ராதிகாவின் படமொன்று வரும் சூழலில், அவரோடு இணைந்து நடித்து வெளிவராமல் போன "சித்திரச்சோலை" படத்தின் நாயகன் பாக்யநாதனின் இறப்புச் செய்தி கிடைத்திருக்கிறது. நேற்று பெப்ரவரி 25 ஆம் திகதி அவர் மாரடைப்பால் காலமானர் என்ற செய்தியை உண்மைத்தமிழன் அண்ணன் பகிர்ந்திருக்கிறார்.
பாக்யநாதன் குள்ளத் தோற்றத்தில் ராதிகா ஜோடியாக அப்போது "சித்திரச்சோலை" படம் தொடங்கிய அறிவிப்பு வந்ததோடு சரி.
எஸ்.ஏ.சந்திரசேகரனின் "நெஞ்சினிலே" படக் கதை இவர் பங்கு. பரபரப்பாக அப்போது பேசப்பட்டது. அப்படத்தில் பாடலும் எழுதி இருக்கிறார்.
விஜய் பாடிய பாடல் "தங்க நிறத்துக்குத்தான் தமிழ் நாட்டை எழுதித் தரட்டுமா" இவரின் கைவண்ணம் தான்.
சத்யஜோதி பிலிம்ஸ் இன் "என்றும் அன்புடன்" முரளி, ஹீரா நடிப்பில் இவர் இயக்கியது. பலமுறை பார்த்து ரசித்திருக்கிறேன்.
அந்தப் படத்தில் பாக்யநாதன் எழுதிய பாடல் ஊர் நினைவுகளை மட்டுமல்ல இனிமேல் அவர் நினைவையும் சுமந்து வரும்.
அந்தப் பாடல் இதுதான்
துள்ளித் திரிந்ததொரு காலம்
பள்ளிப் பயின்றதொரு காலம்
காலங்கள் ஓடுது
பூங்கொடியே பூங்கொடியே


0 comments:
Post a Comment