Thursday, August 16, 2007
வி.எஸ்.நரசிம்மனின் தேன் மழையிலே...!
இசைஞானி இளையராஜாவைத் தொடர்ந்து அடுத்த வரிசையில் நான் நேசிக்கும் இசையமைப்பாளர்களில் முதன்மையானவர் வி.எஸ்.நரசிம்மன். கே.பாலசந்தர் தனது "அச்சமில்லை....அச்சமில்லை...!" திரைக்காக இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்ட இவர் தமிழ்த் திரையுலகில் இசையமைப்பாளராகப் பணியாற்றியது மிகச் சொற்பப் படங்களே. ஆனால் பல பாடல்களுக்குப் பின்னால் இவரின் ஆவர்த்தனம் சேர்ந்திசையாக மிளிர்ந்திருக்கின்றது.
இன்றைய ஒலிப்பகிர்வில் வி.எஸ்.நரசிம்மன் திரையுலகிற்கு இசையமைப்பாளராக வந்த அறிமுகம் குறித்த பார்வையும் தொடர்ந்து "அச்சமில்லை அச்சமில்லை" திரைக்காக இவர் முதன் முதலில் இசையமைத்த "ஆவாரம் பூவு" பாடலும் இடம்பெறுகின்றது.
தொடர்ந்து பாலசந்தரின் உதவியாளராக இருந்த இயக்குனர் அமீர்ஜான் இயக்கத்தில் வெளிவந்த "புதியவன்" திரைக்காக "நானோ கண் பார்த்தேன்" என்ற பாடல் என் பாடல் பொக்கிஷத்திலிருந்து உங்களுக்காக வெளிவருகின்றது.
வி.எஸ்.நரசிம்மன் இசையமைத்த மற்றைய அனைத்துத் திரைப்படப் பாடல்களும் அவை பற்றிய குறிப்புக்களும் அடுத்தடுத்த பகுதிகளில் வெளிவரும். இந்த நிகழ்ச்சிக்கான தகவல் குறிப்புக்களைப் பல ஆண்டுகளுக்கு முன்னர் சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் தொடராக வெளிவந்த "திரையிசைச் சாதனையாளர்கள்" பகுதியில் இருந்து பத்திரப்படுத்தித் தேவையான பகுதிகளை மட்டும் வானொலி வடிவமாக்கியிருக்கின்றேன். இதோ தொடர்ந்து கேளுங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே பரிச்சயமானது தான். இசையமைப்பாளரின் பெயர் உங்களின் மூலம் தான் அறிகிறேன். நன்றி! பிரபு!!
வெயிலான்
இன்னும் நிறையப் பாடல்கள் நரசிம்மன் இசையில் வந்தவை தொடர்ந்தும் வரவிருக்கின்றன. நன்றி
கே.பி.தொடர்ந்து தனது திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் வி.எஸ்.நரசிம்மனுக்கு வாய்ப்பளித்து வந்தார்.1990ல் கே.பி.இயக்கத்தில் ஒளிபரப்பான "ரயில் சினேகம்" என்னும் தொலைக்காட்சித்தொடருக்கும் அன்னார் தான் இசையமைத்திருந்தார்.தொலைக்காட்சித் தொடரில் வந்த பாடல்கள் அனைவரையும் முணுமுணுக்க வைத்தது ரயில் சினேகத்தில் தான் என்று நினைக்கிறேன்.
1)இந்த வீணைக்குத் தெரியாது...
2)முதலும் இல்லாதது...
இவர் கடைசியாக இசையமைத்து வந்து ஹிட்டான படம் சுரேஷ் மேனனின் இயக்கத்தில் வெளிவந்த இரண்டாம படமான பாசமலர்கள்.இதில் வந்த செண்பகப்பூவைப் பார்த்து எனக்குப் பிடித்த பாடல்களில் ஒன்று...
நன்றி பிரபா அண்ணாத்தே.....
வணக்கம் சுதர்சன்
நீங்கள் குறிப்பிடும் பாடல்கள் ரயில் சினேகத்தில் தான் வந்தவை. வி.எஸ்.நரசிம்மனின் விடுபட்ட பாடல்கள் எனது பதிவில் தொடர்ந்தும் பாகம் 2 இல் வரவிருக்கின்றன.
மிக்க நன்னி ;-)
கானா பிரபா, நீங்கள் குறிப்பிட்ட அந்த இரண்டாம் பாகத்தைப் போட்டு விட்டீர்களா? ரயில் சினேகத்தில் "இந்த வீணைக்குத் தெரியாது"பாடல் பெண் பாடியது தான் யூட்யூபில் கிடைக்கிறது. அதே பாடலை ஆண் பாடிய பதிப்பின் mp3 அல்லது நிகழ்படம் கிடைத்தால் தொடுப்பு தாருங்கள். நன்றி
ரவி
இந்த வாரத்தில் கட்டாயம் 2 ஆம் பாகத்தைத் தருகின்றேன். என்னிடம் ஆண் குரல் உண்டு.
ஓ..நன்றி கானா பிரபா. அந்தப் பாட்டை மட்டும் பதிவிறக்கத்தக்க தனி mp3 கோப்பாகத் தந்தால் நன்றாக இருக்கும். இது ஒரு சிறப்பு வேண்டுகோள் :)
yoo.. interesting text :))
Post a Comment