Pages

Wednesday, September 4, 2024

தயாரிப்பாளர் மோகன் நடராஜன் மறைந்தார் 🙏

“ஶ்ரீ ராஜகாளியம்மன் எண்டர்பிரைசஸ் வழங்கும்”

என்ற தயாரிப்பு நிறுவன அடையாளத்தை எண்பதுகள், தொண்ணூறுகளின் தமிழ்த் திரை ரசிகர்கள் அவ்வளவு தூரம் மறந்து விடமாட்டார்கள்.

அதையும் தாண்டி அந்த நிறுவனத்தின் சக தயாரிப்பாளர் தரங்கை வி.சண்முகத்துடன் ஒரு தயாரிப்பாளராக அன்றி, வில்லனாகவும் பரிணமித்தவர் மோகன் நடராஜன்.

இயக்குநர் வேந்தம்பட்டி அழகப்பனின் “பூக்களைப் பறிக்காதீர்கள்” படத்தைத் தயாரித்த வெற்றியோடு,

நடிகர் பிரபுவுக்குத் திருப்புமுனை வெற்றியாக அமைந்த “என் தங்கச்சி படிச்சவ” படத்தைத் தயாரித்தார். இது பி.வாசு தனியாக இயக்கிய படம் என்றதோடு இசையமைப்பாளர் கங்கை அமரனின் 100 வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரபு ராசியால் தொடர்ந்து அவரை வைத்து  பிள்ளைக்காக,  கிழக்குக் கரை, மறவன்

ஆகிய படங்களையும் தயாரித்தனர். இவற்றில் கிழக்குக் கரை படம், சின்னத்தம்பியின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து வெளிவந்ததும் குறிப்பிடத்தக்கது.

சத்யராஜின் நடிப்பில் வேலை கிடைச்சுடுச்சு,

அர்ஜீன் நடிக்க

எங்க அண்ணன் வரட்டும்,

புதுமை இயக்குநர் ஶ்ரீதர் இயக்க

இனிய உறவு பூத்தது,  

விஜயகாந்த் நடித்த பதவிப் பிரமாணம்

அருண்பாண்டியனின் கோட்டை வாசல்

சரத்குமாரின் சாமுண்டி

சூர்யாவின் வேல்

அஜித் நடிப்பில் ஆழ்வார்

விஜய் நடிப்பில் கண்ணுக்குள் நிலவு

என்று நீண்டு செல்லும் படங்களை “ஶ்ரீ ராஜகாளியம்மன்” தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரித்த பங்காளிகளில் ஒருவர்.

தன் வில்லத்தன நடிப்பால் வெளியாரின் ஏராளம் படங்களில் கூட நடித்துத் தன் அடையாளத்தைப் பேணியவர்.

ஒரு நீண்ட இயக்கம் கொண்ட தயாரிப்பு நிறுவனத்தை நடத்திய மோகன் நடராஜனின் படப் பட்டியலை எந்த இணையத் தளமும், விக்கிப்பீடியா உட்பட சேமிக்கவில்லை. அவர் வாழும் காலத்திலும் அவரின் திரைப்பட அனுபவங்கள் பதியப்படவில்லை.

மோகன் நடராஜன் தன் 71 வது வயதில் நேற்று மறைந்து விட்டார்.

கானா பிரபா

0 comments: