பாடிப் பறந்த குயில்கள் என்ற புதிய தொடர் இன்று முதல் றேடியோஸ்பதியில் ஆரம்பிக்கின்றது. இந்தத் தொடர் மூலம், ஒரு காலகட்டத்தில் தமிழ்த் திரையிசை உலகில் கொடிகட்டிப் பறந்த பாடகர்கள், ஒரு சிறு இடைவெளிக்குப் பின் மீண்டும் பாட வந்த போது வந்த பாடல்கள் இடம்பெறுகின்றன.
அந்த வகையில், இன்றைய பதிவில் வரும் மூன்று பாடல்களில் முதலாவதாக வருவது,
டி.எம்.செளந்தரராஜன், பி.சுசீலா ஜோடி சேர்ந்த "தாய்க்கு ஒரு தாலாட்டு" திரைப்படத்தில் இருந்து "இளமைக் காலம் எங்கே" என்ற இனிய பாடல் இசைஞானி இளையராஜாவின் இசையில் மலர்கின்றது. இந்தப் படத்தை இயக்கியிருந்தார், மலையாளத் திரையுலகப் பிரபலம் பாலச்சந்திர மேனன்.
தொடர்ந்து மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த "கண்ணுக்கு மை எழுது" திரைப்படத்தில் நடிகை மற்றும் பாடகி பி.பானுமதி, பி.எஸ்.சசிரேகாவின் ஆரம்பக் குரலோடு பாடும் "வாடாமல்லியே நான் சூடா முல்லையே" பாடல் அரங்கேறுகின்றது.
இசை இளையராஜா.
இந்தப் பாகத்தின் நிறைவுப் பாடலாக P.B.சிறீநிவாஸ் சங்கீதாவோடு பாடும் "உயிரே உன்னை இதயம் மறந்து செல்லுமோ" என்ற பாடல் ஆதித்யனின் இசையில், "நாளைய செய்தி" திரைக்காக வருகின்றது.
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
அட...புதுமைகளைப் புகுத்துவதில் உங்களை அடிச்சுக்க முடியாது அண்ணாத்தேய்...
என்னோட பாட்டியல்(பாட்டுகளோட பட்டியல்..ஹி..ஹி...):
டி.எம்.எஸ் குரலில்
1)உன்னை தினம் தேடும் தலைவன் - உழவன் மகன்
2)தாய்நாடு படத்தில் இரண்டு பாடல்கள்
ஜிக்கியம்மா குரலில் பாட்டுக்கு ஒரு தலைவன் பாடல்..
இப்போதைக்கு அம்புட்டுதேன்...
\\சுதர்சன்.கோபால் said...
அட...புதுமைகளைப் புகுத்துவதில் உங்களை அடிச்சுக்க முடியாது அண்ணாத்தேய்...\\
தல...ரீப்பிட்டேய் ;-))))
உங்கள் அன்புக்கு நன்றி நண்பர்களே
பாசக்காரப் புள்ளைங்களாவே இருக்கீங்களே ;-)
சுதர்சன்
நீங்க கேட்ட பாடல்கள் நிச்சயம் வரும், முதலில் விடுபட்டுப் போன மற்றைய பாடகர்களையும் தந்துவிட்டுத் தருகின்றேன்.
Post a Comment