"மழை தருமோ என் மேகம் மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்" https://www.youtube.com/shared?ci=uYhd165mEwM பாட்டைக் கேட்டதுமே "அடடா இளையராஜா என்னமா இசையமைத்திருக்கிறார்" என்று என் காது படச் சொன்னவர்கள் உண்டு. இன்னும் அப்படியே நம்புபவர்களும் உண்டு. ஆனால் அந்தப் பாடல் இடம்பெற்ற "மனிதரில் இத்தனை நிறங்களா" படத்தின் இசையமைப்பாளர் ஷியாம். இந்தப் பாடலில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களோடு பின்னணியில் ஒலிக்கும் பெண் குரல் எஸ்.பி.சைலஜாவுக்கு இதுவே முதல் பாடலாக அமைந்தது. இதே படத்தில் "பொன்னே பூமியடி" http://youtu.be/5rfli7_pHmE அந்தக் காலத்து றேடியோ சிலோன் நினைவுகளைப் பலருக்குக் கிளப்பி விடும் அழகான பாட்டு. எஸ்.ஜானகியும் வாணி ஜெயராமும் பாடியிருப்பார்கள்.
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுடைய இசைப் பட்டறையில் விளங்கிய வாத்திய விற்பன்னர் சாமுவேல் ஜோசப் தான் இந்த ஷியாம்.
நாடக உலகில் இருந்து வந்தாலும் எண்பதுகளில் தன் படங்கள் ஒவ்வொன்றையும் சற்று மாறுதலான வடிவத்தில் கொடுத்துக் கவனிக்க வைத்தார் இயக்குநர் மெளலி.
"ஆனந்த தாகம் உன் கூந்தல் பூக்கள் சூடுமே" https://www.youtube.com/shared?ci=IjUQXzrKp0Q இந்தா இன்னொரு பாட்டு வானொலி நினைவுகளைக் கிளப்ப என்று வந்து சொல்லும் அந்தப் பாட்டு மெளலி இயக்கத்தில் ஷியாம் இசையில் தீபன் சக்ரவர்த்திக்குப் பேர் கொடுத்த முத்து, கூடப் பாடியவர் எஸ்.ஜானகி.
இதே படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம் பாடும் "இவள் தேவதை" https://www.youtube.com/shared?ci=xHmCTl5q3Qk பாடலில் ஷியாமின் வயலின் முத்திரை இருக்கும்.
இந்தப் பாடல்கள் இடம் பிடித்த வா இந்தப் பக்கம் படமும் ரசிக்கும் வண்ணமிருக்கும்.
"காதல் கனவுகளே நீராடும் நினைவுகளே" (எஸ்.ஜானகி & எஸ்.பி.பாலசுப்ரமணியம்)
https://www.youtube.com/shared?ci=2H4fL11Nthc என்ற அட்டகாஷ் பாட்டு இயக்குநர் மெளலியோடு இசையமைப்பாளர் ஷியாம் கூட்டமைத்துக் கொடுத்தது "நன்றி மீண்டும் வருக" படத்துக்காக.
இதே கூட்டணி ஒரு புல்லாங்குழல் அடுப்பூதுகிறது படத்திலும் இணைந்தனர்.
தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த இசையமைப்பாளர் ஷியாமை உச்சத்தில் வைத்துக் கொண்டாடியது என்னவோ மலையாளத் திரையுலகம் தான். குறிப்பாக எண்பதுகளில் உச்ச நாயகர்களது பல படங்களில் இவரின் இசை வண்ணம் தான்.
மோகன்லாலின் நாடோடிக் காத்து படம் தமிழில் பாண்டியராஜன் நடிக்க கதா நாயகன் என்றான போது மலையாளத்தில் ஷியாம் இசைத்த "வைசாக சந்தே"
https://www.youtube.com/shared?ci=LznbrMhDoVQ
பாடலின் மெட்டைப் பயன்படுத்தி "பூ பூத்தது யார் பார்த்தது" https://www.youtube.com/shared?ci=Ng-TANVTYpE என்று இசையமைப்பாளர் சந்திரபோஸ் கொடுத்தார்.
இசையமைப்பாளர் ஷியாம் மலையாளத் திரையுலகில் கொடுத்த பங்களிப்பைப் பற்றி எழுதவே பல பக்கங்கள் தேவை.
இசையமைப்பாளர் ஷியாம் இன் சாகித்தியம் குறித்த ஒரு மலையாள இசை விபரணச் சித்ரம்
https://www.youtube.com/shared?ci=vK0bbFlOT40
4 comments:
ஒரு வாரிசு உருவாகிறது படத்துக்கு இசை விஸ்வனாதன்.
மெல்லிசை மன்னர்களுக்குள் பிரிவுரசல் எழுந்த காலகட்டங்களில் டி.கே.இராமமூர்த்திக்கு மாற்றாக வயலின் வாசிக்க வந்தவர் ஷியாம். இப்படியாக கர்ணன் திரைப்படத்தில் இவரது இசைப்பயணம் தொடங்கியது என்று மேடையில் இவர் கூறியிருக்கிறார். சிறந்த திறமைசாலி. மெல்லிசை மன்னரோடு நெருங்கிப் பணிபுரிந்தும் அவருடைய சாயலையைத் தொடராமல் இருந்த தனித்துவம் கொண்டவர். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அத்தனை பாடல்களும் எனக்கும் பிடித்தமானவை.
ஒரு சிறு தகவற்பிழை. மாற்றிவிடுங்கள். ஒரு வாரிசு உருவாகிறது படத்தின் இசை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன். இனிய பாடல்கள் கொண்ட குடும்பச்சித்திரம்.
The Troller & ஜி.ரா
மிக்க நன்றி, அதைத் திருத்தி விட்டேன்.
எஸ். பி. சைலஜாவின் முதல் பாடல் பொண்ணு ஊருக்கு புதுசு படத்தில் இடம் பெறும் 'சோலைக்குயிலே ' பாடல்.
Post a Comment