மூன்று முத்தான பரிசுகளுடன்

வணக்கம், வந்தனம், சுஸ்வாகதம், welcome to றேடியோஸ்பதி.
2009 ஆம் ஆண்டு றேடியோஸ்பதி போட்டியில் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக றேடியோஸ்பதி ஒவ்வொரு ஆண்டின் டிசம்பர் மாதத்தில் அந்தந்த ஆண்டுகளில் வெளிவந்த தமிழ்த் திரையிசைப் பாடல்களை மையமாக வைத்துப் போட்டிகளை நடாத்தியதை நீங்கள் அறிவீர்கள். தெரியாதவர்களுக்காக

2007 இல்
உங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்?

2008 இல்
2008 இன் சிறந்த இசைக்கூட்டணி?

ஆகிய போட்டிகளை உங்கள் ஆதரவோடு வெற்றிகரமாக நடத்தி முடித்தோம். அந்த வகையில்
இந்த 2009 ஆம் ஆண்டு மூன்றாவது ஆண்டாக வரும் றேடியோஸ்பதி போட்டியை சற்று வித்தியாசமாகத் தரலாம் என்று வந்திருக்கின்றேன்.

2009 ஆம் ஆண்டில் வெளியான தமிழ்த்திரைசைப்பாடல்கள், மற்றும் 2008 இல் பாடல்கள் வெளியாக 2009 ஆம் ஆண்டில் வெளியான தமிழ்த்திரைப்படங்கள், மற்றும் தமிழ்த் திரையிசைமைப்பாளர்களை மையப்படுத்தி இந்தப் போட்டி அமைகின்றது.

போட்டி இதுதான், இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் மூன்று தலைப்புக்களில் எதையாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து நீங்கள் கட்டுரை அல்லது பதிவு எழுத வேண்டும். பதிவர்கள் தமது சொந்த வலைப்பதிவில் எழுதிய பின்னர் கட்டுரைக்கான தொடுப்பை இங்கே பின்னூட்டமாகத் தர வேண்டும்.

பதிவர்களாக இல்லாதவர்கள் தமது கட்டுரைகளை kanapraba@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்தால் தற்காலிகமாக ஒரு இடத்தில் அது வலைப்பதிவாகத்
தரப்படும்.

போட்டிக்கான ஆக்கங்கள்

1. 2009 ஆம் ஆண்டில் அதிகம் கவனிக்கப்பட்ட/கவனத்தை ஈர்த்த தமிழ்த்திரையிசைமைப்பாளர்

ஏன் கவனிக்கப்பட்டிருந்தார், அந்தத் தகுதியை எட்ட அவர் உழைத்த உழைப்பு என்ற விரிவான அலசல் எதிர்பார்க்கப்படுகின்றது. இங்கே ஒரு விஷயம் குறித்த இசையமைப்பாளர் தமிழ்த் திரையில் தான் 2009 இல் பங்களித்திருக்க வேண்டியதில்லை. தமிழ் இசையமைப்பாளரின் பொதுவான இசைச் சாதனை. அங்கீகாரம் குறித்த கோணத்தில் எழுதலாம்

2. 2009 ஆம் ஆண்டில் வெளியான படங்களில் பாடல்களைச் சிறப்பாகவும், பொருத்தமாகவும் பயன்படுத்திய படங்கள் குறித்த அலசல்
பாடல்கள் திரைப்படங்களுக்குத் தேவை இல்லை என்ற சூழலில் 2009 இல் வெளியான தமிழ்த்திரைப்படங்களில் பொருத்தமாகப் பாடல்களைப் பயன்படுத்திய படங்கள்

3. கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடும் போது 2009 ஆண்டின் தமிழ்த் திரையிசை எப்படி இருந்தது?

ஏற்றம் மிகுந்ததாக இருந்தது அல்லது ஒப்பீட்டளவில் 2009 ஆம் ஆண்டு இசைவரவுகள் முன்னைய ஆண்டுகள் மாதிரி இல்லை என்ற கோணத்தில் விளக்கமான ஒப்பீடுகள் வேண்டப்படுகின்றன.


2009 ஆம் ஆண்டில் வெளியான திரையிசைப்பாடல்களின் பட்டியலைக் காண

போட்டி விதிமுறைகள்

1. போட்டிக்கான ஆக்கங்களை ஜனவரி 1, 2010 ஆண்டுக்கு முன்னதாக எழுதிப் பதிவாக்க வேண்டும். பதிவுத்தொடுப்பை அறியத் தரவேண்டியது அவசியம்.

2. ஒருவர் மூன்று தலைப்புக்களிலும் தனித்தனி ஆக்கமாக எழுதலாம்.

3. போட்டியில் பங்கேற்கும் கட்டுரைகளில் இறுதிச் சுற்றுக்குத் தகுதியானவை தேர்ந்தெடுக்கப்பட்ட நடுவர்களால் முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதிச் சுற்றுக்கு விடப்படும். இறுதிச் சுற்றில் உங்களின் தீர்ப்பே முடிவானது. ஆகக்கூடிய வாக்குகள் பெற்ற மூன்று ஆக்கங்கள் தேர்ந்தெடுக்கப்படும். நடுவர்களாகப் பங்கேற்போர் போட்டியில் பங்கு பெறத் தடை உண்டு

4. உங்கள் ஆக்கங்கள் வெறும் படங்களின்/இசையமைப்பாளர்களின் பட்டியலாக இருந்தால் புள்ளிகள் குறைவாக வழங்கப்படும் அதே நேரம் உச்ச பச்ச மேதமையான கர்னாடக இசை ஒப்பீடு, ராக ஒப்பீடு போன்றவையும் எதிர்பார்க்கப்படவில்லை. உங்கள் ஆக்கம் எல்லோரையும் சென்றடையும் விதத்தில் உள்ள இசையாக இருக்கட்டுமே.

முத்தான அந்த மூன்று ஆக்கங்களுக்கும் கிடைக்கும் பரிசு தனித்துவமானது.
தமிழ் சினிமா இசை சம்பந்தப்பட மூன்று நூல்கள் வென்ற ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வழங்கப்பட இருக்கின்றன.



11 comments:

ஆயில்யன் said...

சூப்பரூ பாஸ் :))

ஆயில்யன் said...

//உங்கள் ஆக்கங்கள் வெறும் படங்களின்/இசையமைப்பாளர்களின் பட்டியலாக இருந்தால் புள்ளிகள் குறைவாக வழங்கப்படும் அதே நேரம் உச்ச பச்ச மேதமையான கர்னாடக இசை ஒப்பீடு, ராக ஒப்பீடு போன்றவையும் எதிர்பார்க்கப்படவில்லை. உங்கள் ஆக்கம் எல்லோரையும் சென்றடையும் விதத்தில் உள்ள இசையாக இருக்கட்டுமே.///

உங்களோட இந்த அப்ரோச் ரொம்ப புடிச்சிருக்கு! :)

சுவாசிகா said...

சூப்பரு..

நான் போட்டியில் குதிச்சாச்சு :)

அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me

thamizhparavai said...

சூப்பர் போட்டி....
வாழ்த்துக்கள் கானா...

கலைக்கோவன் said...

//வணக்கம், வந்தனம், சுஸ்வாகதம், welcome to றேடியோஸ்பதி.
2009 ஆம் ஆண்டு றேடியோஸ்பதி போட்டியில் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்//
ஓபனிங்கே சூப்பரா இருக்கே..,

கொஞ்சம் மூளைக்கு
வேலை கொடுக்கனும் போல...

ஆனாலும்
//முத்தான அந்த மூன்று ஆக்கங்களுக்கும் கிடைக்கும் பரிசு தனித்துவமானது.//

ஆயிரம் பொன்னாச்சே..,
ஆயிரம் பொன்னாச்சே...

தமிழன்-கறுப்பி... said...

நல்ல விசயம்..அண்ணன்.

:)

கானா பிரபா said...

2009 ஆம் ஆண்டில் வெளியான திரையிசைப்பாடல்களின் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது

pudugaithendral said...

matter நல்லா இருக்கு பாஸ்

வந்து பொறுமையா படிச்சு பதிவு போடறேன்.

சென்ஷி said...

அருமையான போட்டி கானா.

நிஜமா நல்லவன் said...

சூப்பர் பாஸ்!

கோபிநாத் said...

கலக்குறிங்க தல...;)))