Pages

Saturday, April 12, 2014

"காதில் அடைத்துக் கொள்ளப் பஞ்சும், தலைவலி மாத்திரையும் கொடுத்து இசை நிகழ்ச்சி நடத்தினோம்" - அபஸ்வரம் ராம்ஜி

எண்பதுகள் காலப்பகுதியில் வாழ்ந்தவர்களுக்கு "அபஸ்வரம்" ராம்ஜி அவர்கள் குறித்துப் பரவலான அறிமுகம் இருக்கும். திரையிசைப்பாடல்களை அரங்கேற்றும் பிரபல மெல்லிசைக் குழுக்களுள் இவருடைய அபஸ்வரம் குழுவும் வெகுஜன அந்தஸ்தைப் பெற்றிருந்தது. ஈழத்தமிழகத்தில் வாழ்ந்திருந்தாலும், ராம்ஜி குறித்து நானும் அறியக் கூடிய சந்தர்ப்பங்கள் கிட்டியிருந்தாலும், பலவருடங்கள் கழித்து இவரைப் பேட்டி எடுப்பேன் என்றெல்லாம் அப்போது கனவிலும் எண்ணியிருக்கவில்லை.

இசைத்துறையில் கடந்த நாற்பது வருடங்களாக இயங்கி வரும் அபஸ்வரம் ராம்ஜி அவர்கள், இப்போது அபஸ்வரம் என்ற இசைக்குழுவை நிறுத்தி வைத்து "இசை மழலை" எனும்  புது வடிவ மேடை இசை நிகழ்ச்சிகளை இயக்கி வருகின்றார். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் ராம்ஜி அவர்களை வானொலிப் பேட்டி எடுத்திருந்தேன்.
ஏப்ரல் 1, 1976 ஆம் ஆண்டு முட்டாள் தினத்தில்  "அபஸ்வரம் இசைக்குழு ஆரம்பித்த அந்த நாளில் காதில் அடைத்துக் கொள்ளப் பஞ்சும், இடைவேளையின் போது தலைவலி மாத்திரையும் கொடுத்து இசை நிகழ்ச்சி நடத்தினாராம். தனது அபஸ்வரம் இசை நிகழ்ச்சியை ஆரம்பித்ததில் இருந்து இசைஞானி இளையராஜா குறித்தும் குறிப்பாக ராஜாவின் பின்னணி இசைக்காக சிகப்பு ரோஜாக்கள் படம் பார்க்கப் போன கதை உள்ளிட்ட பல்வேறு அனுபவங்களை இந்தப் பேட்டி வழியாகப் பகிர்கின்றார். தமிழத் திரையுலகம் கண்ட முன்னோடி இயக்குனர்களில் ஒருவரான கே.சுப்ரமணியம் அவர்களின் மகன் இவர்.
இன்று முன்னணிப்பாடகர்களாக விளங்கி வரும் பல  இளம் பாடகர்களின் அத்திவாரம் "இசை மழலை" எனும் ராம்ஜியின் இசைக்குழு வழியாகப் போடப்பட்டது. இன்று இவரின் பிறந்த தினம் கூட. எனவே ராம்ஜி அவர்களின் பிறந்த நாள் சிறப்புப் பகிர்வாக இந்தப் பேட்டியைப் பகிர்கின்றேன்.




Download பண்ணிக் கேட்க



புகைப்படங்கள் உதவி: ஹிந்து நாளேடு

1 comments:

Anonymous said...

இவரின் drum இசை மிகவும் பரவலாக பேசப்பட்டது நினைவில் உண்டு