Pages

Friday, December 14, 2007

Heart Beats இசை ஆல்பம் - ஒலிப்பேட்டி


ஆராதனா என்னும் இசைக்கல்லூரியைக் கொழும்பில் நடாத்தி வரும் வி.கே.ஜே மதி அவர்களின் முதல் அரங்கேற்றமாக Heart Beat என்ற இசை ஆல்பம் நாளை டிசம்பர் 15 ஆம் திகதி, உருத்திரா மாவத்தையில் உள்ள "கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் மாலை 5.30 மணிக்கு வெளியிடப்படுகின்றது. இந்த ஆல்பத்தை அவரே எழுதி இசையமைத்திருக்கின்றார்.

மதி அவர்களையும், அவரின் திறமையை வெளி உலகுக்குக் கொண்டு வரும் நோக்கில் அவருடன் ஒரு ஒலிப்பேட்டியைத் தயாரித்து கடந்த புதன் கிழமை அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒலிபரப்பியிருந்தேன். அதன் பகிர்வை இங்கே தருகின்றேன்.

மதியின் கைவண்ணத்தில் வந்த "யாழ் நகர வீதியில் நாம் சுற்றித் திரிந்த காலங்கள்" என்ற பாடலைக் கேட்டிருந்தேன். அந்தப் பாடலே இவருடைய திறமைக்கு ஒரு சான்று. இப்பேட்டியின் ஆரம்பத்தில் அப்பாடலின் சில துளிகளையும் உங்கள் செவிக்கு விருந்தாக இட்டிருக்கின்றேன். இசைத் துறையில் வி.கே.ஜே.மதியின் புகழ் வியாபியிருக்க வேண்டும் என்று இவ்வேளை வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொள்கின்றேன்.

6 comments:

பனிமலர் said...

வணக்கம் கானா, தகவலுக்கு நன்றி.

கானா பிரபா said...

வருகைக்கு நன்றி பனிமலர்

Anonymous said...

பகிர்தலுக்கு நன்றி.
....
'யாழ் நகர வீதியில் நாம் சுற்றித் திரிந்த காலங்கள்' பாடலில் தெரிந்த பல சம்பவங்கள் மீண்டும் நினைவுக்கு வருகின்றது. 'மாவிட்டபுரம் மாவிளக்கு'...ம் அதொரு காலம்.

கானா பிரபா said...

வருகைக்கு நன்றி டிஜே

இந்தப் பாடலின் முழுதும் நம் அன்றைய நாட்களின் பதிவாக அருமையாக எழுதப்பட்டிருக்கின்றது. மற்றைய பாடல்களை இன்னும் நான் கேட்கவில்லை.

Anonymous said...

Jaffna Song Super

கானா பிரபா said...

வருகைக்கு நன்றி செல்வன்