Pages

Friday, March 9, 2007

கவிஞர் அறிவுமதி பேசுகிறார்

தன் கவித்தமிழில் ஆங்கிலம் ஆக்கிரமிக்காது கவி படைத்த கவிஞர் அறிவுமதி, தன் வாழ்வியல் அனுபவங்களைத் தருகின்றார். தன் இலக்கியப் பிரவேசம், சினிமா உலக அனுபவம், ஈற்றில் சினிமா உலகில் தன் வனவாசம் மேற்கொள்ள ஏதுவாய் அமைந்த சம்பவம் போன்றவற்றைத் தொட்டுப் போகின்றது இப்பேட்டி.

கேட்க, கீழே உள்ள பெட்டியை அழுத்தவும்.

Arivu.wma

8 comments:

தமிழ்பித்தன் said...

நன்றாக இருக்க கானா பிரபா ஆனால் உமது ஓடியோ பதிவுக்கு நாம் அவர்களின் தளத்தையல்லவா நாட வேண்டியுள்ளது www.imeem.com இதை பயன்படுத்துங்கள் இந்த பிரச்சினை வராது மேலதிக விபரத்துக்கு எனது தளத்தைப் பாருங்கள்

கதிரவன் said...

பகிர்ந்தமைக்கு நன்றி பிரபா.கவிஞரின் பேட்டி நல்லாயிருந்தது..

அவரைப்பற்றிய விவரங்கள்;கவிதைத் தொகுப்புக்கள்; அவரது 'தை' கவிதை இதழ்,உதவி இயக்குனராகவும்,கவிஞராகவும் அவரது திரையுலக அனுபவங்கள்;ஈழத்தமிழர்கள் பற்றிய உணர்வுகள்;அவர் இயக்கிய 'நீலம்' குறும்படம்;மதியழகன் 'அறிவுமதி'ஆன காரணம்;திரையிசைப்பாடல்கள் எழுதுவதை அவர் நிறுத்தியதின் காரணம் என பல விஷயங்களைப் பற்றி அறிய முடிந்தது.

காசுக்காக சினிமா இயக்குனர்களின் விருப்பத்திற்கேற்ப பாடல்கள் எழுதும் கவிஞர்கள் மத்தியில், 'இப்படிப்பட்ட பாடல்கள்தான் எழுதுவேன்' என்ற கொள்கைகள் வைத்திருப்பதாகச் சொல்லும் இவர் - பணம் தேடும் உலகில் ஒரு வித்தியாசமான கலைஞன் தான்

பேட்டி எடுத்தவர் இன்னும் கொஞ்சம் ஆர்வத்துடன் பேசி இருக்கலாம்.கவிஞர் கேள்விகளுக்கு ஆர்வத்துடனும், உணார்வுகளுடனும் பதிலளித்தவுடன்,கேள்வி கேட்கிறவர் ஏதோ கடனுக்கு கேட்கற மாதிரி கேட்டுட்டு, 'சரி சரி,அடுத்த கேள்விக்கு பதில் சொல்லுங்க'ன்ற மாதிரி பேசிட்டிருந்தார்.

கானா பிரபா said...

வணக்கம் தமிழ்ப்பித்தன்

வருகைக்கு நன்றிகள், இப்போது தான் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றேன். நீங்கள் தந்த தளத்தையும் போய்ப்பார்த்து இன்னும் அடுத்த படிக்குப் போகின்றேன்.

கானா பிரபா said...

வணக்கம் கதிரவன்

பேட்டி எடுத்ததும் நான் தான். கவிஞர் அதிகம் தன்னைப் பற்றிப் புகழாரம் பேசமாட்டார், நானும் அதிகம் அவரை மேலே ஏற்றிச் சங்கடப்படுத்த விரும்பவில்லை. எனவே தான் அதிக குறுக்கீடுகள் இருக்கவில்லை. அத்துடன் கவிஞரின் இலக்கிய/சினிமாப் பிரவேசம் பற்றி அவரைப் பற்றிப் பூரணமாக அறியாதவர்களுக்கான ஒரு அறிமுகமாகவும் தான் இப்பேட்டி அமைந்தது. தங்கள் மேலான கருத்துக்கு என் நன்றிகள்.

Pot"tea" kadai said...

பிரபா,
நன்றிகள் பல.

கவிஞருடனான ஒலிக்கோவை அருமையாக இருந்தது.

கேள்விகள் ரத்தினசுருக்கமாகவும், கவிஞரின் பதில்கள் விரிவாகவும் இருந்தது.

காலப் பிரச்சினையால் சுருக்கமாக முடித்துவிட்டீரோ?

அதிகமாக பேசியிருக்கலாமென தான் எனக்கும் தோன்றியது.

இருந்தாலும் செவ்விக்கு நன்றி.
மென்மேலும் எதிர்பார்க்கும்
-பொட்"டீ"கடையான்

பிகு: றேடியோஸ்பதினா தமிழ்ல என்ன?

கானா பிரபா said...

மிக்க நன்றி பொட் டீ கடை

காலம் அதிகம் இடங்கொடுக்காததால் நீளமாக இப்பேட்டி அமையவில்லை.

றேடியோஸ்பதி என்று எங்களூரில் பிரபலமான ஒலிப்பதிவுக் கூடம் இருந்தது. அதன் ஞாபகமாகவே இது வைக்கப்பட்டது.

செல்லி said...

பிரபா
கவிஞர் அறிவுமதி, அவரின் குரல்
கணீரொலி.
புஞ்சையில், தலாட்டில்
ஏர்ப் பாட்டில் ஏற்றப் பாட்டில்
ஒப்பாரிப் பாட்டில்
தமிழை குடித்து வந்தவர்
ஈழத்தமிழரின் வலியையும்
"வலி" என்ற கவிதைகளை வடித்தமைக்கு,மனமார
வாழ்த்துகிறேன்.

இந்தப் பேட்டியை பகிர்ந்தமைக்கு
மிக்க நன்றி, பிரபா.

கானா பிரபா said...

பேட்டியைக் கேட்டு கருத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள் செல்லி