Pages

Thursday, August 2, 2007

நீங்கள் கேட்டவை 16நீங்கள் கேட்டவை 16 பதிவில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து உங்கள் விருப்பப் பாடல்களோடு இந்த நிகழ்ச்சி வாரா வாரம் இடம்பெறுகின்றது. எனவே தொடர்ந்து உங்கள் விருப்பப் பாடல்களை அறியத் தாருங்கள், அவை பிந்திய பதிவுகளில் வரக் காத்திருக்கின்றன.

சரி,இனி இந்த வாரப் பாடல் தெரிவுகளுக்குச் செல்வோம்.

முதலாவதாக அய்யனாரின் விருப்பமாக "நண்டு" திரைப்படத்தில் இருந்து "மஞ்சள் வெய்யில்" என்ற பாடலை உமா ரமணன் பாடுகின்றார். இசைய வைத்தவர் இசைஞானியே தான்.

அடுத்த தெரிவாக "ரசிகன் ஒரு ரசிகை" திரையில் இருந்து நெல்லைக் கிறுக்கன் தேர்வு செய்திருக்கும் "பாடியழைத்தேன்" என்ற பாடலை கே.ஜே.ஜேசுதாஸ் தன் அருமை நண்பர் ரவீந்திரன் இசையில் பாடுகின்றார்.

வடுவூர் குமாரின் விருப்பமான " மஞ்சள் நிலாவுக்கு" என்ற பாடலை, இளையராஜா இசையில் ஜெயச்சந்திரன், பி.சுசீலா, ஆகியோர் முதல் இரவு திரைக்காகப் பாடுகின்றார்கள்.

லட்சுமி திரைப்படத்தில் இருந்து "மேளம் கொட்ட நேரம் வரும்" என்ற பாடல் பி.எஸ்.சசிரேகாவின் குரலில் ஜி.ராகவனின் விருப்பமாக மலர்கின்றது.

மதி கந்தசாமி விரும்பியிருக்கும் "ஆஹா" படப் பாடலான முதன் முதலில் பார்த்தேன்" என்ற பாடலை ஹரிஹரன், தேவா இசையில் பாடக் கேட்கலாம்.

வெயிலான் உட்பட பல நேயர்களின் பாடல்கள் இன்னும் வர இருக்கின்றன. அடுத்த வாரம் வரை பொறுத்துக் கொள்ளுங்கள். தாமதத்திற்கு மன்னிக்கவும்.

Powered by eSnips.com

17 comments:

Ayyanar Viswanath said...

பிரபா!!

நன்றி.. நன்றி.. நன்றி... யப்பா!! ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேனாக்கும் :)

சிநேகிதன்.. said...

அனைத்து பாடல்களும் அருமை... கானா அண்ணா எனது விருப்பமாக "கல்லூரிவாசல்" திரைபடத்திலிருந்து தேனிசைதென்றல் தேவாவின் இசையில் அமைந்த ஹரிஹரன் - அனுராதாஷ்ரிராம் பாடிய "என் மனதை கொள்ளையடித்தவளே" என்னும் என் மனதை கொள்ளையடித்த பாடலை ஒளிபரப்பவும்

மாயா said...

அண்ணா அனைத்து பாடல்களும் அருமை
என்விருப்பமாக
" நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை "
பாடலை ஒளிபரப்ப முடியுமா ?

கானா பிரபா said...

//அய்யனார் said...
பிரபா!!

நன்றி.. நன்றி.. நன்றி... யப்பா!! ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேனாக்கும் :) //

வாங்க அய்யனாரே

உங்களுக்கு இல்லாத பாட்டு இருந்தெதற்கு ;-)

நல்ல பாட்டை உங்க புண்ணியத்தில் எல்லோரும் ரசிக்கட்டும்.

கானா பிரபா said...

//சிநேகிதன்.. said...
அனைத்து பாடல்களும் அருமை... கானா அண்ணா எனது விருப்பமாக "கல்லூரிவாசல்"//

romba nantri, will put your song

வடுவூர் குமார் said...

அப்பாடி இப்பத்தான் திறக்குது.
என்னுடைய விருப்பத்தை நிறைவேற்றியதற்கு நன்றி.
ஆமாம் இந்த பாடல் ஏன் பிடிக்கும்?
நாகையில் மடவிளாகத்தில் கோவில் மதில் மீது சாய்ந்துகொண்டு பேசிக்கொண்டு இருக்கும் போது நண்பர்களிடம் இருந்து ஒரு செய்தி வந்தது,ஆதாவது நம்ம தெருவுக்கு ஒரு கிளி வந்திருக்கிறது என்று.
அதை பார்பதற்காக ரொம்ப நேரம் காத்திருந்து பார்த்த போது..
"மஞ்சள் தாவணியில்,கட்டுக்கு அடங்காத தலை முடி...இப்படி ஏகப்பட்ட +++.
அந்த சமயத்தில் இந்த பாடல் வந்ததால் அது போகும் போதெல்லாம் பாடி வைப்போம்.
திடிரென்று ஞாபகம் வந்தது,அதனால் கேட்டேன்.
"முதன் முதலில்" ஒரு ஹிந்தி பாட்டின் xerox காப்பி ஆனாலும் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எல்லாப்பாட்டும் எனக்கு பிடித்த பாடல்களே அருமை. மீண்டும் மீண்டும் ஒலிக்கசெய்துகொண்டே இருக்கிரேன்..எத்தனை முறை கேட்கப்போகிறேன் என்று எனக்கேதெரியவில்லை. :)

SurveySan said...

வாணி ஜெயராம் பாடின வந்தே மாதரம் கெடைக்குமா? படத்துல வந்ததான்னு தெரியல. டி.விக்காக தூர்தர்ஷன்ல அடிக்கடி போடுவான் :)

அடுத்ததா, 'ராஜா சின்ன ராஜா பூந்தளிரே இன்பக் கனியே,,, உனை நெஞ்சில் சேர்த்துக் கொள்ள ஏங்கும் தாயின் உள்ளம்' போடவும்.

நன்றி!

கோபிநாத் said...

அட்டகாசமான பாடல்கள் ;-))

சரி....அடுத்து "புதிய பறவை" என்ற படத்தில்
(சிவாஜி..சரோஜதேவி நடித்த படம்) அந்த படத்தில் "பார்த்த ஞாபகம் இல்லையே"...அந்த பாடல் வேண்டும். அதை பாடியவர் யார்ன்னு சரியாக தெரியவில்லை.

கானா பிரபா said...

மாயா, உங்கள் பாட்டு அடுத்த பதிவில் கட்டாயம் வரும்.

//வடுவூர் குமார் said...
ஆமாம் இந்த பாடல் ஏன் பிடிக்கும்?
நாகையில் மடவிளாகத்தில் கோவில் மதில் மீது சாய்ந்துகொண்டு பேசிக்கொண்டு இருக்கும் போது நண்பர்களிடம் இருந்து ஒரு செய்தி வந்தது//

ஆகா ஆகா

பாட்டு போட்டதும் பலருடைய உண்மைகள் வெளிவருகின்றதே ;-)

ரசித்தேன்

கோபிநாத் said...

தலைவா அது பார்த்த ஞாபகம் இல்லையோ என்ற பாடல் முதல் பின்னூட்டத்தில் தவறாக சொல்லிட்டேன்.

கானா பிரபா said...

//முத்துலெட்சுமி said...
எல்லாப்பாட்டும் எனக்கு பிடித்த பாடல்களே அருமை. //

வணக்கம் முத்துலெட்சுமி

பாட்டு ஏதாவது தேவை என்றாலும் சொல்லி வைய்யுங்கள் ;-)

//SurveySan said...
வாணி ஜெயராம் பாடின வந்தே மாதரம் கெடைக்குமா? படத்துல வந்ததான்னு தெரியல.//

தல

உங்களுக்கே இது நியாயமா? இந்தப் பாட்டை வாணியிடம் போய்த் தான் நான் கேட்கணும். முயற்சி பண்றேன்.

நீங்கள் கேட்ட அடுத்த பாட்டு வரும்

SurveySan said...

Manjal nilavukku is an excellent piece by Jayachandran. one of his best.

ungal sevai pramaadham Prabha :)

Anonymous said...

/// வெயிலான் உட்பட பல நேயர்களின் பாடல்கள் இன்னும் வர இருக்கின்றன. அடுத்த வாரம் வரை பொறுத்துக் கொள்ளுங்கள்.///

காத்திருக்கிறேன்! றோம்! பொறுமையாக.

Sud Gopal said...

//கானா பிரபா said...
//SurveySan said...
வாணி ஜெயராம் பாடின வந்தே மாதரம் கெடைக்குமா? படத்துல வந்ததான்னு தெரியல.//

தல

உங்களுக்கே இது நியாயமா? இந்தப் பாட்டை வாணியிடம் போய்த் தான் நான் கேட்கணும். முயற்சி பண்றேன்.//

ஒவ்வொரு முறை இந்த வரிகளைப் படிக்கும் போதும் எனக்குள் ஒரு சந்தேகம் எழாமல் இல்லை.வாணியம்மா எப்போது வந்தே மாதரம் தூரதர்ஷனுக்குப் பாடினார்கள் என்று?

இப்போது நினைவுக்கு வருகிறது. நேரு மாமாவின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் சமீபத்தில் 1989ல் அப்போதைய இந்தியப் பிரதமரும் அவரது பேரனுமான ராஜீவ் காந்தி அவர்களால் வெகு விமரிசையாக நிகழ்த்தப்பட்டு வந்தது.கொண்டாட்டங்களின் முக்கிய அம்சமாக இந்தியாவின் எல்லாப் பிராந்தியங்களில் இருந்தும் வரவழைக்கப்பட்ட பள்ளிச்சிறார் பங்கேற்ற ஒரு அணிவகுப்பு இருந்தது.இளைய பாரதத்துக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளின் கருப்பாடலைப் பாடியிருந்தார் வாணி ஜெயராம் அவர்கள்.

அற்புதமான பாடலான அது தூரதர்ஷனிலும்,ஆகாசவாணியிலும் திரும்பத் திரும்ப ஒளி/ஒலி பரப்பப்பட்டு மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றது.அதைத் தான் சர்வேசன் குறிப்பிட்டுக் கேட்கிறார் என்று நினைக்கிறேன்...

யப்பா..ஜோடா ப்ளீஸ்....

கானா பிரபா said...

ஓமப்பொடியாரே

அரசியல்வாதி கணக்கா சமீபத்தில் 1989 இல் நடந்த விஷயங்களை புட்டு புட்டு வைக்கிறீங்க. ஆனாலும் என்ன, என்னிடம் அந்தப் பாட்டுக் கெடையாது :-(

Sud Gopal said...

//ஆனாலும் என்ன, என்னிடம் அந்தப் பாட்டுக் கெடையாது :-(//

அடடே...