Thursday, March 15, 2007
மாயக்கண்ணாடி படப்பாடல்கள்
பஞ்சு அருணாசலத்தின் தயாரிப்பில் சேரனின் இயக்கத்தில் வெளிவரும் "மாயக்கண்ணாடி" திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல்கள் எப்படி இருந்தன என்பதை (பரிசோதனை முயற்சியாக) ஒலிப்படைப்பின் மூலம் தருகின்றேன்.
ஒரு திருத்தம்: ஒலிப்படைப்பில் , பஞ்சு அருணாசலத்தோடு இளையராஜா 73 படங்களில் பணியாற்றினார் என்பதை 62 ஆகத் திருத்திக்கேட்கவும் ;-)
பாடல்களைக் கேட்க
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
esnips மூலம் அதே பக்கத்தில் வைத்து ஒலியை கேட்கக் கூடியதாக செய்யலாமே.. இன்னொரு பக்கத்துக்கு தாவ வேண்டியதில்லை.
வானொலித்தரத்துக்கு நிகராக தனி மனிதனாக ஆராய்கிறீர்கள் மற்றையது நீங்கள் கூறியது பொல பத்தோடு பதினொன்று என்பதற்கு நானும் உடன்பாடே
பாடலை டவுண்லோட் பண்ணியாச்சு! கேட்டுட்டு வந்து ஒரு கமேண்ட் போடுறேன் பிரபா. :-)
//சயந்தன் said...
esnips மூலம் அதே பக்கத்தில் வைத்து ஒலியை கேட்கக் கூடியதாக செய்யலாமே.. இன்னொரு பக்கத்துக்கு தாவ வேண்டியதில்லை. //
சயந்தன்
இப்பொழுது திருத்தம் செய்தாச்சு
தமிழ்ப்பித்தன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்
மை பிரண்ட், பாடல்களைக் கேட்டுவிட்டுச் சொல்லுங்கள் ;-)
பாடல்கள் கேட்டாச்சு பிரபா.
உலகிலேயே அழகி நீதான் என்ற பாடல் அருமையாக இருக்கு. விஜய் யேசுதாஸின் இனிமையான குரலில்.. ;-)
எந்த மாயமுமில்லை ; பத்தோடு பதினொன்றே!!உங்கள் குரல் பதிவு முற்றும் நாயமானதே!!
பாட்டுகள் எல்லாமே நல்லாயிருக்கு, எனக்குப் பிடித்தது "காசு கையில் இல்லாடா"
தொடரட்டும் இந்தப் பணி!
அன்புடன்
செல்லி
குறிப்பிட்ட படத்தின் பாடல்கள் பற்றி எனக்கு விமர்சனமில்லை; கருத்தேயில்லை.
ஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் திரைப்படத்தில் இடம்பெறும் பாடல்களின் தொடர்ச்சியான தோல்வியென்பது என்னளவில் வரவேற்கப்படவேண்டிய - மகிழ்ச்சி தரக்கூடிய விடயம். சினிமா எனும் ஊடகமும் இசையமைப்பு என்ற கலையும் வளம்பெற வேண்டுமானால் பாடல்களின் தோல்வியும், படங்களில் பாடல்களின் முக்கியத்துவமின்மை உணரப்படுதலும் முக்கியமென்று நினைக்கிறேன். ஆனால் தமிழ்ச் சூழலில் இது நிகழப்போவதில்லை. இந்தப்படத்தின் பாடல்களை வரவேற்காவிட்டால் அடுத்த படத்தின் பாடல்களுக்கு ஆகா ஓகோ வென்று வரவேற்புக் கொடுக்கத்தான் போகிறார்கள்.
"இளையராசா நாலு பாட்டுப் போட்டு ஒரு படம் வந்தால் போதும், அது நூறு நாட்கள் ஓடும்" என்ற எண்பதுகளின் நிலைமை தற்போது மாறிவிட்டது என்பது மிகப்பெரிய ஆறுதல் என்பதோடு அந்த நிலைமை மீண்டும் வந்துவிடக்கூடாதென்பதே என்போன்றவர்களின் பயத்துடன்கூடிய அவா.
இசையமைப்பு என்றால் நாலைந்து பாடல்களை மக்களைக் கவரக்கூடியதாக உருவாக்கிவிட்டால் சரி என்றளவில்தான் இசையமைப்பாளர்களின் புரிதல் இருக்கிறதென்றால் விமர்சகர்களின் புரிதலும் அதுவேதான். திரைப்படத்துக்கான இசையமைப்பென்பது பாடல்கள் மட்டுமே என்ற கருத்தோடுதான் பெரும்பாலான விமர்சனங்கள் அணுகப்படுகின்றன.
_____________________
இவ்வளவு சொல்வதால் வசந்தன் பாடல்களுக்கு எதிரியோ அவற்றை இரசிகத்தன்மையற்றவனோ அல்லன். நானும் தீவிர இரசிகன்தான். சினிமாவோடு மட்டுமே வளர்க்கப்படும் பாடற்கலையைத்தான் எதிர்க்கிறேன். இரண்டுமே தனித்தனியாக வரவேண்டிய, வளரவேண்டிய கலைகள். நாங்கள் இரண்டையும் கலக்கி, இரண்டிலுமே வளர்ச்சியற்ற நிலையில் உள்ளோம். தமிழ்ச்சினிமாவும் உருப்படாது; தமிழ்ப்பாடல்களும் உருப்படாது.
நான் சொல்வதை நூறு வீதமும் பொருத்திப் பார்க்க முடியாதுதான்.
பாடல்கள் கட்டாயம் தேவைப்படும் படங்கள் என்று பார்த்தால் விரல்விட்டு எண்ணிவிடலாம். மிகுதிப்படங்கள் பாடல்கள் தேவையில்லாத திரைக்கதையைத்தான் கொண்டிருக்கின்றன. இந்தநிலையில் 99 வீதப்படங்கள் பாடல்களோடுதான் வருகின்றன. தேவையில்லாத ஒன்றைப் புகுத்தி 99 வீதமான படைப்புக்கள் வருகிறதென்றால் நாம் எவ்வளவு மோசமான பேய்க்காட்டல் சினிமாக்கலையைக் கொண்டிருக்கிறோம்? ஒரு படைப்பில் குறைந்தபட்சம் கால்வாசி நேரம் திரைக்கதையோடு தொடர்பேயற்ற அம்சங்களைக் கொண்டு நிரப்பப்படும் படைப்புக்களாகவே கிட்டத்தட்ட முழுத்திரைப்படங்களும் உள்ளன. ஒவ்வொரு வினாடியையும்கூட நுட்பமாகச் செதுக்கிச் செய்யப்படும் நிலைக்கு திரைக்கலை வேறிடங்களில் வளர்ந்துவிட்ட நிலையில் அரைமணித்தியாலப் படத்தை தேவையற்ற பாடல்களுக்காகவே செலவிட்டுக்கொண்டு எவ்வளவு பெரிய முட்டாள் தனத்தைச் செய்துகொண்டிருக்கிறோம்?
பாடல்கள் ஏதோ நன்றாக வருகின்றனவா என்றால் அதுவுமில்லை. அரைவாசிப்பாடல்கள் கதாநாயகத்துதியிலும் படத்தில் இடம்பெறும் குத்தாட்டப் பாடல்களாகவுமே வருகின்றன. அக்காட்சிகள் திரைப்படத்துக்கே தேவையில்லை. திரைப்படத்தை விட்டு வெளியில் பார்த்தால் அந்தப்பாடல்களிலும் எதுவுமில்லை. திரைப்படத்தைச் சாராமல் பாடல்கள் வரும்போது நிச்சயம் நல்லவை நிலைக்க வாய்ப்பிருக்கிறது.
இது இன்னும் விரிவாக விவாதிக்கப்பட வேண்டியது; எழுதப்பட வேண்டியது.
ஆகவேதான் சொல்கிறேன்; பாடல்களின்றிப் படங்கள் வரும் நிலையில்தான் திரைப்படத்துறையில் வளர்ச்சிவரும்; பாடல்களும் தனித்துவத்தோடு வெளிவரும். அது திரைப்படப்பாடல்களின் தோல்வியிலிருந்துதான் தொடங்கவேண்டும்.
//.:: மை ஃபிரண்ட் ::. said...
பாடல்கள் கேட்டாச்சு பிரபா.
கருத்துக்கு நன்றி மை பிரண்ட்
உலகிலேயே அழகி நீதான் என்ற பாடல் அருமையாக இருக்கு.//
பாடல் இனிமையாக இருந்தாலும் புதுமையாக இல்லை என்பது என் அபிப்பிராயம்.
//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
எந்த மாயமுமில்லை ; பத்தோடு பதினொன்றே!!உங்கள் குரல் பதிவு முற்றும் நாயமானதே!! //
வணக்கம் யோகன் அண்ணா
இங்கும் நம் ரசனைகள் ஒத்துப்போகின்றன ;-)
// செல்லி said...
பாட்டுகள் எல்லாமே நல்லாயிருக்கு//
ம் சரி, நீங்களே சொல்லியாச்சு, இனி ரசிகர்கள் படம் பார்த்தபின் சொன்னால் தான் உண்டு ;-)
தனிப்பாடலைப் புளொக்கில் இட பாடலைப் பதிவேற்றியபின் listen ஐ click செய்யுங்கள் பின் வரும் திரையில் அதன்கீழ் உள்ள கோடிங்கை எடுத்து புளொக்கில் பொருத்துங்கள்
வசந்தன்
தங்கள் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்திவிட்டீர்கள், தமிழ் சினிமா பாடல்களைத் தவிர்த்து வருவது அடுத்த யுகத்தில் தான் சாத்தியப்படும் போல.
// தமிழ்பித்தன் said...
தனிப்பாடலைப் புளொக்கில் இட பாடலைப் பதிவேற்றியபின் listen ஐ click செய்யுங்கள் பின் வரும் திரையில் அதன்கீழ் உள்ள கோடிங்கை எடுத்து புளொக்கில் பொருத்துங்கள்//
இப்போது சரி செய்துவிட்டேன், மிக்க நன்றி
மர்றிவிட்டீர்கள் நன்றாக இருக்கு கான பிரபா
பிரபா!
பாடலைக் கேட்டபோது, உங்கள் பார்வை மிகச் சரியான கணிப்பு எனத் தெரிகிறது.
நன்றி
அந்த, நாம் எல்லோரும் அறிந்த, இளையராஜா இப்போது எங்கே? இப்படப் பாடல்கள் மட்டுமல்ல; அவர் இப்போது உருவாக்கும் பல பாடல்கள் அப்படித்தான் எண்ணத்தூண்டுகின்றன. அந்தக் காலத்தில் ஒரு குற்றச்சாட்டு இருந்து கொண்டே வந்தது: அதாவது தனக்கெனப் பல உதவியாளர்களை வைத்துக் கொண்டுதான் அவர் இசையமைக்கிறார் என்று. அதனால்தான் அந்தக் காலத்துப் பாடல்கள் அந்த அளவுக்கு நன்றாக இருந்தனவோ? இப்போதுதான் உண்மையான இளையராஜாவை நாம் காண்கிறோமா? இது உண்மையில்லை என்றிருக்கவெண்டும் என்றுதான் எனது மனம் ஏங்குகிறது.
உங்கள் ஒலிபரப்பு நன்றாக இருக்கின்றது, பிரபா.
வைசா
oru paadume pidikella prabanna :-((( MUNI pada paadukal paravai ilai pola iruku.
appuram ungada voice periya aakalda voice maathiri iruku :-))
மலைநாடான், வைசா, மற்றும் சினேகிதி வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்
வைசா
அந்தக் காலத்து ராஜாவின் பாட்டு கேட்டு வளர்ந்த நமக்கு இந்தக் காலத்து ராஜாவை ஏற்க மறுக்கிறது.
சினேகிதி
முனி படப்பாடல்களை விட உன்னாலே உன்னாலே படப்பாடல்கள் கேட்கலாம். பெரிய ஆளின் குரலோ நமக்கு ;-)
\\முனி படப்பாடல்களை விட உன்னாலே உன்னாலே படப்பாடல்கள் கேட்கலாம். \\
yea enakum உன்னாலே உன்னாலே படப்பாடல்கள் ellam pidikum " muthal muthalaga" is ma fav...appuram pachakilli muthucharam padathilaum nalla paadalgal iruku prabanna.
Post a Comment