இந்த வாரம் மீண்டும் ராஜா வாரம்.
ஒரு நிகழ்ச்சியில் பிரபல பாடகர் சொன்னதையே புதிரா போட்டு வைக்கிறேன். ஆனால் அந்தக் குறிப்பிட்ட பாடலை சொன்ன பாடகர் பாடவில்லை.
மெல்லிசை மன்னரை எப்போது பார்த்தாலும் "அண்ணே நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு படம் பண்ணனும்ணே" என்று சொல்வாராம் இளையராஜா. அந்த நல்வாய்ப்பு ஏவிஎம் தயாரித்து ஆர்.சுந்தரராஜன் இயக்கிய "மெல்லத் திறந்தது கதவு" ரூபத்தில் வந்தது.
மெல்லிசை மன்னர் மெட்டுப் போட இளையராஜாவின் இசையருவி கலக்க, பாடல்கள் எல்லாம் தேன் மாரியாய். "ஒரே ஒரு பாடலை மட்டும் நானே மெட்டுப் போட்டு இசையமைக்க விடுங்கண்ணே" என்று ஆசையாகக் கேட்டு, இளையராஜாவே மெட்டுப் போட்டு இசையமைத்த அந்தப் பாட்டு எது என்பது தான் கேள்வி. ஒரே ஒரு க்ளூ கொடுப்போம் என்றால் அதையும் கப்பென்று பிடிச்சிடுவீங்க அதனால் எல்லாப் பாட்டையும் கேட்டு ராஜா மெட்டு கேட்குதான்னு தேடிப்பார்க்கவும் ;)
போட்டி முடிவடைந்தது, இளையராஜா மெட்டுப் போட்டு இசையமைத்த பாடல்
குழலூதும் கண்ணனுக்கு (சித்ரா). இந்தத் தகவலை என்னோடு பாட்டுப் பாடுங்கள் நிகழ்ச்சியில் எஸ்.பி.பி ஆல் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தப் பாடல் பின்னர் சீனி கம் என்ற ஹிந்தி திரைப்படத்திற்காகவும் ராஜாவால் மீள மெட்டுப் பயன்படுத்தப்பட்டது. இப்படத்தின் பின்னணி இசைத்தொகுப்பு வார இறுதியில் வெளியாகும்
Subscribe to:
Post Comments (Atom)
39 comments:
//ஜில் ஜில் ஜில் மனதில் //
தில் தில் தில் மனதில் என நினைக்கிறேன், இந்த பாடலாகவும் இருக்கலாம்.
வணக்கம் நாரதமுனி
தனிமடலில்/சாட்டில் தொடர்பு கொள்ள இங்கே வாங்க kanapraba@gmail.com
ஆங் இவ்ளோ ஈசியான கேள்விக்கெல்லம் !!!!!!!!!!!!???????????????????????????????????
பதில் சொல்ல முடியாது
குழலூதும் கண்ணனுக்கு (சித்ரா) :)
// அத்திரி said...
ஆங் இவ்ளோ ஈசியான கேள்விக்கெல்லம் !!!!!!!!!!!!???????????????????????????????????
பதில் சொல்ல முடியாது
//
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்!
அத்திரி
எங்க் அதையும் சொல்லுங்க பார்ப்போம் ;)
திரட்டி.காம்
தவறான பாட்டு
ஆயில்ஸ்
கலக்கீட்டீங்
Kuzhaloodhum kannanukkku :)))))
paatu correcta :D
’குழலூதும் கண்ணனுக்கு’ பாடல், சரியா?
அது தன்னுடையது என்பதால்தானே அதனைத் தனது ‘சீனி கம்’ ஹிந்திப் படத்திலும் பயன்படுத்திக்கொண்டார் ராஜா?
- என். சொக்கன்,
பெங்களூர்.
G3 அதே தான் ;)
சொக்கரே
உங்க பாயிண்ட் வியக்க வைக்கிறது, அந்தக் கோணத்தில் பார்த்து விடை சொல்லவே நான் அந்த க்ளூ சொல்லாமல் விட்டேன் கலக்கீட்டிங்
'kuzhaloothum kannanukku'...
because he has used it in 'cheenikum' also...
தல
குழலூதும் கண்ணனுக்கு (சித்ரா)
இது தான் என்னோட பதில் சரியான்னு சொல்லுங்க ;)
ஆனா ஒன்னு பக்கத்து பெஞ்சுல எட்டி பார்த்தேன் ;))
குழலூதும் கண்ணனுக்கு (சித்ரா)..
நான் நினைக்கும் காரணம், 'சீனி கம்' படத்தில் மீண்டும் பயன்படுத்தியிருப்பதால்.. சரியா??
இசைஞானியின் இசையில் வந்த பாடல் "குழலூதும் கண்ணனுக்குக் குயில் பாடும்" என்று நினைக்கிறேன். காரணம், தன்னுடைய 'சீனி கம்' (இந்தி) திரைப்படத்தில் இதே மெட்டை உபயோகித்திருக்கிறார்.
praba, sorry to type in english..
i think the answer is s. janaki's "vaa vennila...."
ஊருசனம் தூங்கிருச்சு ?????
really tough prabha
விடை தெரிஞ்சிருச்சு. சொன்னாலும் என் பேருக்குப் போடாதீங்க. ஏன்னா கேட்டுத் தெரிஞ்ச விடை. சொந்த விடையில்லை.
குழலூதும் கண்ணனுக்குப் பாட்டு.
தமிழ்பறவை
சொக்கன் போலவே அந்தக் கோணத்தில் ஆராய்ந்து சொல்லியிருக்கீங்க, கலக்கல்
தல கோபி
பக்கத்து சீட்டில் சரியாதான் சொல்லியிருக்காக
அரவிந்த்
கலக்கல்
நிலாக்காலம்
பின்னீட்டீங்க
It must be kulaloothum kannananukku. Otherwise raja wouldnt have rearranged it for cheenikum.
அருண்மொழி வர்மன் & முரளிக்கண்ணன்
நீங்கள் சொன்ன பாட்டு அதுவல்ல,
ஜிரா
இருந்தாலும் சொல்லீட்டிங்களே, கலக்கல் ;)
ஜேகே
அதே தான் வாழ்த்துக்கள்
பிரபா, இன்னும் ஒரு சந்தர்ப்பம்... அது குழலூதும் கண்ணனுக்கு பாடலா... அண்மையில் எஸ் பி பி ஒஉர் நிகழ்வி இது பற்றி சொன்னார்
குழலூதும் மெட்டு கேட்குதான்னு
சொல்ல வரீங்களா ...
கேட்குது கேட்குது ....
நீங்க சொன்ன க்ளு.
அருண்மொழிவர்மன்
இந்த முறை சரியான தேர்வு தான் ;)
கலைக்கோவன்
ஆகா வாங்க ஹைக்கூ பார்ட்டி, நான் வேற சரின்னு சொல்லணுமாக்கும் ;)
குழலூதும் கண்ணனுக்கு என இளையராஜாவின் அன்றும் இன்றும் என்றும் நிகழ்ச்சியில் கெட்டதாய் ஞாபகம்
இரா பிரஜீவ்
சரியான பதில் வாழ்த்துக்கள்.
குழலூதும் கண்ணனுக்கு (சித்ரா)
சரியா இருந்தா மட்டும் சொல்லுங்க
தப்பா இருந்தா அப்படியே விட்டுடுங்க
என்னோடு பாட்டு பாடுங்கள் நிகழ்ச்சியில் பாலா சொல்லியிருந்தார். ஏதோ குழப்பத்தில் மாறி சொல்லிவிட்டேன்
ப்ரீதம் மற்றும் தங்கக் கம்பி
சரியான கணிப்பு ;)
ஊருசனம் தூங்கிருச்சு (எஸ்.ஜானகி்)
குழலூதும் கண்ணனுக்கு (சித்ரா)
idhu rendula edhuna onnu dhaannu ninaikkiren
adhilum குழலூதும் கண்ணனுக்கு (சித்ரா)ennudaiya mudhanmai bhadhil
correcta prabha
ஆனால் அந்தக் குறிப்பிட்ட பாடலை சொன்ன பாடகர் பாடவில்லை.
indha clue vachidhaan kandu pidikka try pannen.
சுரேஷ்
அதே தான் ;)
போன புதிர்ல கண்ணு வச்சிட்டீங்க, இதுக்கு பதில் தெரியல.
சுகமான ராகங்கள் ??
பாவன குரு பவன புரான்னு கூட மெல்லத்திறந்தது கதவுல ஒரு பாட்டு இருக்கு
சின்ன அம்மணி
சுகமான ராகங்கள்னு ஒரு பாட்டு அதில் இருக்கா என்ன ;)
பாவன குருவை விட்டுட்டேன் தான் ஆனா அதில்லை
vaa vennila unnaithaaney.. it was derived from the old song "vaan Meethile (chandrayan)..."
correct me if am wrong??
sorry, I think it should be "sakkarakuttikki" not vaa vennila...
வணக்கம் நாரதமுனி
நீங்கள் சொன்ன பாட்டு அதுவல்ல,
:( parava illa... i am still waiting for ur reply for my mail
இந்தக் கிழமை கொஞ்சம் லேட்டா வந்துட்டேன் தல.. :(
'குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும்...'
இதானே விடை ? :)
ரிஷான் சரியான விடை ;)
அந்தப் பாடல் குழலூதும் கண்ணனுக்கு
போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி
Post a Comment