Pages

Thursday, October 15, 2015

"மனசோடு பாடிய பெண் குயில்கள்" இசைஞானி இசையில்

"வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்துப் பாடலை"

இன்றைய காலைப் பொழுதின் ரயில் பயணத்தில் என் காதில் அமர்ந்து கொண்ட அந்த வரிகளுக்குச் சொந்தக்காரி "மாலையில் யாரோ மனதோடு பேச". ஞாயிற்றுக்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் சிங்கப்பூர் ஒலி வானொலியின் இளையராஜாவின் பாடல்கள் இசை விருந்தை ஒலிப்பதிவு செய்து கேட்ட போது இந்தப் பாடலும் வந்து சேர்ந்தது.

நம் சினிமாவின் அழகியலே உணர்வுகளுக்குப் பாடல் வழியே அர்த்தம் கற்பிப்பது. அதுவும் காதல் வயப்பட்ட பெண்ணின் மனநிலையை ஆதி முதல் வித விதமான பாட்டுச் சித்திரங்களாக அழகுறத் தந்திருக்கிறார்கள். 

அந்த வகையில் "மாலையில் யாரோ மனதோடு பேச" எனது சிந்தனையைக் கிளறி இசைஞானி இளையராஜாவின் இசையில் முன்னணிப் பாடகிகள் பாடிய தனிப்பாடல்களில் தேர்ந்தெடுத்தவற்றை மனதில் ஓட்டிப் பார்த்தேன். இவற்றில் ஒரே அலைவரிசையில் வந்து சேரும் பாடல்களாகப் பதினாறு பாடல்கள் திரண்டன. இந்தப் பாடல்களில் மெதுவான ஓட்டமும் உண்டு இலேசான துள்ளிசையும் உண்டு. ஆனால் இவை எல்லாவற்றையுமே காதல் வயப்பட்ட பெண் தனக்குள் பாடி இன்பம் சுகிக்கும் உணர்வின் அலையாகவே ஒரு சேரப் பார்க்கிறேன். இங்கே இசையும் சேர்ந்து அந்தப் பெண்ணின் உணர்வின் வடிகாலாக அமைகிறது.

ஒரு சூழலுக்குப் பொருந்தக் கூடிய வகையில் ஒவ்வொரு பாடகியும் என்ன மாதிரிப் பாடியிருப்பார்கள் என்ற சின்னக் கற்பனையையும் ஏற்படுத்திப் பார்த்தேன். காட்சி வடிவம் கண்ட போது சிலது முரணான சூழலுக்கு அவை படம் பிடிக்கப்பட்டாலும் இந்த எல்லாமுமே ஒரே பெண்ணின்  தனக்குள் மட்டும் பகிர்ந்து கொண்டாடும் உணர்வுப் பெருக்காய் ஒரே நதியில் சங்கமிக்க, வீடு நோக்கிப் பயணிக்கிறேன் இதோ இந்தப் பாடல்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டே. 
இதுவும் இன்னொரு ரயில் பயண ஆக்கம்.

1. மாலையில் யாரோ மனதோடு பேச - ஸ்வர்ணலதா (சத்ரியன்)
 http://www.youtube.com/watch?v=QwS3i0_iLOg&sns=tw

2. ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் -  சித்ரா (புன்னகை மன்னன்)
 http://www.youtube.com/watch?v=OrV5yxTDsRI&sns=tw

3. ராசாவே உன்னை நம்பி- எஸ்.ஜானகி (முதல் மரியாதை)
 http://www.youtube.com/watch?v=lL-7q3g0k3k&sns=tw

4. காலைப் பனியில் ஆடும் மலர்கள் - சுஜாதா (காயத்ரி)
 http://www.youtube.com/watch?v=hcFwEAkcBxw&sns=tw

5. அடிப் பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை - ஜென்ஸி (முள்ளும் மலரும்)
  http://www.youtube.com/watch?v=Uje_MqHKYEE&sns=tw

6. ஆனந்த ராகம் கேட்கும் காலம் - உமா ரமணன் (பன்னீர் புஷ்பங்கள்)
 http://www.youtube.com/watch?v=_j3goSKLjaw&sns=tw

7. ராசாவே உன்னை காணாத நெஞ்சு
(பி.சுசீலா (வைதேகி காத்திருந்தாள்
  http://www.youtube.com/watch?v=nhpo86rMDlQ&sns=tw

8. என்னுள்ளில் எங்கோ - வாணி ஜெயராம் 
(ரோசாப்பூ ரவிக்கைக்காரி)
 http://www.youtube.com/watch?v=jnZ2gPfkxoo&sns=tw

9. ராசாவே உன்னை நான் எண்ணித்தான்
(எஸ்.பி.சைலஜா (தனிக்காட்டு ராஜா)
 http://www.youtube.com/watch?v=D3XWdfLBUM8&sns=tw

10. பூவே செம்பூவே - சுனந்தா (சொல்லத் துடிக்குது மனசு)

11. எங்கிருந்தோ அழைக்கும் - லதா மங்கேஷ்கர் (என் ஜீவன் பாடுது)
 http://www.youtube.com/watch?v=0heiukbzv1E&sns=tw


12. தொட்டுத் தொட்டு - மின்மினி (உன்னை நினைச்சேன் பாட்டுப் படிச்சேன்)
 http://www.youtube.com/watch?v=vfzl0gkO58g&sns=tw

13.  பாட்டுச் சொல்லி பாட்டுச் சொல்லி - சாதனா சர்க்கம் (அழகி)
 http://www.youtube.com/watch?v=6NdExQZKNro&sns=tw

14. அலை மீது விளையாடும் - பவதாரணி (காதல் கவிதை)

16. கூட வருவியா - பெல்லா ஷிண்டே (வால்மீகி)

3 comments:

Unknown said...

அண்ணா இங்கு மீண்டும் ஸ்வர்ணலதாவை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி .... அவரை பற்றிய தனி தொகுப்பு கட்டுரையை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்....

மிக அருமையான தேர்வு உங்கள் வரிசை.... ஏதேதோ என்னோடு எல்லா காலங்களிலும் பயணி க்கும் அற்புதம்.....

தொட்டு தொட்டு பாடல் நிச்சயம் ஒரு நல்ல பாடல் அனேக பேருக்கு தெரியாத ஒரு பாடல்....
மொத்ததில் ஆக சிறந்த பதிவு...

உமா கிருஷ் said...

இப்படி பெண்ணின் மன உணர்வுகளை வெளிப்படுத்தும் female solo வாக நான் நிறைய சேகரித்து வைத்து இருக்கிறேன்..நான் அறியாத சில பாடல்களையும் கொடுத்தமைக்கு நன்றி..பூவே செம்பூவே சுனந்தா வெர்சன் என ஒன்று இருக்கிறது என்பதே இன்றுதான் தெரியும்..மிக மெல்லிய குரல் சுனந்தாவுடையது..அதனாலேயே மிகப் பிடிக்கும்..:)

யக்ஞரன் said...

சசிரேகா- வாழ்வே மாயமா