80களில் ரஜனி - கமல் என்ற எதிரெதிர் துருவ நட்சத்திரங்கள் நடிப்புலகில் இருந்தது போல எஸ்.பி.பாலசுப்ரமணியம் - மலேசியா தேவன் குரல்களும் தனித்துவமாக முன்னணியில் இருந்த குரல்கள். கே.ஜே.ஜேசுதாஸ் தன் பாணியில் தனி ஆவர்த்தனம் கொடுத்துக் கொண்டிருக்க எஸ்.பி.பி, மலேசியா வாசுதேவன் ஆகிய இருவரும் வித்தியாசமான பாடல்களைக் கலந்து கட்டித் தந்து கொண்டிருந்தார்கள்.
ஒரு காலகட்டத்தில் ரி.எம்.செளந்தரராஜன் குரலுக்கு மாற்றீடாக யாரையும் பொருத்திப் பார்க்க முடியாத சிவாஜி கணேசனுக்கு மலேசியா வாசுதேவனின் குரல் அச்சொட்டாக ஒட்டிக் கொண்டது.
அத்தோடு சூப்பர் ஸ்டாராக அப்போது மிக வேகமாக வளர்ந்து கொண்டிருந்த ரஜினிகாந்திற்கு மலேசியா வாசுதேவன் குரல் தான் தொடர்ந்து பல்லாண்டு காலம் பாடல் கை கொடுத்தது.
நடிகராக வரவேண்டும் என்று சினிமாத்துறைக்கு வந்தவர் பாடகராகப் புகழ் பெற்றதோடு நில்லாமல் தன் நடிப்புத்திறமைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தமிழ் சினிமாவின் தனித்துவமான வில்லன், சக குணச்சித்திர நடிகராகக் கவர்ந்து கொண்டார். அதில் முத்தாய்ப்பாக இருப்பது முதல் வசந்தம் படத்தில் கவுண்டராக சத்தியராஜோடு மோதிய படம். அந்தப் படத்தில் சத்தியராஜாவுக்கு மனோ குரல் கொடுக்க, காட்சியில் நடித்ததோடு குரல் கொடுத்திருக்கும் மலேசியா வாசுதேவன் பாடும் அந்தப் பாடற்காட்சி "சும்மா தொடவும் மாட்டேன்"
சாமந்திப் பூ உட்பட நான்கு படங்களுக்கு இசையமைத்தது மலேசியா வாசுதேவனின் இன்னொரு பரிமாணம்.
1990 ஆம் ஆண்டு மலேசியா வாசுதேவனை இயக்குனராகவும் தமிழ் சினிமா அறிமுகப்படுத்திக் கொண்டது. ஹரிஷ் என்ற இளம் நாயகன் நடிக்க "நீ சிரித்தால் தீபாவளி" படத்தை இயக்கியிருந்தார் மலேசியா வாசுதேவன். 90 களின் ஆரம்பத்தில் வைகாசி பொறந்தாச்சு மூலம் பிரசாந்த் ஆரம்பித்து வைத்த புதுமுகப் புரட்சி மூலம் 90, 91 களில் ஒரு சில முன்னணி நடிகர்கள் தவிர மற்றைய அனைத்துமே புதுமுகங்களோடு வந்த படங்களாக இருந்தன. இந்த வரிசையில் நீ சிரித்தால் தீபாவளி படம் அமைந்திருந்தாலும் அந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இவர் சிட்னிக்கு இசை நிகழ்ச்சிக்காக வந்தபோது "நீ சிரித்தால் தீபாவளி" படத்தை ஞாபகப்படுத்திப் பேசினேன். "அந்தப் படத்தோட டிவிடி கிடைச்சா கொடுங்களேன்" என்றரே பார்க்கலாம். படம் இயக்கியவர் கையிலேயே அந்தப் படம் இல்லைப் போலும் ;)
நீ சிரித்தால் தீபாவளி படத்தில் இருந்து "சிந்து மணி புன்னகையில்" பாடலை வயலின் போன்ற வாத்தியக் கூட்டணியில் சோக மெட்டில் பாடுகின்றார் கே.ஜே.ஜேசுதாஸ்.
நீ சிரித்தால் தீபாவளி படத்தில் இடம்பெற்ற முன்னர் கேட்ட அதே பாடலை ஜோடிப்பாடலாக சந்தோஷ மெட்டில் தருகின்றார்கள் மலேசியா வாசுதேவன், சித்ரா கூட்டணி. இந்த சந்தோஷ மெட்டு அதிகம் கேட்டிராத பாடலாக இருந்தாலும் பாடலுக்கு இசைஞானி இளையராஜா கொடுத்திருக்கும் மென்மையான மெட்டு இதமான தென்றலாக இருக்கின்றது.
சாமந்திப் பூ படம் மலேசியா வாசுதேவன் இசையமைத்த படங்களில் ஒன்று. சிவகுமார், ஷோபா நடித்த இந்தப் படம் வருவதற்கு முன்னரே நடிகை ஷோபா தற்கொலை செய்து கொண்ட துரதிஷ்டம் இப்படத்தோடு ஒட்டிக் கொண்டது. படத்தின் இறுதிக்காட்சியில் ஷோபாவின் நிஜ மரண ஊர்வலத்தையும் காட்டியிருப்பார்கள். இந்தப் படத்தில் இருந்து இரண்டு இனிய பாடல்கள்
முதலில் "ஆகாயம் பூமி" என்ற பாடலை இசையமைத்துப் பாடுகின்றார் மலேசியா வாசுதேவன்.
சாமந்திப் பூ படத்தில் இருந்து இன்னொரு தெரிவாக வரும் இனிமையான ஜோடிக்கானம் ஒரு காலத்தில் இலங்கை வானொலியில் கலக்கிய பாடல். "மாலை வேளை ரதிமாறன் வேலை" என்ற இந்தப் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.பி.சைலஜா இணைந்து பாடுகின்றார்கள்.
மலேசியா வாசுதேவன் தன் ஆரம்ப காலகட்டத்தில் மணிப்பூர் மாமியார் படத்தில் "ஆனந்தத் தேன் காற்று தாலாட்டுதே" பாடலை திருச்சி லோகநாதன் குரல் பாணியில் பாடியிருப்பார். அதே போல திறமை என்ற படத்தில் உமாரமணனோடு பாடிய "இந்த அழகு தீபம்" பாடலிலும் அந்தப் பழமை என்றும் இனிமையான குரலைக் காட்டியிருப்பார். இதோ அந்தப் பாடல்
நிறைவாக வருவது, என் விருப்பப் பாடல் பட்டியலில் இருந்து இன்றுவரை விடுபடாத பாடலான என் ஜீவன் பாடுது படத்தில் வரும் "கட்டி வச்சுக்கோ எந்தன் அன்பு மனச" பாடலை மலேசியா வாசுதேவனுடன் இணைந்து பாடுகின்றார் எஸ்.ஜானகி. இந்தப் பாடலும் பெரிய அளவில் பிரபலமாகாத ஆனால் மலேசியா வாசுதேவனுக்கே தனித்துவமான முத்திரைப்பாடலாக அமைந்து விட்டது
Wednesday, October 21, 2009
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
Nice Post. Thanking for collating and serving some rare songs of MV.
//அத்தோடு சூப்பர் ஸ்டாராக அப்போது மிக வேகமாக வளர்ந்து கொண்டிருந்த ரஜினிகாந்திற்கு மலேசியா வாசுதேவன் குரல் தான் தொடர்ந்து பல்லாண்டு காலம் பாடல் கை கொடுத்தது.//
சூப்பர் காம்பினேஷன்!
ஆசை நூறு வகை என்றும் இவர் புகழ் பாடும் பாடலாச்சே :)
(அது போடலயா பாஸ்:( )
அருமையான தொகுப்பு, குறிப்பா அந்தக் கடைசிப் பாட்டுக்காக ஸ்பெஷல் நன்றி கானா :)
- என். சொக்கன்,
தலைவர்,
அகில உலக கானா பிரபா ரசிகர் மன்றம்,
பெங்களூர்.
அருமையான கலைஞர் அவர்...:-)
Dear Gaana Prabha,
Thanks for Nee Sirithal Deepavali songs..
I remember, hearing to vivith bharathi, the so-called trailer or munnotam of this movie.. nostalgic.
there is another movie, produced by JayaChithra, forgot the name.. That also music scored by Raja.. Very gud songs.. pls post.
இப்பத்தான் உறுப்பினர் ஆனேன் அதான் ஒரு எண்ட்ரீ
ஆயில்யன்.
மன்ற உறுப்பினர்
அகில உலக கானா பிரபா ரசிகர் மன்றம்,
தோஹா கிளை
பிரபா அவர்களுக்கு
பாடல்கள் அருமை,கடைசி பாடலை தவிர வேறு எதையும் இது வரை கேட்டது இல்லை
பாடல் தொகுப்புக்கு மிக்க நன்றி
சு மகாராஜன்
அமீரகம்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வீரு
ஆயில்ஸ்
மலேசியா - ரஜினி ஸ்பெஷல் தொகுப்பில் வரும் கவலை கொள்ள வேண்டாம் ;)
சொக்கா
எனக்கும் கட்சியா, இருங்க உங்களுக்கும் ஒண்ணு ஆரம்பிச்சு நான் தலைவர் ஆயிடுறேன் ;)
ஆவ்வ்வ் , இவ்வளவு சுலபமான விடை எனக்குத்தெரியாமப்போச்சே
அடடா, ரசிகர் மன்றத்துக்கும் கட்சிக்கும் வித்தியாசம் தெரியாத அளவு அப்பாவியா நீங்க? :)))))
- என். சொக்கன்,
பெங்களூரு.
nchokkan said...
அடடா, ரசிகர் மன்றத்துக்கும் கட்சிக்கும் வித்தியாசம் தெரியாத அளவு அப்பாவியா நீங்க? :)))))
//
தல
ரசிகர் மன்றமே கட்சி ஆரம்பிப்பதற்கான demoன்னு தெரியாம இருக்கீங்களே ;-)
ஆஹா, அப்ப நான்தான் அப்பாவியா? நீங்க ‘அடப்பாவி’யா? ;)
- என். சொக்கன்,
பெங்களூரு.
வருகைக்கு டொன் லீ ;)
வணக்கம் சுட்டி
நீங்கள் கேட்ட ஜெயச்சித்ரா தயாரிப்பில் வந்த படம் புதிய ராகம் எல்லாப் பாட்டுமே கலக்கல். கண்டிப்பாக விரைவில் வரும்.
ஆயில்ஸ்
மன்றம் சார்பில் சேர்த்த நிதியை ஒழுங்கா அனுப்பிடணும் ஒகே
வருகைக்கு மிக்க நன்றி மகாராஜன்
சின்ன அம்மிணி
நான் சொன்னேன் தானே இலகுவான கேள்வின்னு
//ஒரு காலகட்டத்தில் ரி.எம்.செளந்தரராஜன் குரலுக்கு மாற்றீடாக யாரையும் பொருத்திப் பார்க்க முடியாத சிவாஜி கணேசனுக்கு மலேசியா வாசுதேவனின் குரல் அச்சொட்டாக ஒட்டிக் கொண்டது.//
மலேசியா வாசுதேவன் முதல் முதலாக சிவாஜிக்கு பின்னணி பாடிய பாடல்.. 'மாடப்புறாவோ.. இல்லை மஞ்சள் நிலாவோ' படம்.. இமைகள்.
இந்த இணைப்பை அழுத்தினால் பாடலை பார்க்கலாம்.
http://oruwebsite.com/music_videos/imaigal/madapuravo-illai-manjal-nilavo-video_3bf283643.html
வணக்கம் சுதா
சுட்டிக்கும், மேலதிக தகவல்களுக்கும் மிக்க நன்றி
உங்களது வேலைகளையெல்லாம் முடித்த பிறகு,,, ஆறுதலாக நம்ம வலைப்பக்கமும் வந்து பார்த்து ஏதாவது சொல்லிட்டு போனால் தானே ... எங்களுக்கும் இன்னும் ஏதாவது கிறுக்க ஆசை வரும்.... வாங்க எந்த நேரமும் வரலாம்.... கதவுகள் திறந்தே இருக்கும் என்று சொல்ல மாட்டன் ஏனென்றால் , நமக்கு கதவே கிடையாது...!!!
முடிந்தால் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் இ மெயில் முகவரியை தந்துதவுங்கள்.
It was exciting to know about the songs and more on MV. Thanks. I like the way "Katti vachuko" starts - good to see you gather rare songs too.
-Toto
www.pixmonk.com
http://musicshaji.blogspot.com/2010/08/blog-post_16.html
Post a Comment