Pages

Friday, July 20, 2007

நீங்கள் கேட்டவை 14



வாரங்கள் 14 கடந்தாலும் உங்களின் அபிமானத் தெரிவுகளோடு நீங்கள் கேட்டவை தொடர்கின்றது. இதோ இந்தவார நிகழ்ச்சியின் தேர்வுகளைப் பார்ப்போம்.

இந்தவாரம் பெரும்பாலும் 60, மற்றும் 70 களில் வெளிவந்த படங்களே அதிகம் ஆக்கிரமிக்கின்றன.

முதலில் இடம்பெறும் "வந்த நாள் முதல்" என்ற பாடலை வடுவூர் குமார் மற்றும் மதி கந்தசாமி ஆகியோர் விரும்பிக்கேட்டிருக்கின்றார்கள். பாடல் இடம்பெற்ற திரைப்படம் "பாவமன்னிப்பு". விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில்
T.M செளந்தரராஜன் பாடலைப் பாடுகின்றார்.

அதே பாடல் சோக மெட்டில் என் விருப்பமாக அடுத்து வருகின்றது. பாடலைப் பாடியிருப்பவர் G.K.வெங்கடேஷ்

இந்துமகேஷ் என்ற அபிமான நேயர் தேர்வில் P.B.ஸ்ரீநிவாஸ் குரலில் "உடலுக்கு உயிர் காவல் என்ற பாடல் "மணப்பந்தல்" திரைப்படத்திற்காக M.S.விஸ்வநாதன் இசையில் வருகின்றது.

அடுத்ததாக "தெய்வப்பிறவி" திரைப்படத்திற்காக "அன்பாலே தேடிய" என்று ஜெயராமன் பாடும் பாடலை யெஸ்.பாலபாரதி விரும்பிக் கேட்டிருக்கின்றார். பாடலுக்கான இசை:K.V.மகாதேவன்

தொடர்ந்து பாடல்களைக் கேட்டு வரும் சுதர்சன் கோபால், "பட்டினப் பிரவேசம்" திரைக்காக, M.S.விஸ்வநாதன் இசையில் "வான் நிலா நிலா அல்ல" என்ற S.P.பாலசுப்ரமணியம் பாடும் இனிய பாடலைத் தேர்வு செய்திருக்கின்றார்.

இறுதியாக, அடிக்கடி வலைப்பதிவில் காணாமல் போகும் "நெல்லைக் கிறுக்கன்" இளையராஜா இசையில் "அகல்விளக்கு" திரைக்காக K.J. ஜேசுதாஸ், S.P சைலஜா ஆகியோர் " ஏதோ நினைவுகள்" என்ற இனிய பாடலைத் தருகின்றார்கள்.

Powered by eSnips.com

19 comments:

Anonymous said...

பிரபா!

மிகச்சிறந்த ரசிகர்களின் தேர்வு!

இன்னும் கேட்க வில்லை. இருந்த போதும், பாடல் வரிகளைப் படித்த போதே நல்லதொரு தொகுப்பாக இருக்கிறது.

கோபிநாத் said...

வந்த நாள் முதல்....என்ன ஒரு அருமையான பாடல் ;))

நன்றி தல ;)

G.Ragavan said...

அருமையான தேர்வுகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை.

வெற்றி said...

கா.பி,
எல்லாமே அருமையான பாடல்கள்.
நன்றி.

U.P.Tharsan said...

நானும் ஒன்று கேட்டேனே. வரவேயில்லை.:-(( பாடல் அல்ல

வடுவூர் குமார் said...

அந்த "வந்த நாள் முதல்" பாடலைதான் கேட்டுக்கொண்டிருக்கேன்.
மிக்க நன்றி.
இந்த பாடல் இருக்கா?
மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்- படம் பெயர் ஞாபகம் இல்லை.

வடுவூர் குமார் said...

அகல்விளக்கு பட பாடல்கள் கேட்க கேட்க திகட்டாதவை.

கானா பிரபா said...

//வெயிலான் said...
பிரபா!

மிகச்சிறந்த ரசிகர்களின் தேர்வு!//

உண்மை தான் வெயிலான், இம்முறை பழமை என்றும் இனிமை ஸ்பெஷல்

//கோபிநாத் said...
வந்த நாள் முதல்....என்ன ஒரு அருமையான பாடல்//


தல, என் விருப்பமா அதன் சோகப்பாட்டைப் போடும் போதே புரிந்திருக்கும் நமக்கும் இது இஷ்டம் என்று ;-)

நெல்லைக் கிறுக்கன் said...

என்னோட விருப்பப் பாடல போட்டதுக்கு நன்றி தல...

ஆனாலும் அடிக்கடி காணாமப் போற பயபுள்ளன்னு என்ன சொல்லிட்டீரே அய்யா... இதுக்காகவாவது அப்பப்ப வந்து தலயக் காட்டுறேன்!!

நெல்லைக் கிறுக்கன் said...

பிரபா,
ரசிகன் ஒரு ரசிகை படத்துல, "பாடி அழைப்பேன், உன்னை இதோ தேடும் நெஞ்சம்" அப்படின்னு ஒரு பாட்டு வரும். அந்த ஒலிப் பேழை உங்க கிட்ட இருந்தா போடுமய்யா...

Anonymous said...

'அன்பாலே தேடிய '
'வான் நிலா'
'ஏதோ நினைவுகள்'
இம்மூன்றும் எனக்குப் பிடித்ததாகவும் இருந்தது. நன்றி! பிரபா.

என் விருப்பப்பாடல் - 'பெண்ணல்ல நீ ஒரு பொம்மை, பொய்யல்ல நான் சொல்வதுண்மை'

கானா பிரபா said...

// G.Ragavan said...
அருமையான தேர்வுகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை. //

// வெற்றி said...
கா.பி,
எல்லாமே அருமையான பாடல்கள்.
நன்றி. //

ராகவன், வெற்றி

தங்கள் வருகைக்கு என் நன்றிகள்


//U.P.Tharsan said...
நானும் ஒன்று கேட்டேனே. வரவேயில்லை.:-(( பாடல் அல்ல //

யூ.பி

நீங்கள் கேட்ட விசயம் எங்கு தேடியும் கிடைக்கவில்லை ;-(

கானா பிரபா said...

//இந்த பாடல் இருக்கா?
மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்- படம் பெயர் ஞாபகம் இல்லை.//

வணக்கம் வடுவூர் குமார்

இந்தப் பாடல் இருக்கிறது, படம் முதல் இரவு.

//நெல்லைக் கிறுக்கன் said...
பிரபா,
ரசிகன் ஒரு ரசிகை படத்துல, "பாடி அழைப்பேன், உன்னை இதோ தேடும் நெஞ்சம்" அப்படின்னு ஒரு பாட்டு வரும். அந்த ஒலிப் பேழை உங்க கிட்ட இருந்தா போடுமய்யா... //

நெல்லைக் கிறுக்கரே

உங்கள் பாட்டு வரும் ;-)
.

Anonymous said...

/// என் விருப்பப்பாடல் - 'பெண்ணல்ல நீ ஒரு பொம்மை, பொய்யல்ல நான் சொல்வதுண்மை' ///

நான் கேட்ட இந்தப்பாடல் கேட்கக்கிடைக்குமா என சொல்லவே இல்லையே பிரபா?

கானா பிரபா said...

வணக்கம் வெயிலான்

பாட்டைக் கொஞ்சம் இரவல் வாங்கித் தான் கொடுக்கவேண்டும், முயற்சி செய்து தருகின்றேன்

Anonymous said...

/// இரவல் வாங்கி ///
நன்றி பிரபா!

Sud Gopal said...

பாடலோடு இழையும் வயலின் இருக்கே...ஜென்ம சாபல்யம் அடைந்தேன்.

நன்னீ...

Anonymous said...

திரு கானாபிரபா அவர்களுக்கு,

திரு சி.எஸ்.ஜெயராமன் அவர்கள் பாடிய
"அன்பாலே தேடிய" எனும் பாடல் இடம் பெற்றது "தெய்வப் பிறவி" படத்தில் அல்லவா ?

பாவை விளக்கு படத்தில் இடம் பெற்றது "காவியமா" மற்றும் "பெண்ணொருத்தி என் எதிரில் வந்தாள்" ஆகிய பாடல்களே !

கானா பிரபா said...

வணக்கம் மது

தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி, அது தெய்வப்பிறவி தான்.