நேற்றிரவு 'தேனிசைத் தென்றல்' தேவா மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்களுடனான
உணவு விருந்துபசார நிகழ்வில் கலந்து கொண்டேன். அவ்வேளை தேவா அவர்களுடன் எனது மனப் பகிர்வையும், கையோடு கொண்டு போன 'தேனிசைத் தென்றல்' தேவா கொடுத்ததில் பிடித்த நூறு என்ற எழுத்துப் பகிர்வையும், நினைவுப் பரிசோடு அவரிடம் பகிர்ந்து கொண்டேன்.
தேவாவிடம் நான் பேசியதில் இருந்து சில பகிர்வு,
கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் போகும் இரவு பஸ் "கந்தன் இருக்குமிடம் கந்த கோட்டம்" என்ற உங்கள் கானா பாடலோடு தொடங்கியது. யாழ்ப்பாணத்தில் நான் இறங்கிய அந்த நாள் சைக்கிளை எடுத்துக் கொண்டு மளிகைக் கடைக்குப் போகும் போது ஒரு கலியாண வீட்டு ஒலிபெருக்கி "முத்து நகையே முழு நிலவே" என்று பாடியது. ஆகவே நீங்கள் இன்னமும் நம் கிராமங்களில் மறக்கடிக்கப்படாத இசையாக வாழ்கிறீர்கள்.
தேவா என்றால் கானா என்பதைத் தாண்டி நீங்கள் கொடுத்த மெலடி பாடல்கள் ஏராளம். ஒவ்வொரு படத்தில் இருந்தும் ஒவ்வொரு பாடல் என்று ஆசையாகக் கோத்து வைத்த நூறு பாடல் பகிர்வு இது.
தமிழ்த்திரையிசையில் தொண்ணூறுகள் தேவாவின் மகத்தான பங்களிப்பாக அமைந்தவை.
ஹரிஹரனுக்கு நீங்கள் கொடுத்த பாடல்கள் அளவுக்கு சிறப்பான பாடல்களை அதிகளவு வேறு யாரும் கொடுக்கவில்லை என்பது என் அபிப்பிராயம் என்று சொல்லி முடித்தேன்.
"ஆகா பட்டியலைத் தாருங்களேன் நானே மறந்த பாடல்களை நினைவுக்குக் கொண்டு வர உதவியா இருக்கும்"
என்று சொல்லி ஆசையோடு பெற்றுக் கொண்டார் தேவா.
3 comments:
கானா சார்,
அந்த பட்டியலை எங்களுக்கும் தரவும். தேவா அவர்களின் பாடல்கள் கேட்க கேட்க இசைஞானியின் இசை போல இருக்கும். எனக்கு பிடித்த பாடல் காலமெல்லாம் காதல் வாழ்க..காதல் கோட்டை பாடல்.
ஆமா பிரபா. VSKumar சொன்னதையே நானும் சொல்கிறேன்.
நண்பர்களே
இதுதான் அந்தப் பட்டியல்
http://www.radiospathy.com/2013/11/blog-post_21.html
Post a Comment