Pages

Sunday, January 20, 2013

நாடோடி தென்றல் பின்னணி இசைத் தொகுப்பு

நாடோடி தென்றல் திரைப்படம் வெளிவந்து இந்த ஆண்டோடு 21 வருடங்கள் ஆகிவிட்டன. இந்தப் படம் அப்போது தொடங்கப்பட்டபோது கிளம்பிய பரபரப்புக்கள் இன்னும் ஞாபக அடுக்குகளில் இருக்கின்றன. வழக்கமான பாரதிராஜாவின் படம் என்ற கணக்கில் இல்லாது இந்தப் படம் குறித்த எதிர்பார்ப்பு இன்னும் அதிகப்படப் பல அம்சங்கள் இருந்தன. அதில் தலையாயது, இசைஞானி இளையராஜாவே படத்தின் கதையை எழுதியிருந்ததோடு, ஆங்கிலப்பாடலை மட்டும் விஜி எழுத மற்றைய அனைத்துப் பாடல்களையும் எழுதி வழங்கியிருந்தார். கூடவே எழுத்துலக சூப்பர் ஸ்டார் சுஜாதா அவர்கள் ராஜாக்களின் கூட்டணியோடு கைகோர்த்து வசனம் எழுதியிருந்தார். இன்னொரு குறிப்பிடத்தக்க விடயம், பிரபல ஓவியர் மணியம் செல்வன் அவர்களே கலை இயக்குனராக.
இந்த முக்கியமான விஷயங்களோடு, அப்போது வெற்றிகரமான நாயகனாக வலம் வந்த நவரச நாயகன் கார்த்திக் நீண்ட இடைவேளைக்குப் பின் தன் குருநாதர் பாரதிராஜா இயக்கத்தில் நடித்திருந்தார். கூடவே அவரின் இன்னொரு அறிமுகம் பாண்டியனுக்கு ஒரு குணச்சித்திர வேடம். பாரதிராஜாவின் ர வரிசை நாயகிகளில் "ரஞ்சிதா" இந்தப்படத்தில் அறிமுகமாகியிருந்தார். புது நெல்லு புது நாத்து மூலம் அறிமுகமாகி வில்லனாக, நாயகனாக மாறிய நெப்போலியன் தன் குருநாதருக்காக கெளரவ வேடத்தில் நடித்திருந்தார். ஜனகராஜும் வழக்கம் போல, இவர்களோடு கிருபா என்ற பிரான்ஸ் நாட்டு வெள்ளையினப் பெண்மணியும் அறிமுகமாக நடித்திருந்தார்.
 இன்றும் பிரபல பாடலாசிரியராகத் தனித்துவத்தோடு இயங்கும் அறிவுமதி அவர்கள் உதவி இயக்குனர்களில் ஒருவராக இந்தப் படத்தில் பணியாற்றியிருக்கின்றார்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், நகைத் தயாரிப்பாளர் குடும்பத்தைச் சேர்ந்த கார்த்திக், அவ்வூருக்கு வாத்து மேய்க்க வரும் கூட்டத்தின் இளமங்கை ரஞ்சிதா மேல் காதல் கொள்வதும், அந்த ஊரை நிர்வகிக்கும் துரையின் தங்கை கிருபா கார்த்திக் மேல் காதல் கொள்வதும், ரஞ்சிதாவின் முறைமாமன் பாண்டியன், வெள்ளைக்காரத் துரை ஆகியோர் கார்த்திக் இற்கு எதிராக எப்படி இயங்குகின்றார்கள் என்பதையும் வைத்து எழுதப்பட்ட கதை தான் இது. இசைஞானி இளையராஜா, பாரதிராஜா கூட்டணி சேர்ந்தாலே பாடல்கள் தனிச்சிறப்போடு விளங்கும், அந்த வகையில் இசைஞானி இளையராஜா, மலேசியா வாசுதேவன், ஜானகி, மனோ,சித்ரா,சுபா ஆகியோர் பாடியிருக்கிறார்கள். "ஒரு கணம் ஒரு யுகமாக" என்ற பாடலை இந்தப் படத்துக்காக இசையமைத்துப் பின்னர் படமாக்காமல் விட்டிருக்கிறார்கள். இந்தப்படத்தின் இசைப்பிரிப்பு வேலைகளில் நான் இறங்கியபோது, பாரதிராஜாவின் அறிமுகக்குரல் தவிர மொத்தம் 31 இசைத்துணுக்குகளைப் பிரித்தெடுத்திருக்கிறேன், இவை பாடல்கள் தவிர்ந்த பின்னணி இசை மட்டுமே. இதோ தொடர்ந்து கேட்டு, ரசித்து அனுபவியுங்கள்
 
 இயக்குனர் பாரதிராஜாவின் அறிமுக உரை
 

முகப்போட்ட இசை
 

இரவில் கள்ளத்தனமாக கார்த்திக் வாத்து மேய்ப்போர் கூடாரம் சென்று ரஞ்சிதாவைச் சந்திக்கும் நேரம்

கார்த்திக், ரஞ்சிதா காதல் அரும்பிய வேளை
 

 காதல் கவிதை பாடும் கார்த்திக்
 

குறும்பு செய்யும் கார்த்திக், வெள்ளைக்காரி கிருபாவை சந்திக்கும் போது

வெள்ளைக்காரரின் கோட்டையில் திருடிய எல்.பி இசைத்தட்டை ரஞ்சிதா தன் கைவிரலில் வைத்துச் சுழற்ற, மறைவாக இருந்து அந்த இசைத்தட்டிலிருந்து வருமாற்போல "மணியே மணிக்குயிலே" பாடலை கார்த்திக் தன் குரலில் பாடும்போது
 

ரஞ்சிதா கொண்டுவந்த சோற்றைப் பறித்துத் தின்னும் கார்த்திக், தொடரும் காதல் பரவசத்தில் இனிய இசை கலக்க
 

ரஞ்சிதாவின் முறைமாமன் பாண்டியன் கோபம்
 

வாத்துக்கூட்டத்தை வெள்ளைக்காரி கிருபா குறிவைத்துச் சுடும்போது வாத்து ஒன்று கொல்லப்படும் காட்சியும் தொடர்ந்த இசையும், கார்த்திக் தகராறு பண்ணுவதும்

வெள்ளைக்காரியின் வீட்டுக்கு இரவில் களவாக வரும் கார்த்திக்

கார்த்திக் மேல் அபிமானம் கொள்ளும் வெள்ளைக்காரி
 

வெள்ளைக்காரி தனக்கு ஆபரணம் செய்ய கார்த்திக் ஐ நாடும் போது

கார்த்திக் தன் கண்களால் வெள்ளைக்காரியின் உடல்வாகைப் பார்த்து ஆபரணத்துக்கு அளவு எடுத்தல்

ரஞ்சிதாவின் காதல் அறிந்து தண்டனை கொடுக்கும் முறைமாமன் பாண்டியன்

கார்த்திக் வீட்டுக்கு வந்து நகை செய்ய வரும் வெள்ளைக்காரி

கார்த்திக் மேல் காதல் கொள்ளும் வெள்ளைக்காரி
 

 காதல் சோகத்தில் ரஞ்சிதா
 

கார்த்திக் மேல் கொண்ட காதலால் வெள்ளைக்காரி முட்கள் கொண்ட மலையில் ஓடுதல்

காதலோடு பியானோ வாசிக்கும் வெள்ளைக்காரி
 

கோயில் திருவிழாவில் ரஞ்சிதாவைச் சந்திக்க வரும் கார்த்திக்கை வெள்ளைக்காரி காணும்போது, அதை மறைவாக இருந்து காணும் ரஞ்சிதா தவறாக எண்ணுதல்

 வெள்ளைக்கார துரையுடன் மோதும் கார்த்திக்
 

 காதல் சோகத்தில் ரஞ்சிதா, ஆறுதல் வார்த்தைகளோடு முறைமாமன் பாண்டியன், "யாரும் விளையாடும் தோட்டம்" பாடல் சித்ராவின் சோகக்குரலோடு
 

ரஞ்சிதாவின் சந்தேகத்தால் கவலை கொள்ளும் கார்த்திக் மலையிலிருந்து குதிக்கப் போதல்

 கார்த்திக்குடன் மோதும் பாண்டியன், தொடர்ந்து வெள்ளைக்காரத்துரையால் கொல்லப்படுதல், கொலைப்பழி கார்த்திக் மேல் விழுதல்
 

பாண்டியன் மரணச் சடங்கு ஆற்றில் மிதக்கும் சடலம்
 

பியானோ இசை மீட்கும் வெள்ளைக்காரி
 

நீதிமன்றில் சாட்சி சொல்ல ரஞ்சிதா வரும்போது, காதல் இசை சோக வடிவில் மாறி மீட்கப்படுகின்றது

வாத்துமேய்ப்போர் ஊரைக் காலி செய்தல்
 

நீதிமன்றத்தில் வெள்ளைக்காரி, கார்த்திக்கைக் காப்பாற்ற முனையும்போது

 சிறைச்சாலையில் இருந்து கார்த்திக் தப்பிக்கும்போது
 

மலர்ப்படுக்கையில் கிடத்தப்பட்டு ரஞ்சிதா ஆற்றில் இறக்கிவிடப்படுதல், தப்பி வரும் கார்த்திக் காணல், காதல் ஜோடி சேருகின்றனர், மணியே மணிக்குயிலே பாடல் இசையோடு 3.53 நிமிட இறுதி இசை வார்ப்பு
 

 

15 comments:

சி.பி.செந்தில்குமார் said...

SUPER , ILAIYARAAJAA ROCKS

சி.பி.செந்தில்குமார் said...

>>>>Your comment has been saved and will be visible after blog owner approval.

HI HI HI APPAAAAAAA TAKKKER

கானா பிரபா said...

அவ்வ்வ்வ் ;)

pudugaithendral said...

நாடோடித்தென்றல்.......

பள்ளத்தூர் காலேஜ்ல படிச்சுக்கிட்டு இருந்தப்ப அங்கதான் ஷூட்டிங் நடந்ததுன்னு ஒரே பரபரப்பா இருந்தது. பாரதிராஜா எங்க காலேஜ் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியதெல்லாம் கொசுவத்தி சுத்துது பாஸ்.

மணியே மணிக்குயிலே.. சூப்பர் பாட்டு

DiaryAtoZ.com said...

அருமையான பாடல்கள் கொண்ட படம். பழைய நினைவுகளை வரவழைத்துவிட்டீர்கள். நன்றி

கானா பிரபா said...

புதுகை பாஸ் வருகைக்கு நன்றி, பின்னணி இசையைக் கேட்டு அனுபவியுங்கள் :)

சுசி said...

அற்புதம் பாஸ் :))

கானா பிரபா said...

DiaryAtoZ.com said...

அருமையான பாடல்கள் கொண்ட படம். பழைய நினைவுகளை வரவழைத்துவிட்டீர்கள். நன்றி //

வருகைக்கு மிக்க நன்றி ;-)

விஜி said...

இந்த படம் தான் முதல் முதல் தோழிகளோட போன படம்..அன்றே ஸ்கூல் விளையாட்டு மிஸ்கிட்ட பிடிபட்ட நாள் :))

கோபிநாத் said...

தல இப்போதைக்கு உள்ளேன் ஐயா மட்டும் ;)) விரைவில்...

தனிமரம் said...

அருமையான பாடல்கள் இதில் ஒருக்கனம் ஒருயுகம் வராத கவலை இன்றும் எனக்குண்டு அருமையான இசைத் தொகுப்பு அண்ணா!

S Maharajan said...

வணக்கம் தல! வெகு நாட்களுக்கு பிறகு தங்கள் தளத்தில்.
அருமையான இசை துண்டங்கள் அனைத்தும் அருமை!
நன்றி தல!
வெகு விரைவில் தங்களிடமிருந்து "தளபதி"
பின்னணி இசை தொகுப்பை எதிர்பார்த்து.........

அன்புடன்
சு.மகாராஜன்

ReeR said...

அருமையான. இசைத் தொகுப்பு ...

நன்றி

www.padugai.com

THanks

கோபிநாத் said...

வெள்ளைக்காரியுடன் வரும் இசை எல்லாம் உங்க புண்ணியத்துல நல்லபடியாக ரசிச்சி கேட்க முடிஞ்சது...அதே போல கடைசி காட்சிகளுக்கு வரும் இசை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

வழக்கம் போல பல கோடி நன்றிகள் ;)

Anonymous said...

வணக்கம்

இன்று உங்களின் வலைத்தளம் வலைச்சரம் வலைப்பூவில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்பதற்கு இங்கே
http://blogintamil.blogspot.com/2013/02/blog-post_5.html


-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-