Pages

Thursday, July 19, 2007

அலைகள் ஓய்வதில்லை



யூலை 18, 1981, இந்த நாள் "அலைகள் ஓய்வதில்லை" என்ற காதல் சித்திரம் வெளிவந்து அப்போது இளசுகளாக இருந்த பலரின் உள்ளத்தைக் கொள்ளையடித்த படம். நான் தயாரிக்கும் இந்த வார வானொலி நிகழ்ச்சிக்குப் புதுமையாக ஏதாவது செய்யவேண்டுமே என்று இரு நாட்களுக்கு முன்னர் நான் நினைத்தபோது "அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தின் முழுப்பாடல்களையும் ஒலிபரப்பிக் கூடவே முக்கிய காட்சிகளில் இடம்பெற்ற பின்னணி இசையையும் கலந்து ஒரு நிகழ்ச்சி செய்யத் தீர்மானித்தேன் இந்தப் படம் குறித்த தகவல்களைத் தேடும் போது தான் நேற்று யூலை 18 ஆம் திகதியை நான் இந்த நிகழ்ச்சியைச் செய்யத் தீர்மானித்த அதே நாள் தான் 26 வருடங்களுக்கு முன்னர் இந்தப் படம் வெளிவந்த செய்தியையும் அறிந்துகொண்டேன். என்னதொரு ஆச்சரியமான ஒற்றுமை இல்லையா?

மணிவண்ணன் அப்போது பாரதிராஜாவின் உதவி இயக்குனராக இருந்த மணிவண்ணன் " நிழல்கள்" திரைப்படத்திற்குக் கதையெழுதியிருந்தார். தொடர்ந்து வெற்றிப்படங்களை அளித்து வந்த பாரதிராஜாவின் தோல்விப்படங்கள் பட்டியலில் "நிழல்கள்" சேர்ந்து கொண்டது. ஆனால் சோர்ந்துவிடாமல் தன் ஆசான் பாரதிராஜாவுக்கு ஒரு வெற்றிப்படக் கதையைக் கொடுப்பேன் என்று மணிவண்ணன் கதை வசனம் எழுதிய படமே "அலைகள் ஓய்வதில்லை".

இசைஞானி இளையராஜாவின் குடும்ப நிறுவனமான "பாவலர் கிரியேஷன்ஸ்" சார்பில் அவரின் சகோதரர் பாஸ்கர் தயாரிப்பில் வெளிவந்தது இப்படம். படத்தில் நடித்த கார்த்திக்கிற்கு வயது 21, ராதாவுக்கு 16 மட்டுமெ.
தமிழக அரசின் சிறந்த படமாகவும் தேர்வானது இப்படம்.

இதோ "அலைகள் ஓய்வதில்லை" வெற்றிச் சித்திரத்தின் பாடல்களோடு அப்படத்தின் முக்கிய காட்சிகளுக்கான பின்னணிஇசைத் தொகுப்பையும் கேட்டு ரசியுங்கள்.

பாகம் 1 (ஒலியளவு 28 நிமிடங்கள்)



பாகம் 2 (ஒலியளவு 25 நிமிடங்கள்)

15 comments:

Anonymous said...

அருமை!

அருமை!

மிகவும் அருமை பிரபா!

கானா பிரபா said...

வணக்கம் வெயிலான்

தங்களைப் போன்ற இசையை நேசிக்கும் நண்பர்களுடன் இப்படியான ஒலிப்பகிர்வை வழங்குவதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். மிக்க நன்றிகள்.

வடுவூர் குமார் said...

கானா பிரபா
நிச்சயமாக 1981 இல் இல்லை.1983 என்று நினைக்கிறேன்.செங்கல்பட்டில் ரிலிசான நாள் போய் கூட்டத்தை பார்த்து வேறு ரஜினி படம் பார்த்துவிட்டு வந்தேன்.

பாரதிய நவீன இளவரசன் said...

//நிச்சயமாக 1981 இல் இல்லை.1983 என்று நினைக்கிறேன்.செங்கல்பட்டில் ரிலிசான நாள் போய் கூட்டத்தை பார்த்து வேறு ரஜினி படம் பார்த்துவிட்டு வந்தேன்//

no vaduvur kumar... this film was released in the year 1981 only.. it was during my 5th Std. 'Vaadi yen kappakizhangae ....' was a huge hit among us....as the film was certified 'A', we could make it to the theatre. I still remember crowds thronging the NANGANALLUR RANGA THEATRE during its re-release in the same year. However, we got to see in later days only, thanks to Doordarshan (and ofcourse, with lot of cuts by censor).

Karthik and Radha making their impressive debut; also Smitha (not the usual silk) was so impressive in the character role. Thyagarajan, the villain, in later years got oppurtunity to do hero-roles in a few movies.

The success of the film, however, belonged to three giants - BHARATHIRAJA, ILLYARAJA and the blossoming poet VAIRAMUTHU.... his lyrics 'vizhiyil vizhunthu, idhayam nuzhainthu, uriyil kalantha uravae..' becoming immortal lines.

The storyline of the film, in one way, reflected the theme of RAJANAAGAM, a seventies runaway hit, starring Srikanth, Vanishre (?) and Manjula.

The film was remade in Telugu with Karthik (called as Murali) and Aruna in the lead, Sharath Babu donning the role of villain.

Gana Prabha is 100 per cent right - the film boosted the morale of Bharathiraaja after the unexpected flop of the class movie NIZHALGAL at the box office. Nevertheless, the next film of Bharathiraaja, with the same pair Karthik-Radha in the lead (VAALIBAMAE VAA VAA) too turned out to be a flop, is another story.

G.Ragavan said...

படம் எப்ப வந்ததுன்னு தெரியலை. ஆனா சின்னப்பிள்ளைல வந்தது. முந்தானை முடிச்சு மதுரை சிந்தாமணில பாத்தது நினைவிருக்கு. இதெல்லாம் நினைவில்லை. பின்னாடி எப்பவோ பாத்தது. படம் நல்ல படம். பாட்டுக ரொம்பப் பிரமாதம்.

படத்தோட கதைப்படி மொதல்ல இந்துப் பையனும் முஸ்லீம் பொண்ணும் காதலிக்கிற மாதிரி இருந்துச்சாம். அதுனாலதான் "கோயிலில் காதல் தொழுகை" அப்படீன்னுல்லாம் பாட்டு எழுதுனாங்க. அப்புறம் பிரச்சனை வந்துரக்கூடாதென்னு...முஸ்லீம் பொண்ணை கிருத்துவப் பொண்ணாக்கீட்டாங்க.

கோபிநாத் said...

அருமை தலைவா...

கலக்குறிங்க...நன்றிகள் ;)

கோபிநாத் said...

\\G.Ragavan said...
படம் எப்ப வந்ததுன்னு தெரியலை. ஆனா சின்னப்பிள்ளைல வந்தது. முந்தானை முடிச்சு மதுரை சிந்தாமணில பாத்தது நினைவிருக்கு. இதெல்லாம் நினைவில்லை. பின்னாடி எப்பவோ பாத்தது. படம் நல்ல படம். பாட்டுக ரொம்பப் பிரமாதம்.

படத்தோட கதைப்படி மொதல்ல இந்துப் பையனும் முஸ்லீம் பொண்ணும் காதலிக்கிற மாதிரி இருந்துச்சாம். அதுனாலதான் "கோயிலில் காதல் தொழுகை" அப்படீன்னுல்லாம் பாட்டு எழுதுனாங்க. அப்புறம் பிரச்சனை வந்துரக்கூடாதென்னு...முஸ்லீம் பொண்ணை கிருத்துவப் பொண்ணாக்கீட்டாங்க.\\

"கோயிலில் காதல் தொழுகை" இதுக்கு பின்னாடி இப்படி ஒரு கதையிருக்கா....ம்ம்ம்...தகவலுக்கு நன்றி ராகவன் சார் ;)

கானா பிரபா said...

/ வடுவூர் குமார் said...
கானா பிரபா
நிச்சயமாக 1981 இல் இல்லை.1983 என்று நினைக்கிறேன்.செங்கல்பட்டில் ரிலிசான நாள் போய் கூட்டத்தை பார்த்து வேறு ரஜினி படம் பார்த்துவிட்டு வந்தேன். //



வாங்க வடுவூர் குமார்

உங்களின் சந்தேகத்தை பாரதீய நவீன இளவரசரே தீர்த்துவிட்டார் ;-). படம் வெளிவந்த ஆண்டு 1981 தான். ஒலிப்பதிவைக் கேட்டு முடிந்தால் உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.

கானா பிரபா said...

//பாரதிய நவீன இளவரசன் said...
The success of the film, however, belonged to three giants - BHARATHIRAJA, ILLYARAJA and the blossoming poet VAIRAMUTHU.... his lyrics 'vizhiyil vizhunthu, idhayam nuzhainthu, uriyil kalantha uravae..' becoming immortal lines.//


பாரதீய நவீன இளவரசே

என்சார்பில் ஆஜராகி விரிவான ஆதாரங்களோடு வாதாடியமைக்காக நன்றிகள் ;-) பாரதிராஜா, வைரமுத்து, ராஜா கூட்டணியின் இன்னொரு விருந்து கடலோரக் கவிதைகள்.

உங்களிடமிருந்து நிறைய சுவாரஸ்யமான தகவல்களைப் பெறமுடிந்தது. இப்ப தான் கவனிச்சேன் உங்க ஐடியையும் தமிழுக்கு மாற்றீட்டீங்க ;-)

கானா பிரபா said...

// G.Ragavan said...
படம் எப்ப வந்ததுன்னு தெரியலை. . படம் நல்ல படம். பாட்டுக ரொம்பப் பிரமாதம்.//


வாங்க ராகவன்

நீங்க ஒரு தடவை இந்தப் படத்தின் தெலுங்குப் பதிப்பில் வாணி ஜெயராம் பாடியதாக் குறிப்பிட்டிருந்தீங்க. இனிமேல் தான் கேட்கணும்.

ஒலிப்பதிவைக் கேளுங்கள், ராஜா பின்னணி இசையில் பின்னியெடுத்திருக்கிறார்.

கானா பிரபா said...

//கோபிநாத் said...
அருமை தலைவா...

கலக்குறிங்க...நன்றிகள் ;) //

வணக்கம் தல

ராஜா சார் எவ்வளவோ செய்திருக்கார், அவரின் புகழ் பாடியே பொழுதைக் கழிப்போம் ;-)

Anonymous said...

பா.ந.இளவரசன் எழுதிய பின் தான் எனக்கும் ஒரு மீண்ட நினைவு.

இது வயது வந்தவர்களுக்கான படமாதலால், வீட்டிலுள்ளோர் எனக்கு தெரியாமல் திரையரங்கிற்கு சென்று விட்டனர்.

பள்ளியிலிருந்து வந்த பின் வீட்டிலுள்ள சில்லரைக்காசுகள் 5,10,20 நயாபைசாக்களாக பொறுக்கி அதே காட்சியில் படம் பார்த்து விட்டு வந்து சரியான அடி வாங்கியிருக்கிறேன்.

கானா பிரபா said...

வணக்கம் வெயிலான்

வாசிக்கும் போது சிரிப்பாக இருக்கிறது, களவாகப் படம் பார்க்கும் சுகமே தனி ;-)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பிரபா!
இந்தப் படம் நான் நாவலப்பிட்டியில் பார்த்தேன்.
'' விழியில் விழுந்து இதயம் புகுந்து'',''ஆயிரம் தாமரை...மிகப் பிடித்தவை..மறக்கமுடியாதவை..

கானா பிரபா said...

வணக்கம் யோகன் அண்ணா

நீங்கள் குறிப்பிட்ட பாடல்கள் காலத்தை விஞ்சி இன்றும் இனிமை தருபவை.