Pages

Tuesday, October 28, 2014

பாடல் தந்த சுகம் : ஒரு போக்கிரி பார்க்கிற பார்வை தான்

தொண்ணூறுகளில் என் ஆஸ்தான ஒலிப்பதிவுக்கூடமாக இருந்தது ஷண் றெக்கோர்டிங் பார். அந்தக் காலத்தில் ஒலிநாடாவில் பாடல் பதிவு செய்து கேட்ட அனுபவங்களை எல்லாம் சொல்லி மாளாது.
ஷண் றெக்கோர்டிங் பார் யாழ்ப்பாண நகர பஸ் ஸ்ராண்டின் நடு நாயகமாக இருந்த நெட்டை மரப்பலகை மாடியில் இருந்து பதவி உயர்வு பெற்று யாழ்ப்பாணம் நவீன சந்தைக் கட்டடத்துக்கு உள்ளே இருந்த கடைத்தொகுதியில் ஒரு அறையைப் பிடித்துக் கொண்டது. ஒதுக்குப்புறமான இடத்தில் இருந்த அந்த ஒலிப்பதிவுக் கூடத்துக்கு வழி காட்டுவதே அப்போது வந்த இளையராஜாவின் படப்பாடல்களே.

ஸ்பீக்கர் வழியாக அந்த இசை நவீன சந்தைக் கட்டடத்தைத் தாண்டி வழிந்தோடும். அப்படித்தான் ஒருநாள் புதுப்பாட்டு ரெக்கோர்டிங் செய்ய வேண்டும் என்று ஷண் றெக்கோர்டிங் பார் நோக்கிப் படையெடுத்த என்னை வரவேற்றது "ஒரு போக்கிரி ராத்திரி" பாடலின் முகப்பு இசை.  ஒலிப்பதிவுக்கூடத்துக்குப் போய் இறங்கிய கையோடு முதலில் பாடல் பதிவு செய்ய எழுதிக் கொடுக்கும் தாளில் இந்தப் பாடலை எழுதிக் கொடுத்தேன். அந்த அனுபவத்தை இன்னும் தாண்டமுடியவில்லை இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம்.

தொண்ணூறுகளில் சூப்பர் ஹிட் ஜோடிகளில் ஒன்றாக மனோ - ஸ்வர்ணலதாவையும் கண்டிப்பாகக் குறிப்பிட வேண்டும். இதை முன்னுறுத்தி ஒரு தொகுப்பு வருகின்றது என்பதை இப்போதே முன்னோட்டமாகச் சொல்லிக் கொள்கின்றேன். பாடலின் ஆரம்பத்தில் ஆர்ப்பரிக்கும் இசையோடு வாலியின் வாலிப வரிகளுக்கு இசைஞானி கொடுத்த மெட்டின் நளினமே தனியழகு. சரணத்தில் ஒவ்வொரு அடிகளுக்கும் ஆமோதிக்குமாற் போல புல்லாங்குழல் வருடிவிட்டு வழி விடும் பாடகர்களைப் பாட.

 நாளை அக்டோபர் 29 ஆம் திகதி பிறந்த நாளாக அமையும் கவிஞர் வாலி அவர்கள் தனது அறுபதாவது வயதில் எழுதிய பாடல் இது என்பதைச் சொல்லித்தான் நம்ப வைக்க முடியும்.
நடிகர் ராதாரவி "கங்கைக்கரைப் பாட்டு", "இளைஞர் அணி" போன்ற படங்களைத் தயாரித்திருக்கின்றார். "இது நம்ம பூமி" தான் சார்ந்த திரையுலக அங்கத்தவர்களுக்காக, அவர்கள் சார்பில் தயாரித்த படம். வருஷம் 16 இற்குப் பின்னர் கார்த்திக் - குஷ்பு ஜோடியை மகத்துவப்படுத்திய
இன்னொரு படம் இது, பி.வாசு இயக்கியது. ஒரு போக்கிரி ராத்திரி பாடலே வருஷம் 16 படத்தில் வரும் பூப்பூக்கும் மாசம் தை மாசம் பாடலின் காட்சியமைப்போடு நெருங்கி ஆரம்பிக்கும்.

படத்தில் எல்லாப் பாடல்களுமே சூப்பர் ஹிட் ரகம். இதே படத்தில் கே.ஜே.ஜேசுதாசுடன் இணைந்து ஸ்வர்ணலதா பாடிய "ஆறடிச் சுவரு தான்" பாடலை மறக்கமுடியுமா?

இளமைக் காலத்து நினைவுகளை அந்தக் காலகட்டத்தில் கேட்ட பாடல்கள் தான் பின்னணி இசை போல மீட்டிப் பார்க்கும். "ஒரு போக்கிரி ராத்திரி பார்க்கிற பார்வை தான்" எனக்குத் தவிர்க்க முடியாத பின்னணி இசையாக2 comments:

தனிமரம் said...

உண்மையில் ராஜாவின் கை வண்ணம் என்பதா இல்லை பாடலின் கவி வரி என்பதா படம் இலங்கையில் அதிகம் ஓடியது இது நம்ம பூமி இன்னும் மற்றக்கமுடியாது. கார்த்திக் வயலின் மீட்டும் காட்சி இன்னும் நினைவில்.இது நம்ம பூமியில் நடிகர் பட்டாளம் கூடி கும்மி அடிச்சது இப்ப ஹாரியின் ஸ்டைல் பூஜை வரை.

Kaarthik said...

This song was introduced to me via 365 Raja Quiz conducted by Rex Arul. Though I have listened to other songs from this movie this was new to me. Since then it has become my 2nd fav song of this album after vAnamazhai. The usage of shenai is so beautiful. In 90s Mano-Swarnalatha pair was like SPB-Janaki of 80s.

Thanks for sharing :-)

-Kaarthik Arul