இந்த வாரம் சிறப்பு நேயராக வருபவர் இலங்கையின் ஊட்டி என்று வர்ணிக்கக்கூடிய குளு குளு பிரதேசம் நுவரெலியாவில் இருந்து "யோ வாய்ஸ்" யோகா.
கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக வலையுலகில் இருக்கும் யோகாவின் பதிவுகள் போலவே அவரது முத்தான ஐந்து ரசனைகளும் அமைந்திருக்கின்றன. தொடர்ந்து யோகா பேசுவதைக் கேட்போம்
எனது பாடல் ரசனை பொதுவாக மற்றவரோடு ஒத்து போவதில்லை. ஆனால் என்னை பொருத்தவரையில் ரொம்ப சந்தோஷமா பாட்டு கேட்பேன். ரொம்ப துக்கமா அதுக்கும் பாட்டு கேட்பேன். பாடல்கள் எனக்கு எபபோதும் உற்சாகம் தருபவை. ஏ.ஆர். ரகுமானின் தீவிர ரசிகன். ஏ.ஆருக்கு ஆஸ்கார் கிடைத்த அன்று நாங்கள் நண்பர்கள் விருந்து வைத்து கொண்டாடினோம். எனக்கு பிடித்த 5 பாடல்கள்.
01. விழிகளின் அருகினில் வானம் (படம் - அழகிய தீயே)
எனது மனநிலை எந்த நிலையிலிருந்தாலும் அதை சாந்தப்படுத்த கூடிய பாடல். இந்த பாடல் எனக்கு பிடித்தற்கு காரணம் இந்த பாடலில் சகலமும் பரிபுரணமாக இருப்பதனாலாகும். இசை, பாடல் வரிகள், குரல் என இந்த பாடலின் சிறப்பு சகலவற்றிலும் தங்கியுள்ளது. பாடல் வரிகள் வாலி என சில இணையதளங்களிலும் கவி வர்மன் சில இணையதளங்களிலும் உள்ளது.மிகவும் அழகான வர்ணனைகள், அதை அழகாக இசையமைத்தவர் ரமேஷ்விநாயகம்.
02. என்று உன்னைக் கண்டேனோ பெண்ணே (படம் - இதயமே இதயமே)
ஒரு டப்பிங் படத்தில் அமைந்திருந்தாலும் இந்த பாடல் மனதை ஈர்க்குமென்பதில் சந்தேகமேயில்லை. முக்காலா போன்ற பாடல்கள் பாடிய மனோவா இந்த மெல்லிய பாடலை பாடினார் என்பது ஆச்சர்யம். இந்த பாடலின் காணொளியை இதுவரை பார்த்ததில்லை. இப்போதும் இந்த பாடல் கேட்க வேண்டுமானால் வீட்டிலுள்ள டேப் ரெக்கார்டரில்தான் கேட்பேன். காரணம் இந்த பாடல் கேசட்டில்தான் என்னிடம் இருக்கிறது.
03. புது வெள்ளை மழை (படம் ரோஜா)
ஏ.ஆர் இசையமைத்த முதல் படத்திலுள்ள பாடல். சுஜாதா, உன்னி மேனன் குரல்களும், அந்தகாலத்தில் மிகவும் வித்தியாசமான இசையையும் கொண்ட இந்த பாடல் என்னை ஈர்த்ததற்கு இன்னொரு முக்கிய காரணம் இதிலுள்ள கோரஸ். இப்பவும் வானொலியில் இந்த பாடல் போகும் போது இது போல் இன்னொரு பாடல் இல்லை என தோன்றும்.
04. இளைய நிலா பொழிகிறது (படம் - பயணங்கள் முடிவதில்லை)
இசைஞானியின் இசையில் எஸ்.பீ.பீ யின் காந்தக்குரலில் ஒலிக்கும் இந்தப்பாடல் கேட்க கேட்க சலிக்காத அவ்வளவு இனிமையான பாடல். இந்த பாடல் பிடிக்க இன்னொரு காரணம் எங்களது சீனியர் ஒருத்தர் பள்ளி நாட்களில் இந்த பாடலை தனது பொக்ஸ் கிட்டாரில் அழகாக வாசிப்பதும் ஆகும். இந்த பாடலை நடுராத்திரி தூக்கத்திலிருந்து என்னை எழுப்பி கேட்க சொன்னாலும் கேட்பேன். அவ்வளவுக்கு இந்த பாடலை நான் காதலிக்கிறேன்.
05. வெள்ளைப்பூக்கள் (படம் - கன்னத்தில் முத்தமிட்டால்)
ஏ. ஆரின் இசையில் அவரே பாடிய பாடல். இந்தபாடல் எனக்கு பிடிக்க காரணம் பாடிய ஏ.ஆரின் குரல். ”முஸ்தபா முஸ்தபா”, ”அந்த அரபிக்கடலோரம்” பாடியவருக்கு இப்படி ஒரு பாடல் பாட முடியுமென நாங்கள் நினைத்திருக்கவில்லை. ஆஸ்கர் தமிழனின் குரலில் உள்ள பாடல்களில் எனக்கு என்றென்று் பிடித்த பாடல்.
நன்றி
யோகா (யோவாய்ஸ்)
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
ரொம்பவும் நன்றி அண்ணா
நல்ல தெரிவுகள் யோகா...நான் அடிக்கடி கேட்கும் பாடல்கள் எல்லாமே. அதுவும் ‘விழிகளில் அருகினில் வானம்' கேட்டு நெடுநாளாயிற்று... திரும்பவும் கேட்டுத் தலையாட்டியபடியே பதிலிடுகிறேன்... (உங்கள் படமும் stylish...wow)
யோ வொய்ஸின் தெரிவுகள் அருமை....
2 ஆவது பாடலைத் தவிர மற்றப் பாடல்கள் என் விருப்புக்களே....
2 ஆவது பாடலை இனித் தான் கேட்க வேண்டும்.....
அட யோகா நுவரேலியாகாரரா?? ஹனிமூன் அங்கதான் போனோம் :)
யோகாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ;))
யோகா அட்டகாசமான தொகுப்பு. ;)
முதல் பாடலே எனக்கு பிடித்த பாடல் ;) இந்த பாடல் காட்சியும் மிக அருமையாக எடுத்திருப்பாங்க. நாயகனும் நாயகியும் உடைகளும் கூட மிக அழகாக இருக்கும்.
2வது எங்கோ கேட்டது போல இருக்கு இப்பதான் கேட்பது போலவும் இருக்கு ஆனா நல்லாயிருக்கு ;)
3வது சுஜாதாவின் குரல் எனக்கு மிகவும் பிடிக்கும். மிக அருமையான காதல் பாடல் ;))
4வது ஒன்னும் சொல்வதறக்கு இல்லை..இசைஞானியின் பாடல் வேற..;))
5வது நீங்கள் சொல்வது போல நானும் நினைத்திருக்கிறேன். மிக மென்மையாக வரும்.
அருமையான தொகுப்பு உங்களூடையது. உங்களுக்கும் தல கானாவுக்கும் நன்றிகள் ;))
விழிகளின் அருகினில் வானம் எனக்கும் ரொம்ப பிடிச்ச பாட்டு. நல்ல தொகுப்பு
விழிகளின் அருகினில் வானம்.. ஒருகாலத்தில் எனது opening song.. வானொலியில் இருந்த காலத்தில் எனது நிகழ்ச்சிகளை இந்தப் பாடலோடுதான் ஆரம்பிப்பேன் :)
நல்ல பாடல் தெரிவுகள்.
அதிலும் முதல் பாடல்...ஆஹா
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே :)
இரண்டு நம்ம ரஹ்மான்
பாடல்கள் என்னை கேட்டால எல்லாம் ரஹ்மான் தான் சொல்லுவேன்
Post a Comment