Pages

Tuesday, March 10, 2026

தக்காளி சீனிவாசன்

தக்காளி சீனிவாசன்



ஒரு தயாரிப்பாளராக இவர்கள் வருங்காலத் தூண்கள், நாளைய மனிதன், அதிசய மனிதன் உள்ளிட்ட படங்களில் இயங்கிய வகையில் எண்பதுகளின் தமிழ் சினிமா உலக ரசிகர்கள் மறக்காத அடையாளம்.

சூரசம்ஹாரம் உட்பட நடிகராகவும் மிளிர்ந்தவர், கவர்ச்சிகரமான தோற்றம். இன்னும் வாய்ப்புகள் விசாலமாக அமைந்திருக்க வேண்டும்.

ஜென்ம நட்சத்திரம் உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார்.

பிரேமி - ஶ்ரீனி இரட்டை இசையமைப்பாளர்களில் ஒருவராக அவர் கொடுத்த பாடல்கள் தனித்துவமானவை.

குறிப்பாக நாளை மனிதன், வலது காலை வைத்து வா பாடல்கள்.

சாய் வித் சித்ராவில் இவரைப் பேட்டி எடுக்கத்  தொடர்பு கொள்ள முடியவில்லை என்று சித்ரா லட்சுமணன் அவர்கள் சொல்லியுள்ள நிலையில் அவரின் இழப்பு அதிர்ச்சிகரமானது.

இன்று (மார்ச் 10) நம்மை விட்டு மறைந்த தக்காளி சீனிவாசனுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் 🙏





0 comments: