Pages

Wednesday, February 21, 2024

இலங்கை இந்திய வானொலிகளில் கோலோச்சிய குரலோன் பினாகா கீத்மாலா" புகழ் அமீன் சயானி விடை பெற்றார்


றேடியோ சிலோன் காலத்து வானொலி உலகின் பொற்கால நாயகர்களில் ஒருவர் அமீன் சயானி தனது 91 வது வயதில் பெப்ரவரி 20 ஆம் திகதி விடைபெற்றிருக்கிறார்.

1952 ஆம் ஆண்டு தொடங்கி இலங்கை வானொலியிலும், பின்னர் 1989 ஆம் ஆண்டு முதல் 1988 ஆம் ஆண்டு வரை இந்திய வானொலியின் "விவித் பாரதி" வர்த்தக ஒலிபரப்பிலும் இந்த பினாகா கீத்மாலா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிப் பெரும் புகழோடு விளங்கியவர்.

வாராந்தம் தலை சிறந்த பத்து ஹிந்திப் பாடல்களின் அணிவகுப்பாக அமைந்த அந்த நிகழ்ச்சியைத் தமிழில் இசை அணித்தேர்வு என்று இலங்கை வானொலியும் அமைத்திருந்தது.பினாகா கீத்மாலாவுக்கு மில்லியனுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் இருந்தார்கள். 






வாணி ஜெயராம் அவர்களை நான் பேட்டி கண்ட போது,

தான் ஹிந்திப் பாடல்களைப் பாடவேண்டும் என்ற இலட்சியத்துக்குக் காரணமாக அமைந்த தன் இளம் பிராயத்தில் றேடியோ சிலோன் இல் புதன் கிழமைகள் தோறும் ஒலிபரப்பான ஹிந்திப் பாடல்கள் பினாகா கீத் மாலா நிகழ்ச்சி, அந்த நிகழ்ச்சியில் பின்னர் தன் ஹிந்திப் பாடலான போலாரே பாடல் 16 வாரங்கள் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து ஒலிபரப்பானதும் கனவு பலித்ததும், தமிழ்ப் பாடல்களை றேடியோ சிலோன் கவி நயத்தோடு தொகுத்து அளித்ததை நெகிழ்வோடு பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

"சகோதர சகோதரிகளே!" என்று விளித்துத் தன் நிகழ்ச்சிகளை ஆரம்பிக்கும் அமீர் சஹானி 54,000 க்கும் மேற்பட்ட வானொலிப் படைப்புகள் செய்த அசுர சாதனையாளர். 

கானா பிரபா

21.02.2024

1 comments:

கீதமஞ்சரி said...

விவித்பாரதியின் வர்த்தக ஒலிபரப்பில் நான் கேட்டு ரசித்த 'பினாக்கா கீத்மாலா' என்ற வசீகரக் குரலும் நிகழ்ச்சியும் இரண்டு நாட்களுக்கு முன்பு தற்செயலாக நினைவுக்கு வந்துபோனது. காலத்தால் அழியாத அந்தக் குரலுக்குரிய சாதனையாளர் பற்றியும் அவரது மறைவு பற்றியும் இப்போதுதான் அறிகிறேன். மிக்க நன்றி.